Are you have no shy about power cut: Stalin | வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி | Dinamalar
Advertisement
வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""மெஜாரிட்டி அரசில், மின்வெட்டு, 16 மணி நேரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் வெட்கம் இல்லையா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க., உறுப்பினர் எ.வ.வேலு பேசுகையில், ""தமிழக அரசின் பட்ஜெட், உப்பு சப்பு இல்லாதது. தேர்தல் அறிவிப்பில், "அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும்' என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மின் பிரச்னை நீடிக்கிறது,'' என்றார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு காலம் என்பது, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு போதுமானது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப பிரச்னை உட்பட பல பிரச்னைகள் இருந்ததால், அதை சரிசெய்யவே தி.மு.க., விற்கு காலம் போய்விட்டது. இதனால், மாநிலத்தின் மின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. இவ்வாறு விஸ்வநாதன் பேசினார்.

அப்போது, ஸ்டாலின் பேசியதாவது: மின் துறை அமைச்சர், உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், மற்றொன்றுக்கு பதில் சொல்கிறார். தேர்தல் முடிந்து,"முதல் பட்ஜெட்டில், 2012 ஆகஸ்ட்டிற்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்' என கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு பிரச்னைக்கு, "மைனாரிட்டி' தி.மு.க., அரசு காரணம் என்று உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். நாங்கள், "மைனாரிட்டி' என்பதை மறுக்கவில்லை. ஆனால், "மைனாரிட்டி' அரசில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. "மெஜாரிட்டி' அரசில், 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இது வெட்கமா இல்லையா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (145)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
solainathan - Neyveli,இந்தியா
28-மார்-201300:08:30 IST Report Abuse
solainathan குஜராத்தும் இந்தியாவில்தான் உள்ளது. அது மின் மிகை மாநிலம். போதுமான நிலக்கரி இந்தியாவில் இல்லாவிட்டாலும் இந்தோனேசிய ஆஸ்திரேலியா ஆப்பிரிக்காவில் உள்ளது. மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க நாம் தயாராக உள்ளோம். தேவை திட்டமிடுதல் மட்டுமே. உண்மையில் மக்கள்தான் வெட்கமில்லாதவர்கள். இந்த அரசியல்வாதிகளை நம்பி மாறி மாறி ஒட்டு போடுகிறோம். கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள தொழில்சாலைகள் குஜராத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. எத்தனையோ மின் திட்டங்கள் (ஜெயந்கொண்டம், கடலூர்) அரசின் சரியான அணுகுமுறை இல்லாமல் செயல்படவில்லை. தற்போதைய 3000 மெகாவாட் பற்றாகுறையை, மூன்று 1000 மெகாவாட் மின்நிலையங்களை மட்டும் ( 12000 கோடி முதலீடு ) சரியான நேரத்தில் தேவையை சரியாக உணர்ந்து தனியாரை ஊக்குவித்து இருந்தால் தமிழகம் இருண்ட மாநிலம் ஆகி இருக்காது. அரசியல்வாதிகளுக்கு தொலை நோக்கு இருப்பதாக தெரியவில்லை. மனசுலே எவ்வளோவோ இருக்கு
Rate this:
0 members
1 members
9 members
Share this comment
Cancel
Joshua Ravi - Gudalur,இந்தியா
27-மார்-201311:10:15 IST Report Abuse
Joshua Ravi we are the voter. we have done it. we will start the struggle against the need of electric. I think thats good. but no one politician will start the struggle but they are talking not acting. we, the voters only will do it. This is democratic
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
27-மார்-201311:05:56 IST Report Abuse
Raja தேர்தல்ல நாங்க அப்படித்தான்யா சொல்லுவோம். உங்களுக்கு எங்கய்யா போச்சு புத்தி. அப்படின்னு நித்தம் சாரி நத்தம் விஸ்வநாதன் கேட்கிறார் போல....
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
27-மார்-201311:04:57 IST Report Abuse
Balagiri வெட்கப்பட வேண்டியவரே வெட்கபடாமல் வெட்கத்தை பற்றி பேசுவது தான் வெட்க கேடு. ஆட்சி காலத்தில் நன்றாக தூங்கிவிட்டு இப்போது கேள்வி கேட்கிறார் வெட்கமில்லாமல்.
Rate this:
27 members
1 members
25 members
Share this comment
leo - dammam,சவுதி அரேபியா
28-மார்-201300:09:58 IST Report Abuse
leoலூசு பயலே தி.மு.க தூங்கிடுச்சு நே வச்சுகோ, இப்போ ஆ.தி.மு.க என்னா பண்ணுது 2 வருஷமா, அம்மா யாரோட மடில படுத்து தூங்குராங்க...
Rate this:
9 members
0 members
18 members
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
27-மார்-201311:04:19 IST Report Abuse
Bava Husain வெக்கத்தை எல்லாம் பாத்தா, பொழப்ப நடத்த முடியுமா?....
