E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிய வங்காநரி: செல்லப்பிராணியாக வளரும் அதிசயம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 மார்
2013
00:06

வாழப்பாடி: வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த, வனத்தில் இருந்து பிடித்து வந்த வங்காநரி, சிறுவர்கள் கொடுத்த, "ஸ்நாக்ஸ்' மற்றும் வீட்டு சாப்பாட்டை, சாப்பிட்டு பழகியதால், வனத்திற்குள் செல்ல மறுத்து கிராமத்திலேயே தங்கி, செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. தினந்தோறும் நரி முகத்தில் விழிக்கும் கிராம மக்கள், அந்த நரிக்கு பரிவுகாட்டி விருந்து வைத்து உபசரித்து வருகின்றனர்.

விளைநிலங்களில் விளைந்து கிடக்கும் பயிர்களை, தமிழ் மாதமான மாசியில் அறுவடை செய்யும் வாழப்பாடி பகுதி கிராம விவசாயிகள், தை மாதத்தின் துவக்கத்தில் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பின், மீண்டும் பயிர் செய்தவதற்கு முன், "நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்குமென, முன்னோர் வழியாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், தமிழகத்தின் வேரெந்த பகுதியிலும் இல்லாத வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், மத்தூர்,கல்லேரிப்பட்டி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, கோபாலபுரம், மேலாவரம், உமையாள்புரம், தமையனூர், வடுகத்தம்பட்டி உள்ளிட்டகிராமங்களில், வனப்பகுதியில் இருந்து வங்காநரி பிடித்து வந்து, காணும் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடத்தும் வினோத திருவிழா ஆண்டுதோறும் நடந்துவருகிறது.

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாழப்பாடி அடுத்த கல்லேரிப்பட்டி கிராமமக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் வலைவிரித்து வங்காநரியை பிடித்தனர். அந்ந நரியை ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு, சிறுவர்-சிறுமியர் தட்டுவடை, முறுக்கு உள்ளிட்ட, "ஸ்நான்க்ஸ்' கொடுத்தும், பெண்கள் தயிர்சாதம், பால், பழம் கொடுத்தும் உபசரித்தனர். ஜல்லிக்கட்டு நடத்திய பின்னர் அந்த நரியை துன்புறுத்தாமல் பிடித்த வனப்பகுதிக்கே கொண்டு சென்று விட்டு வந்தனர். கல்லேரிப்பட்டி கிராமத்தில் சிறுவர்கள் கொடுத்த, "ஸ்நாக்ஸ்' மற்றும் பெண்கள் கொடுத்த தயிர்சாதம், பால், பழம் தின்று ருசிகண்ட வங்காநரி, வனத்திற்குள் செல்ல மறுத்து மீண்டும் அந்த கிராமத்திற்கு திரும்பியது. மூன்று மாதங்களளாக வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு, கிராம மக்களின் ஒட்டு மொத்த உபசரிப்பில், வங்காநரி கல்லேரிப்பட்டி கிராமத்தில் செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. பெண்கள் மட்டுமின்றி, சிறுவர்-சிறுமியர்களும் கூட சர்வசாதரணமாக தூக்கிவைத்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மனிதர்களிடம் மட்டுமின்றி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும், தெரு நாய்களிடமும் பழகிய, வங்காநரி, கால்நடை கட்டுத்தறியில் தூங்கி மகிழ்கிறது. தினந்தோறும் நரி முகத்தில் விழிக்கும் கல்லேரிப்பட்டி கிராம மக்கள், விருந்தாளியான அந்த வங்காநரியை துன்புறுத்தாமல் தொடர்ந்து உணவு கொடுத்து உபசரித்து வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mustafa - Dammam,சவுதி அரேபியா
30-மார்-201312:11:04 IST Report Abuse
Mustafa நரி முகத்தில் முழித்து மனுஷனுக்கு நல்லது நடக்குதோ இல்லியோ மனுஷன் முகத்தில் முழித்து நரி ஜாலியா இருக்கு
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
sakthivel - tanjore,இந்தியா
27-மார்-201314:32:29 IST Report Abuse
sakthivel "நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்குமா ஊஊ ஊஊ (செந்தில் கவுண்டமணி கதை ஆகாமல் இருந்தால் நல்லது.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
27-மார்-201313:08:33 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இப்போது மிருகங்கள் கூட பண்பட்டு வருகின்றன..மனிதன் பண்படுவதேப்போது?
Rate this:
1 members
0 members
28 members
Share this comment
Cancel
BAS - TIRUVARUR,இந்தியா
27-மார்-201312:36:39 IST Report Abuse
BAS நரி ஒன்னும் அப்படி பண்ணாது.மனுசனுங்கதான் அப்படி .
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
27-மார்-201312:01:22 IST Report Abuse
kumaresan.m "அன்புக்கு அணைத்து உயிர்களும் அடிமை என்று நமக்கு பாடம் சொல்கிறது இந்த ஐந்தறிவு உள்ள ஜீவன் ,ஆனால் பகுத்தறிவு கொண்ட ஜீவன்கள் அன்பை செலுத்தாமல் அடிமை படுத்த நினைப்பது ஏனோ ???
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
27-மார்-201311:11:06 IST Report Abuse
anandhaprasadh நரி என்னங்க மனுஷனா... நம்பிக்கை துரோகம் பண்றதுக்கு...
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
27-மார்-201310:31:55 IST Report Abuse
Raja அப்படின்னா, இன்னைக்கு வடக்குபட்டி ராமசாமி என் கடனை கொடுத்துடுவாருங்கோ... ஊ .....ஊ....ஊ.... ராஜா கோமஸ் .....
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Vanavaasam - Dallas, Fort Worth,யூ.எஸ்.ஏ
27-மார்-201309:59:52 IST Report Abuse
Vanavaasam ஒரு நாள் ஊருல நாலஞ்சு ஆடு காணாமல் போகும் .... நரி ராஜதந்திரமாக அதற்கு பந்த் நடத்தும் ..
Rate this:
2 members
1 members
14 members
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
27-மார்-201309:11:29 IST Report Abuse
Venkatesan Jayaraman அது மனிதன் அல்ல மேலும் திராவிட தலைவனும் அல்ல நன்றி மறப்பதர்க்கு
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
Cancel
Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-201307:35:40 IST Report Abuse
Mohammed Azeez நல்லா பாருங்க அப்பு நரியா இல்லை நாயா இருக்க போகுது
Rate this:
1 members
1 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.