Advertisement
ஏப்ரல் 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
19:30
பதிவு செய்த நாள்
மார் 26,2013 19:28

புதுடில்லி: ரயில் முன்பதிவு மற்றும் தட்கல் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளன. சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. எனினும் முன்பதிவு, ரத்து மற்றும் தட்கல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயில் முன்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அதே வேளையில் ஏ.சி., வகுப்பு முன்பதிவு கட்டணங்கள் ரூ. 15 ல் இருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்படுகிறது. சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. இது ஏ.சி., வகுப்புகளுக்கு ரூ. 15 முதல் 25 வரை உயர்த்தப்படுகிறது. இதே போல், தட்கல் கட்டணம் இரண்டாம் வகுப்புக்கு ரயில் அடிப்படை கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், ஏ.சி., வகுப்புக்கு 30 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. முன்பதிவு ரத்து செய்ய வசூலிகக்கப்பட்டு வந்த தொகை தற்போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரூ. 50ம், ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு படுக்கை வசதிக்கு ரூ. 5ம், ஏ.சி., வகுப்பு பயணிகளுக்கு ரூ. 10ம் வசூலிக்கப்படவுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamimalai Siva - Thanjavur,இந்தியா
27-மார்-201307:59:10 IST Report Abuse
Swamimalai Siva ஒரு சந்தேகம். டிக்கெட் முன் பதிவு செய்யம்போது வயது 59 வருடங்கள் 11 மாதங்கள் உள்ள ஒருவர் டிக்கெட் முன் பதிவின்போது முதியோர் கோட்டாவில் பதிவு செய்ய முடியாது. பிரயாண தேதியில் அவருக்கு 60 வயது 2 மாதங்கள். அதனால் பிரயாண தேதியில் அவருக்கு முதியோர் கோட்டாவில் 40 விழுக்காடு சலுகை உண்டு. ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், பழைய கட்டணத்தில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்களிடமிருந்து, பிரயாண தேதியில், ரயிலில் புதிய கட்டண வித்தியாச பணத்தை வசூலிக்கின்றார்கள். ஆனால் அதே முறையில் முதியோர் கோட்டாவில் 40 விழுக்காடு சலுகை பணத்தை திருப்பிக் கொடுக்கின்றார்களா ???????????
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.