E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
களைகட்டியது தமிழக கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 மார்
2013
04:10
பதிவு செய்த நாள்
மார் 26,2013 23:39

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு, ஆயத்தமாகி வரும் தமிழக கட்சிகள், தேர்தல் நிதி வசூலில், தீவிரம் காட்டி வருகின்றன.

ஆளும் அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், தேர்தல் நிதி வசூலை, பகிரங்கமாக, அறிவித்தே வசூலிக்கின்றன. தி.மு.க.,வை பொருத்தவரை, மாவட்டங்களில், தேர்தல் நிதியளிப்பு கூட்டங்களை நடத்தி, நிதியை பெற்று வருகிறது. இது தவிர, கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நிதி அளிப்பதும், நடந்து வருகிறது. தேர்தல் நிதி வசூலை, கட்சியின் நாளேட்டில், தி.மு.க., வெளியிட்டு வருகிறது. இதுவரை, தேர்தல் நிதி வசூல், 24 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக தெரிகிறது. அ.தி.மு. க.,வில், இப்போது தான், தேர்தல் நிதி வசூல் ஆரம்பமாகி உள்ளது. இரு நாட்களுக்கு முன், கட்சியின், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர், 1.04 கோடி ரூபாய் நிதி கொடுத்து, தேர்தல் நிதி வசூலை துவக்கி வைத்துள்ளார்.



செலவு வரம்பு: ஒரு லோக்சபா தொகுதி வேட்பாளர் செலவிடும், அதிகபட்ச செலவினத்தை, 40 லட்சம் ரூபாய் என, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. இத்தொகை, 25 லட்சம் ரூபாயிலிருந்து, 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் செலவிட்டால், அது, தேர்தல் குற்றமாக பதிவு செய்யப்படும். ஒரு தொகுதிக்கு, 40 லட்சம் ரூபாய் என்றால், தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், ஒரு கட்சி, 15.60 கோடி ரூபாய் செலவிட, தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. இதில், கட்சித் தலைவர்களின் பிரசாரப் பயண செலவும் அடக்கம்.



தமிழக வசூல்: தி.மு.க.,வைப் பொருத்தவரை, 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தேர்தல் நெருங்கும்போது, வசூல் உச்சகட்டத்தை அடையும். அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலர் ஒருவர், 1 கோடி ரூபாய்க்கும், அதிகமாக தேர்தல் நிதி அளித்து விட்டார். கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள, 60 மாவட்ட செயலர்களும், இத்தொகைக்கு, அதிகமாக, தேர்தல் நிதியை அளிப்பர். அதிலும், மாவட்ட செயலர்களாக உள்ள அமைச்சர்கள் அளிக்கும் நிதியின் அளவு, சாதாரண மாவட்ட செயலர் அளிக்கும் நிதியை விட, பல மடங்கு அதிகமாக இருக்கும். காங்கிரஸ், பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளுக்கு, கட்சியின் தேசிய தலைமையிடமிருந்து, தேர்தல் நிதி வழங்கப்படும். வேட்பாளர்களைப் பொருத்து, உள்ளூர் வசூலும் செய்து கொள்வர். சிறிய தோழமை கட்சிகளுக்கு, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் தேர்தல் நிதி கொடுக்கும்.



செலவில் முதலிடம்: தேர்தல் செலவில், நம் நாட்டில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களை, பணக்கார மாநிலங்கள் என, அழைக்கின்றனர். பீகார், மேற்கு வங்கம், இமாச்சல் பிரதேசம், உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி ஆகியன, குறைந்த தேர்தல் செலவு மாநிலங்கள் என, கூறப்படுகின்றன.தேர்தல் செலவுக்கு, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள, தொகை மிகச் சொற்பமானது. பார்லிமென்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை என, வரையறுக்கப்பட்ட தொகுதிகளில் கூட, 1 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என, லோக்சபா எம்.பி., ஒருவர் கூறுகிறார். மேலும், அவர் கூறுகையில், "தமிழகத்தில், ஒரு லோக்சபா தொகுதியில், 25 முதல், 40 கோடி ரூபாய் வரை, சாதாரணமாக செலவிடுகின்றனர். வேட்பாளர் பிரபலமானவராக, பணக்காரராக இருந்து விட்டால், செலவை கணக்கிட முடியாது. வேட்பாளரின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோர், வேட்பாளரின் கவனத்துக்கே வராமல், பெருந்தொகையை செலவிடுகின்றனர்' என்றார்.



