IPL give in Jaya: No lankan players in Chennai IPL | சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஜெ., ‌கோரிக்கை ஏற்பு | Dinamalar
Advertisement
சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஜெ., ‌கோரிக்கை ஏற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஐ.பி.எல்., நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இலங்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெ,. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டசபையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பல்வேறு அம்சங்கள் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார். சமீபத்திய பார்லி., கூட்டத்தில் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்து , இதனை ஆதரிக்க வேண்டும் என குரல் கொடுத்து,அ.தி.மு.க., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ஆசிய தடகள போட்டி சென்னையில் நடத்தக்கூடாது என பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். நேற்று எழுதிய தனது கடிதத்தில் கொழும்புவில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும், இதனை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்நிலையில் இன்று வரும் ஏப்ரல் மாதம் ஐ.பி.எல்., போட்டிகள் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் பல நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் நடக்கும் போட்டியில் இலங்கை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். சென்னையில் 10 போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில் இலங்கை தரப்பில் மொத்தம் 13 வீரர்கள் பங்கேற்பர். இந்த போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று பிரதமருக்கு இன்று ( செவ்வாய்க்கிழமை ) ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழர்கள் கொந்தளிப்பு :


இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்களால் தமிழக மக்கள் கடும் கொந்தளித்துள்ளனர். தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கை வீரர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது. இந்த போட்டியில் வீரர்கள் மட்டுமல்லாது அம்பயர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்க கூடாது. இது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசு அனுமதிக்காது என்ற உறுதிமொழியை தமிழக அரசுக்கு அளித்தால்தான் மட்டுமே ஐ.பி.எல்., போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க முடியும். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.

இலங்கை முடிவு:


தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது பற்றி வீரர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.

திட்டமிட்டபடி போட்டி நடக்கும்: சுக்லா:


ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா, திட்டமிட்டபடி ஐ.பி.எல்., தொடர் நடக்கும். சூழ்நிலை பற்றி ஆராய்ந்து இலங்கை வீரர்களிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

இலங்கை வீரர்களுக்கு தடை:


இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக ஐ.பி.எல்., நிர்வாக கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்., அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: அகில தனஞ்செயா, நுவான் குலசேகரா
டில்லி டேர்டெவில்ஸ்: மகிளா ஜெயவர்த்தனே, ஜீவன் மென்டிஸ்
மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா
புனே வாரியர்ஸ்: ஆஞ்சலோ மாத்யூஸ், அஜந்தா மென்டிஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்: குசால் பெரேரா
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்: திலகரத்னே தில்சான், முத்தையா முரளிதரன்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (128)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asokaraj - Doha,கத்தார்
27-மார்-201310:49:15 IST Report Abuse
Asokaraj jagan - Chennai,இந்தியா- என்ன இழப்பு? உங்களுக்கா எங்களுக்கா IPL போட்டிகள் நடத்தவில்லைஎன்றால், மழை பெய்யாதா? கணத்த மழை பெய்துவிடுமா? நாடு சுடுகாடாகிவிடுமா? மாணவர்கள் படித்து அறிவாளியாகிவிடமாட்டர்களா? ஏதாவது நாம் தெரிந்துதான் பேசுகிறோமா? கிரிகட் தான் நமக்கு உயிர் மூச்சா? அன்பர்களே கொஞ்சமாவது யோசித்து இங்கு கருத்துக்களை பதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-மார்-201302:18:44 IST Report Abuse
மதுரை விருமாண்டி வேண்டுமென்றால், "சிங்கள அரசு அங்கு தமிழர்களின் உரிமையைப் பறித்து, அவர்களுக்கு செய்யும் கொடுமைகளை நான் ஆதரிக்கவில்லை. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கையெழுத்துப் போட்டு கொடுக்கும் இலங்கை விளையாட்டு வீரர்களை விளையாட அனுமதிக்கலாம்.. அத்தோடு நில்லாமல், அந்த அணியில் இந்திய வீரர்கள் உள்பட வேறு நாட்டவர்கள் இருந்தால், அவர்களிடமும் இந்த ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளலாம்.. பணம் பத்தும் செய்யும்.. ஐ.பி.எல் பணம் இதுவும் செய்யலாம்.. நாமும் அனுமதி கொடுத்தது போலும் ஆகி விட்டது.. இதை ஒப்புக் கொண்டு விளையாடுவதும், வராமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகவும் போய் விடும்..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-மார்-201302:09:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி தப்பு செய்த அரசுக்கும், அரசின் கீழ் வாழும் மக்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் எடுக்கப்படும் சிறு பிள்ளைத் தனமான முடிவுகளே இவை.. சிங்கள அரசை ஒடுக்க, சிங்கள மக்களின் அன்பும் தமிழருக்குத் தேவை.. உண்மையில் மம்மிக்கு தில் இருந்தால், அவங்க முன்னே சொன்ன மாதிரி "ராணுவத்தை" அனுப்பி சிங்கள அரசுக்கு பாடம் கற்பிக்கணும்.. இப்படி, "நீ வெளையாட வரக்கூடாது, உன் கூட கா..", என்று சின்னப் பிள்ளை போல சொல்வது அல்ல..
Rate this:
Share this comment
Cancel
prithvi - Chennai,இந்தியா
27-மார்-201300:20:06 IST Report Abuse
prithvi நண்பர்களே உங்கள் அனைவரது கருத்துகளையும் படித்தேன். நாம் மட்டுமே இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கிறோம். ஆனால் நமது நாட்டில் மற்ற மாநிலங்களிலோ அல்லது மற்ற மொழி பேசுபவரிடமோ இந்த இனப்படுகொலை பெரும் பாதிப்பையோ அல்லது ஆதரவையோ பெற்று தரவிலயே ஏன் ? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது இருந்த தமிழ்நாட்டில் கிடைத்த ஆதரவு இன்று நமக்கு மற்ற மாநிலங்களும் அதன் தலைவர்களும் நம்மை புரிந்து கொள்ளாததற்கு என்ன காரணம். வெறும் விளம்பரம் மற்றும் அதன் TRP ரேட்டிங் மட்டுமே வேண்டும் என்று நினைக்கும் வடக்கு தனியார் தொலைகாட்சிகள் நம் மாநில மாணவர் போராட்டத்தை புறக்கணிப்பது ஏன்? தமிழனாக பிறந்தது நம் தவறா? நான் DMK மற்றும் ADMK செய்வதை குறை சொல்லவோ அல்லது மற்ற தமிழ் உணர்வாளர்களை குறை கூறவோ இதை கேட்கவில்லை? நம்மால் ஏன் ஒன்றாக நின்று போராட முடியவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டே மாணவர் போராட்டம் தொடங்கியது. ஆனால் நம்மால் இன்றும் வடக்கு அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் கேள்வி கேட்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
26-மார்-201319:36:01 IST Report Abuse
lakshman இவருக்கே சிங்களத்தினால் இந்த நிலை என்றால் அப்பாவி தமிழனுக்கு எப்படி இருக்கும் ???முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது.சபாஷ் சரியான முடிவு.. தமிழ் இரத்தம் உடலில் ஓடும் எவரும் இந்த முடிவை ஆதரிப்பார்கள், வாழ்க அம்மா , உங்களின் தமிழ் பற்றுக்கும் தமிழ் நாட்டு மக்களின் மீது வைதிருக்கும் அன்புக்கும் நன்றி.கருணாநிதி போல் அல்லாமல் உண்மையாக , முழு மனதுடன் செயல் படும் உங்களுக்கு நன்றி.மதிய அரசுக்கும் தி, மு க வுக்கும் சரியான சமட்டி அடி . மாணவர்களின் போராட்டம் வெற்றியின் பின்னணி தமிழ் நாட்டின் முதலமைச்சர் அம்மா என்பதாலேயே . உங்கள் ஆதரவுக்கு நன்றி அம்மா
Rate this:
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
26-மார்-201319:30:46 IST Report Abuse
elzhalan பூபதி சார் நம்மளும் பாகிஸ்தானும் 40 வருசமா விலையாண்டுகிட்டு தான் இருக்கோம். நம்ம உறவு எப்படி இருக்குன்னு நீங்க சொன்னத வச்சி பொதுவாக விளையாட்டு போட்டிகள்..,மனித நேயத்தை.., ஒருமைபாட்டை.., நட்புறவு ஒரு நாட்டோடு மற்றொரு நாட்டு மக்களிடையே உருவாகிறது...அடடா . எத்தினி குண்டுவெடிப்பு சம்பவம் நீங்க இதுக்கு என்ன சொல்லறிங்க .....................
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
26-மார்-201319:17:20 IST Report Abuse
Karthik "ஹைதராபாத் சன் ரைசரஸ், ஹைதராபாத் சன் ரைசரஸ்" அப்டின்னு ஒரு டீம் இருக்கு அது கலாநிதி மாறனோட டீமு அதோட கேப்டன் குமார் சங்கக்காரா ஒரு இலங்கை வீரர் அது மட்டும் இல்ல இன்னொரு வீரரும் இலங்கைய சேர்ந்தவர் நம்ம உண்ணா விரதம் இருப்போம், தீக்குளிப்போம் ஆன் இவர்கள் ஒரு பக்கம் spicejet, இன்னொரு பக்கம் IPL -ன்னு கோடி கோடியா கொள்ளை அடிகுரானுங்க ஒழுங்கா எவனும் வரி கட்றது இல்ல நம்ம நாடு என் இன்னும் முன்னேராம இருக்குன்னு இப்ப தெரிதா?? சாமானிய மக்களுக்கு தான் தமிழன், ஜாதி , மதம் இதெல்லாம் இந்த பெரிய பணக்காரன், அரசியல்வாதி இவனுங்க எல்லாம் எவனும் இத கடைபிடிக்க மாட்டானுங்க மக்களே உண்ணா விரதம் இதெல்லாம் விட்டுட்டு தயவு செஞ்சி உங்க குடும்பத்தை போய் கவனிங்க அது தான் நமக்கு ரொம்ப முக்கியம் இவனுங்க நம்மள உசுபேத்தி விட்டு குளிர் காயுரானுங்க
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
26-மார்-201319:15:43 IST Report Abuse
Yoga Kannan ஏ...... வென்றுகளா..... இதெல்லாம் தெரிஞ்சா ,,,,,,நீங்க எப்போவோ திருந்திருக்க மாட்டிங்க... அதனாலத்தான் இன்னும் ஜால்ரா பலமா தட்டுறிங்க,,,, இத்தனை வருஷம் இந்த அம்மையார் கடிதம் எழுதி maththiya ஆளும் காங்கிரஸ் செவி சாச்சிருக்கா..கடிதம் எழுதி மை கூட உலர்ந்திருக்காது ,,,,உடன் பதில் என்றால் ,,,, அவர்கள் குதிரை ஏற ரெடியாகி விட்டார்கள் என்று அர்த்தம்....இவர்களும் குனிய தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம்...
Rate this:
Share this comment
Cancel
Devarajan - Rishivandiyam,இந்தியா
26-மார்-201319:10:05 IST Report Abuse
Devarajan அம்மாவின் கவுன்ட்டவுன் ஆரம்பம் ஆகிடுச்சி
Rate this:
Share this comment
Cancel
Jawahar - Erode,இந்தியா
26-மார்-201319:10:05 IST Report Abuse
Jawahar மிக நல்ல முடிவு.. இதே மஞ்சள் துண்டு முதல்வராக இருந்திருந்தால், இலங்கை வீரர்களை போட்டியில் பங்கேற்க அனுமதி கொடுத்து விட்டு அதற்கொரு வியாக்யானம் பேசி இருப்பார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்