திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி

Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திவாகரன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழார்வன், தற்போதைய தலைவர் கிருஷ்ணன் மேனன், ராஜேந்திரன் ஆகியோர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் தெரிவித்தார், இதனையடுத்து கிருஷ்ணன் மேனன், ராஜேந்திரன் இதற்கு உடந்தையாக இருந்த சசிகலா சகோதரர் திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீடாமங்கலம் குற்றவியல் கோர்ட் நீதிபதி முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மூவரும் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்ற திவாகரன் மனுவை ஏற்றுக்கொண்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை