Advertisement
பீகாருக்கு விரைவில் பின்தங்கிய மாநில அந்தஸ்து !
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
16:05
பதிவு செய்த நாள்
மார் 26,2013 16:00

புதுடில்லி: பீகார் மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் பாட்னாவிலும், டில்லியிலும் மிகப்பெரிய பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தை பின் தங்கிய மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட அந்தஸ்த்து அளிக்கப்பட்டால், பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ் கூறுகையில், பின்தங்கிய மாநிலமாக அறிவிப்பது பற்றி செய்தி தாள்களில் தான் பார்த்துள்ளேன். அரசு சிந்தனையில் தான் உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். எங்களது கோரிக்கை, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-மார்-201317:10:35 IST Report Abuse
villupuram jeevithan மோடி போபியாவால் கிடைக்கிறது.
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201316:25:26 IST Report Abuse
Hasan Abdullah காங்கிரஸ் - நிதிஷ் கூட்டணி உறுதி செய்யபட்டாகிவிட்டது, பிகாரில் மொத்த தொகுதிகளையும் இந்த கூட்டணி வாரி இறைக்க போவது உறுதியாகிவிட்டது.
Rate this:
13 members
1 members
12 members
Share this comment
Cancel
Nagarajan.Su - Chennai,இந்தியா
26-மார்-201316:16:15 IST Report Abuse
Nagarajan.Su அவ்வளவு தான் இனி நிதிஷ் குமார் மத்திய அரசில் 2014 தேர்த்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்.
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.