கண்காணிப்பு: வேட்பாளரின் செலவுகளை, தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் கண்காணிக்கின்றனர். செலவு கணக்கை வேட்பாளர் அளிப்பதோடு, தேர்தல் பார்வையாளர், தேர்தல் அலுவலர் ஆகியோரும், தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கின்றனர். ஆனால், இம்மூவரின் கணக்குகளும், ஒரு ரூபாய் கூட அதிகமாகவும், குறைவாகவும் இல்லாமல், கச்சிதமாக இருப்பது தான் விந்தை. தேர்தலில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணியுடன் நின்றால், ஓரளவு செலவு குறையும். வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுடன், தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவை கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால், செலவு எகிறும். இந்நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தேர்தல் செலவு, கேலிக் கூத்துக்கு உள்ளாகும்.



- நமது சிறப்பு நிருபர் -






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Chennai,இந்தியா
30-மார்-201310:16:05 IST Report Abuse
Devanand Louis the.mu,kavirkku earkaneve 2 - G yil aditha , Granite oolalil adith panam mattrum mega oolalkalil aditha panangal ullana
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-மார்-201313:56:31 IST Report Abuse
Pugazh V அ தி மு க வும் தான் வசூலை ஆரம்பித்திருக்கிரதாக செய்தியில் சொல்லப் பட்டிருக்க்ரியாது. முழுதுமாய்ப் படிக்காமலே, பாதி படித்து விட்டு அல்லது போட்டோ பார்த்து விட்டு தி மு க மீது பொறாமையுடன் விமர்சனங்களை தெளிக்கிறார்கள். செய்தி பற்றி விமர்சிப்பது இவர்களின் நோக்கமன்று. எப்பவும், தி மு க வை நாலு திட்டு திட்ட வேண்டும், அவ்வளவு தான்.
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-மார்-201313:53:08 IST Report Abuse
Pugazh V ஏற்க்கனவே பலரும் தி மு க வைப் பார்த்து வயத்தெரிச்சல் பட்டுக் கொண்டும் பொறாமையில் வெந்து கொண்டும் இருக்கிறார்கள். தி மு க வை ஆதரிப்பவர்களும் விரும்புபவர்களும் நிதி வழங்குகிறார்கள், அதைப் பார்த்து, வெட்கமில்லையா, இன்னுமா நிதி வசூலிப்பது, அது இது என்று புலம்புவது தான் வெட்கமான விஷயம்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்-201313:27:46 IST Report Abuse
சகுனி இந்த கட்சிங்க இதுவரை அடிச்சிருக்கிற கொள்ளைக்கு கணக்கு போட்டா ....... நியாயமா ஒரு வோட்டுக்கு 10,000 கூட கொடுக்கலாம் ......... இதெல்லாம் வாக்காளர்கள் யோசிக்கணும் ......... கொள்ள போனது நம்ம பணம்தானே?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்-201313:26:42 IST Report Abuse
சகுனி வருமான வரித்துறை தூங்குகிறதா? .......... இவ்வளவு வெளிப்படையாய் பேப்பர்லையே செய்தி வந்தாச்சி ....... இன்னும் என்ன வேணும் ....... யாராவது புகார் குடுத்தா தான் வேல செய்வாங்க போல ............
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
munna MURALI.TRT - chennai,இந்தியா
27-மார்-201310:32:21 IST Report Abuse
munna MURALI.TRT எங்கய போனாரு நாம 2ஜி ஹீரோ மொத்த பணத்துல பாதிய கொண்டந்து இங்க கொட்ட சொல்லுசசிகலா கொடுக்குற சரக்கு பணத்த விட இது அதிகமா இருக்கும் ல
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
27-மார்-201310:30:52 IST Report Abuse
R.Saminathan ஆளும் கட்சி தனது பெருமையை இழந்து வருகிறது,, கட்சியின் பலத்தையும் குறைத்து வருகிறது,.,ஆளும் கட்சி,.,
Rate this:
0 members
0 members
83 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
27-மார்-201309:42:30 IST Report Abuse
Babu. M income tax கட்ட சொல்லி நமக்கு மட்டும் நோட்டீஸ் anupuvangaloo
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Sugavanam - sengkang,சிங்கப்பூர்
27-மார்-201308:54:27 IST Report Abuse
K.Sugavanam இதெல்லாம் தான் அவர்கள் நல்லா சலவை செய்ய வாய்ப்புக்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
27-மார்-201308:32:03 IST Report Abuse
Eswaran Eswaran வாக்காளருக்கு கட்சிகள் கொடுக்கும் பணத்திற்கு தேர்தல் கமிஷன் செலவு தொகையிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும்.வாக்காளருக்கு இன்றைய விலைவாசியை ஒட்டி கூடுதலாக பணம் கொடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும் .குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாகக் கொடுக்கும் கட்சிகள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும். ஈஸ்வரன்,பழனி.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.