அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு; மேலும் 3 பேர் இன்று கைது !
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : பா. ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் மதுரையில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். இந்த 3 பேர் மீதும் வெடி பொருட்கள் வாங்குவது, மற்றும் சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011 ல் பா. ஜ., மூத்த தலைவர் அத்வானி, ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டார். அக்டோபர் மாதம் 28 ம் தேதி மதுரையில் இருந்து செங்கோட்டை வழியாக, கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். மதுரை - ராஜபாளையம் ரோட்டில், திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டியில் உள்ள பாலத்தின் கீழ், 7.5 கிலோ பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. உரிய நேரத்தில் ஒரு விவசாயி சொன்ன தகவலால் அத்வானி உயிர் தப்பினார்.

அடையாளம் தெரியாத சிலர் மீது, அத்வானியை கொலை செய்ய முயன்றதாக கொலை முயற்சி (307) மற்றும் வெடிபொருள் சட்டம் -4 மற்றும் 5ன் கீழ், திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் ஒரு தனிப்படையும், நக்சலைட்கள் எதிர்ப்பு படை உட்பட 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தொடர்ந்து வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஒருவரிடம் விசாரணை : குண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்தினம் இரவு, மூவர் ஒரு பைக்கிலும், தலா இருவர் இரண்டு பைக்குகளிலும், ஆலம்பட்டி பகுதியில் நடமாடியதாகவும், ஏழு பேரும் பேன்ட், சட்டை அணிந்திருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்வானி ரதயாத்திரையின் போது சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் வெடி பொருள் பேட்டரி வாங்கினர்: இந்நிலையில் , மதுரையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு : நெல்லுப்பேட்டையை சேர்ந்த தர்வீஸ் மைதீன் (45 ) , வில்லாபுரத்தை சேர்ந்த சையீது (33 ), முஸ்தாபா ( 30 ) ஆகியோர் அடங்குவர். இதில் முக்கிய குற்றவாளியான தர்வீஸ் போலீசாரால் தேடப்பட்டு வந்த போலீஸ்பக்ரூதீனின் சகோதரர் ஆவார். முஸ்தாபா என்பவர் ஈரோட்டில் இருந்து வெடிபொருட்கள் தயாரிக்க தேவையான பேட்டரிகளை வாங்கி வந்தார். தொடர்ந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sulaiman Badsha - Muscat,ஓமன்
27-மார்-201300:49:10 IST Report Abuse
Sulaiman Badsha அய்யா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒருத்தனை puducherila இருந்து பிடிச்சப்ப நான்தான் அத்வானி யாத்திரையின் பொது குண்டு வைத்தேன் என்று சொன்னான் போலீஸ் அதிர்ச்சி மேலும் தீவிர விசாரணைன்னு போட்டு இருந்தாங்க (இதே தினமலர்ல தாங்க) அது என்ன ஆச்சு இப்போ திடீர்னு இவங்கதான் குண்டு வச்சவங்கன்னு கைது பண்ணி இருக்காங்க எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
26-மார்-201316:24:48 IST Report Abuse
Krish தீவிரவாதத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்