பெங்களூரு: தமிழக முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சாட்சியமளித்தவர்களில் இதுவரை, 39 பேரிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் மொத்தம், 63 பேர் சாட்சியமளித்துள்ளனர். இவர்களில் நேற்று வரை, 36 பேரிடம், அரசு வக்கீல் பவானி சிங் குறுக்கு விசாரணை செய்துள்ளார். இன்று நடந்த விசாரணையின் போது, காஞ்சிபுரம் சண்முகம், திருவண்ணாமலை பாண்டு ரங்கன், அரியலூர் சுயம் பிரகாசம் ஆகியோரிடம், அரசு வக்கீல் பவானி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார்.இந்த வழக்கு விசாரணையை, நீதிபதி பாலகிருஷ்ணா நாளைக்கு தள்ளி வைத்தார்.