Around 620 tasmac shops near NH face closeing | தமிழகத்தில் 620 "டாஸ்மாக்' கடைகளுக்கு மூடுவிழா: ஐகோர்ட் உத்தரவால் அதிரடி நடவடிக்கை | Dinamalar
Advertisement
தமிழகத்தில் 620 "டாஸ்மாக்' கடைகளுக்கு மூடுவிழா: ஐகோர்ட் உத்தரவால் அதிரடி நடவடிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தின், தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும், "டாஸ்மாக்' கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 620 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 6,850 கடைகள் செயல்படுகின்றன. 2003ல், மது விற்பனை மூலமான வருவாய், 3,250 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இந்நிலையில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், விபத்து அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மார்ச், 31க்குள், இக்கடைகளை மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில், 862 டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடைகளை, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, 120 மீட்டர் தூரத்துக்கு வெளியே அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை, 242 கடைகளுக்கு மட்டுமே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் காலக்கெடு முடிய, ஐந்து நாட்களே உள்ள நிலையில், 620 கடைகளுக்கான புதிய இடங்களை தேர்வு செய்ய முடியாமல், ஊழியர்கள் தவிக்கின்றனர். மார்ச், 31க்குள் புதிய இடம் தேர்வு செய்து வழங்காவிடில், ஏப்., 1 முதல், இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (31)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.kannadasan. - dubai,இந்தியா
28-மார்-201317:49:26 IST Report Abuse
k.kannadasan. இதற்க்கு பதில் தேசிய நெடுஞ்சாலையில் நல்ல உணவகம் திறந்தாள் அரசுக்கும் நல்ல வருமானம் , பயணிகளுக்கும் திருப்பதியான உணவும் கிடைக்கும். நல்ல செய்தி வரவேற்க தக்கது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மார்-201314:47:19 IST Report Abuse
தமிழ்வேல் 120 மீட்டர் தூரத்தில் வைப்பது நடந்து செல்லும் தூரம்... குறைந்தது 10 கி மீ தூரத்தில் அமைக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
sakthivel - tanjore,இந்தியா
27-மார்-201314:16:53 IST Report Abuse
sakthivel தமிழக நீதிதுரைக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
27-மார்-201314:07:51 IST Report Abuse
Ashok ,India நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை உணவகமாக மாற்றினால் பேருந்து பயணிகளுக்கு நல்ல உணவு கிடைக்குமே........அரசு செய்யுமா??
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-மார்-201314:00:52 IST Report Abuse
Pugazh V ஹலோ, இன்னும் ஒரு கடை கூட மூடப் படவில்லை என்பதறிக. 620 கடைகளை மூட உத்தரவு வந்திருக்கிறது. அந்தக் கடைகளுக்கு மாற்று இடம் தேடப்படுகிறது, அவ்வளவு தான். வேறு இடம் பார்க்கும் பொறுப்பைக் கூட டாஸ்மாக் ஊழியர் தலையில் போட்டு விட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்களும் தங்களின் வாடிக்கையாலர்களிடமே வேறு இடம் இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம், யாரும் , /அம்மாவின் சாதனை டாஸ்மாக் கடைகள் மூடுவிழா// என்று சொல்லாமல் விட்டார்களே.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
27-மார்-201314:00:07 IST Report Abuse
Divaharan மூடப்பட்ட கடைகள் வேறு இடத்தில திறக்க கூடாது. டீ கடை மாதிரி டாஸ்மாக் கடை வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
27-மார்-201312:07:02 IST Report Abuse
LAX மூடுவிழா கண்ட கடை வேறு இடங்களில் முளைத்துவிடாமலும் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் மதுவிலக்கு என்பது முழுமையாக சாத்தியமில்லாவிட்டாலும், கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவாவது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.DURAIMURUGAN, KOVAI - Coimbatore,இந்தியா
27-மார்-201311:35:36 IST Report Abuse
A.DURAIMURUGAN, KOVAI இதுவே காரணமாக கொண்டு டாஸ்மாக் கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மாற்றி மேலும் இன்னல்களை தான் உருவாக்குகின்றனர். உயர் நீதி மன்றத்தின் இந்த முடிவு சரி என்று சொல்வதற்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்-201311:35:36 IST Report Abuse
சகுனி மொத்த கடைகளையும் மூடுங்கயான்னு சொன்னா ........ அதை காதுலையே வாங்காம ........ கொஞ்ச கொஞ்சமா மூடுராப்ல பாவ்லா காட்டிகிட்டு இருக்கீங்க ....... அதுலயும் ஹைவேஸ்ல இருந்து தள்ளி வெச்சி நடத்த பிளான் வேற ...... சட்டத்த ... சட்டத்தோட தீர்ப்ப மதிக்காம ஆட்டம் போடுற உங்களுக்கு இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ....... தேர்தல் வரட்டும் ...... அதுவரை எவ்வளவு தூரம் போறீங்களோ போங்க ........
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
27-மார்-201310:53:30 IST Report Abuse
நீலகண்டன் வரவேற்க வேண்டிய செய்தி இதனால் சாலையில் விபத்துகள் குறையும், அதே போல் மற்ற இடங்களில் இருக்கும் குறிப்பாக பள்ளி, கல்லூரி, கோவில் மற்றும் பேருந்து தளங்கள் இருக்கும் கடைகளுக்கும் முடு விழா செய்ய வழி வகை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்