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
27-மார்-201311:02:40 IST Report Abuse
Mynuddeen Ibrahim மைனாரிட்டி அரசில் மைனாரிட்டி நேரமும், மெஜாரிட்டி அரசில் மெஜாரிட்டி நேரமும் மின்வெட்டு இருக்கிறது. பாதிக்கப்படுவது என்னமோ மக்கள் தான்.
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
27-மார்-201310:59:14 IST Report Abuse
LAX காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். திமுக ஆட்சியில் 2 மணிநேர மின்வெட்டு இப்போது 16 மணிநேர மின்வெட்டு என்பதற்கு ஜால்ரா தட்டுகிறவர்களே.... ஒன்றை நினைத்துப் பாருங்கள். இந்த (அ)யோக்கியர்களின் ஆட்சி நீடித்திருந்தால் 16 மணிநேர மின்வெட்டு அல்ல மின்சாரமே இல்லாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு ( இருண்ட கண்டம் என்றால் ஆப்பிரிக்கா என்றதுபோல ) இருண்ட மாநிலம் - தமிழகம் என்று மாறியிருக்கும். இவர்களாவது ( குறிப்பாக சி.எம். ) சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற பலவகையிலும் முயன்று கொண்டிருப்பதால், இவ்வளவு நேரமாவது மின்சாரம் கிடைக்கிறது. இதே இடத்தில் வெட்கத்தைப் பற்றி நா கூசாமல் பேசுபவர்களாக இருந்திருந்தால், 2 G -ல் இருந்து எப்படி முற்றிலும் வெளிவருவது, இன்னும் என்னென்ன G & JA -க்களில் முறைகேடுகள் செய்து இமாலய சாதனை புரியும் கொள்ளைகள் அடித்து கோடிகளில் புரள்வது, தமிழ்நாட்டை யாருக்கு விற்பது என்ற சிந்தனைகளிலேயே இவர்களின் எண்ணோட்டம் சென்றுகொண்டிருக்கும். அப்புறம் மற்ற மாவட்டங்களுக்கென்ன, (இவர்களின் வீடுகளைத்தவிர) சென்னையில் கூட 2 மணிநேர மின்சாரமே இருந்திருக்கும். நல்லவேளை பிழைத்தோம் என்று எண்ணுவதை விட்டுவிட்டு....
Rate this:
146 members
1 members
241 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்-201310:58:17 IST Report Abuse
சகுனி வெட்கம் இருந்தது ......... ஆனால் பகுத்தறிவு பாசறையில் பயின்ற பகலவர்கள் நீங்களே பல விஷயங்களில் அந்தர் பல்ட்டி அடித்து வெட்கம் மானம் இழந்து நிற்பதால் ......... உங்கள் பாசறையில் இருந்து பிரிந்து வந்த அதிமுகாவிற்கு மட்டும் எப்படி வெட்கம் இருக்கும்? ........ முன் ஏர் போன வழி தானே பின் ஏரும் போகும்? ......... 2 மணி நேர மின்வெட்டு மட்டும் என்ன சாதனையா? ......... மின்வெட்டு என்று வந்தபிறகு 2 மணி நேரம் என்ன 16 மணி நேரம் என்ன? ...... மின்வெட்டே இல்லாமல் ஆட்சி நடத்தியிருந்தால் இந்த கேள்வியை கேட்க உங்களுக்கு உரிமை உண்டு ........ 9 வருஷமா மத்தியில சுகம் அனுபவித்துவிட்டு ......... பல நல்ல திட்டங்கள தமிழகத்துக்கு வர விடாம செஞ்சிட்டு .... பேச்சை பாரு ...... லொள்ள பாரு ........
Rate this:
144 members
1 members
123 members
Share this comment
Cancel
power star - AlAmarah,ஈராக்
27-மார்-201310:56:58 IST Report Abuse
power star அருமையான விவாதம்.
Rate this:
7 members
3 members
49 members
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
27-மார்-201310:56:36 IST Report Abuse
திராவிடன்  ஸ்டாலின் இப்படி பேசுற ஆள் கிடையாதே...புரிஞ்சுபோச்சு அப்பா, அண்ணன், தங்கை, இவர்கள்மேல் உள்ள கோபத்தை சட்டசபையில காட்டமா காட்டுறாரு... 1) ஸ்டாலின் அவர்களே, கரண்ட கண்டுபிச்சவரு யாரு தெரியுமா? மைக்கேல் பாரடே. சபாஷ் சரியான பதில்... 2) சரி இன்னொரு கேள்வி. கரண்ட் கட்ட கண்டுபிடிச்சவரு யாரு? சரியா பதில் தெரியல. நான் படிக்கும்போது இதெல்லாம் சொல்லிக்கொடுக்கல... என்னாங்க ஸ்டாலின் 300 - 400 வருசங்களுக்கு முன்னாடி நடந்த விசயங்களுக்கு டக்குனு பதில் சொல்லிடீங்க ஆனால் இப்ப சமீபத்துல நடந்தத தெரியலைன்னு சொல்லுறீங்களே? சரி நானே சொல்லுறேன். கரண்ட் கட்ட கண்டுபிடிச்சவரு ஆர்காடு வீராசாமி...
Rate this:
103 members
2 members
140 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்