பாக்., அதிபருடன் கருத்து வேறுபாடு: துபாய்க்கு புறப்பட்டார் பிலாவல்| Dinamalar

பாக்., அதிபருடன் கருத்து வேறுபாடு: துபாய்க்கு புறப்பட்டார் பிலாவல்

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ, அதிபர் சர்தாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துபாய் புறப்பட்டு சென்றார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சி, 2008ல் நடந்த தேர்தலில், அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெனசிர் மகன் பிலாவல் புட்டோ, கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி, அதிபராக உள்ளார். இந்நிலையில், வரும் மே, 11ம்தேதி, பாகிஸ்தான் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ, லண்டனிலிருந்து, தாயகம் திரும்பினார். தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, பிலாவல், பிரசாரங்களில் ஈடுபடாமல், துபாய் புறப்பட்டு சென்று விட்டதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. "பிலாவல் துபாய் செல்வது வழக்கமான நடவடிக்கை தான்' என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANBE VAA J.P. - madurai,இந்தியா
27-மார்-201300:51:15 IST Report Abuse
ANBE VAA J.P. என்னாங்கப்பா அப்பாவும் மகனும் சண்ட போட்டுகிறது எங்க ஊர் வியாதி அது உங்க நாட்டுக்கும் பரவிருச்சா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை