E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2013,01:07 IST
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நிரந்தர நீர் இருப்பு தண்ணீரை குடிநீர் உபயோகத்திற்கு எடுக்க, கேரளா அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது.


கோவை மக்களுக்கு குடிநீர் வழங்க, கடந்த 1889ல் சிறுவாணி திட்டம் பரிசீலிக்கப்பட்டு, கடந்த 1929ல் சிறுவாணி வனப்பகுதியில் முத்திகுளம் பள்ளத்தாக்கில், தடுப்பணை கட்டி, கோவைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. கடந்த 1977 - 83ல், கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட சிறுவாணி வனத்தில், அணை கட்டப்பட்டு, 22.4 சதுர கிலோமீட்டர் பரப்பில் தண்ணீர் தேக்கப்பட்டது. அணையில் 650 மில்லியன் கனஅடி வீதம், ஆண்டுக்கு இருமுறை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பில் அணை கட்டப்பட்டது. இருமாநில ஒப்பந்தப்படி, கோவை மாநகராட்சியில் இருந்து சிறுவாணி அணை பராமரிப்புக்காக, கேரளா அரசுக்கு, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சிறுவணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, கோவை மாநகராட்சி, வழியோர கிராமங்கள், சூலூர் விமானப்படை தளத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு தினமும் 85 எம்.எல்.டி., தண்ணீர் வழங்க வேண்டும்.
கடந்தாண்டு மழை பொய்த்ததால், ஆண்டுக்கு இரண்டு முறை நிரம்பும் சிறுவாணி அணை ஒரு முறை கூட நிரம்பவில்லை. கடந்த ஜன., முதல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த 22ம் தேதி, அணையினுள் இருக்கும் நீர் உறிஞ்சு கிணற்றில் நான்கு வால்வுகளும் வெளியே தெரிந்தது. அதன்பின், நீர்உறிஞ்சு கிணற்றில் பைபாஸ் வழியாக குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் எடுக்கிறது.

இந்நிலையில், கேரளா மாநிலம் பாலக்காட்டில், தமிழக - கேரளா அதிகாரிகளை உள்ளடங்கிய, "சிறுவாணி திட்ட ஒருங்கிணைப்பு கட்டுப்பாடு வாரியத்தின்' ஆலோசனை கூட்டம் நேற்று முன்

தினம் நடந்தது. கேரளா நீர்ப்பாசன தலைமை பொறியாளர் லத்திகா தலைமையில் நடந்த கூட்டத்தில், கேரளா நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (சிறுவாணி திட்டம்) கலந்து கொண்டனர். கேரளா அதிகாரிகள் பேசும்போது, "கேரளாவிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் கிடைக்காததால் பாசனம் பாதிக்கிறது. ஆழியாறு அணையில் தண்ணீர் வழங்கும் அளவை குறைத்ததால், பாலக்காடு மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கினால், சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் வழங்கப்படும்' என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.

தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேசுகையில், "கேரளாவின் கோரிக்கை பதிவு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும். பி.ஏ.பி., நதி நீர் பங்கீடு பேச்சு நடக்கும் போது, ஆழியாறு தண்ணீர் வழங்குவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சிறுவாணி அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டு, கோவை மாநகராட்சி, வழியோர கிராமங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். அதனால் அணையில் இருக்கும் தண்ணீரை எடுக்க அனுமதிக்க வேண்டும். அணையினுள் ஆழ்குழாய்

கிணறு அமைக்க பரிசீலிக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து, "சிறுவாணி வனப்பகுதியில் உள்ள வனவிலங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்காமல், அணையில் இருந்து 861.5 மீட்டர் நீர்மட்டம் வரையிலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு, சிறுவாணியில் தண்ணீர் எடுக்க வேண்டுமானாலும், அணையினுள் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் தமிழக முதல்வர், கேரளா முதல்வரிடம் பேச்சு நடத்தி அனுமதி பெற வேண்டும்' என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


இதுகுறித்து, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தினமும் 15 - 20 எம்.எல்.டி., அளவுக்கு தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் இறுதி வரை தண்ணீர் எடுக்கலாம். சிறுவாணி வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்யாமல் இருந்ததில்லை. அதனால், இயற்கை நிச்சயம் கை

Advertisement

கொடுக்கும்' என்றார். சிறுவாணி அணையில் நேற்றைய நிலவரப்படி 862.65 மீட்டர் நீர்மட்டம் உள்ளது. பேச்சுவார்த்தை நிபந்தனைப்படி, சிறுவாணியில் இருந்து இன்னும் 1.15 மீட்டர் அளவுக்குள்ள தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

முரண்பாடான பேச்சு: அதிகாரிகள் கலக்கம்:
தமிழக - கேரளா இடையே பி.ஏ.பி., முல்லைப்பெரியாறு நதிநீர் பங்கீடு பிரச்னை உள்ளது. கோவையின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட சிறுவாணி அணையில் கேரளாவுக்கு எந்த பங்கீடும் இல்லை. தமிழக அரசால் அணை கட்டப்பட்டு, கோவை மாநகராட்சி நிதியில் பராமரிக்கப்படுகிறது. அங்குள்ள, வனக்காவலர்கள், நீர்ப்பாசனத்துறையினருக்கு கோவை மாநகராட்சி சம்பளம் வழங்குகிறது. இந்நிøயில், சிறுவாணி அணையில் நிரந்தர நீர் இருப்பில் தண்ணீர் எடுக்கும் பேச்சுவார்த்தையில், "பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணை மூலம் தண்ணீர் வழங்கினால்தான், சிறுவாணியில் தண்ணீர் எடுக்க அனுமதிப்போம்' என்ற கருத்தை கேரளா அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். ஓரு திட்டத்தின் பேச்சுவார்த்தை நடக்கும் போது, வேறு திட்டத்தில் இருக்கும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, தவறான முடிச்சு போடக்கூடாது. ஒப்பந்தத்திலும் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திலுள்ள கருத்துகளை கேரளா அதிகாரிகள் மதிப்பதில்லை. கேரளாவின் இந்த அணுகுமுறையால் சிறுவாணி அணையில் தண்ணீர் எடுப்பதில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் என தமிழக பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தயாராகும் கேரளா! ஆழியாறு அணையில் கேரளாவுக்கு மணக்கடவு வழியாக ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை காலத்தில் ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சித்தூர் தாலுகாவில் பாரதப்புழா ஆற்றில் நான்கு டி.எம்.சி., தண்ணீர் வீணாகி கடலுக்கு செல்கிறது. மழை காலத்தில் பாரதப்புழாவில் வீணாகும் தண்ணீரை சேமிக்க, தடுப்பணைகள் கட்டவும், பழைய சிற்றணைகளை தூர்வாரவும் கேரளா அரசு ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளது. கம்பாலத்தரா, வெங்கலக்கயம், மீன்கரை, சுள்ளியாறு, குன்னம்பிடாரி சிற்றணைகளை தூர்வார ஆய்வு பணி நிறைவடைந்துள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
27-மார்-201321:11:14 IST Report Abuse
Siva நம்மவர்களை திருத்தவே முடியாது .இந்த ஆறுகள் கேரளாவில் உற்பத்தியாவதால் இன்னும் வறளாமல் உள்ளது .விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை நமது அரசியவாதிகளின் mineral water கம்பெனிகள் பாட்டிலில் அடைத்து விற்கின்றன .siruvani என்று ஒரு மீனரல் வாட்டர் கம்பெனியே கோவையில் உள்ளது .இன்றைய தமிழர்கள் இயற்கையையும் நீர் ஆதாரங்களையும் அழித்து பின் அண்டை மாநிலங்களிடம் கையேந்துவதில் அர்த்தம் இல்லை .
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
27-மார்-201319:23:15 IST Report Abuse
adithyan மலம்புழை அணைக்கட்டில் உள்ள தண்ணீர், கல்பாத்தி புழை, கன்னடிப்புழை நீரெல்லாம் பாரதபுழை வழியாக கடலுக்கு செல்கிறது.தடுப்பணைகள் இல்லை. அதனால் தான் கேரளத்தில் நீர் தட்டுப்பாடு. தமிழகத்துடன் சண்டை போட்டு நீரை கடலுக்கு அனுப்புவான் கேரளம். கேரளத்தில் நிறைய நீர்வளம் உண்டு. ஆனால் அதனை உபயோக படுத்த மனம் இல்லை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
28-மார்-201310:41:32 IST Report Abuse
Mullai Periyaarபினாத்தல்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
27-மார்-201318:21:27 IST Report Abuse
Sham கோவை மக்கட்தொகையில் 40% மேல் இங்கு குடியேறிய மலையாளிகள் தான் என்பதை கேரளா அரசு நினைவில் கொண்டு செயல் படவேண்டும்... தமிழக மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.... இந்திய ஒருமைப்பாட்டை உணர்ந்து கேரளா அரசும்., கேரளா அதிகாரிகளும் நடந்துகொள்ள வேண்டும்...
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
27-மார்-201313:45:28 IST Report Abuse
T.C.MAHENDRAN அட முட்டாள் மலையாளிகளா , ""மினி கேரளா"" என்று அழைக்கும் நிலைக்கு இன்று கோயம்பத்தூரில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது ,அப்படி இருந்துமா இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள் ?
Rate this:
1 members
1 members
4 members
Share this comment
Cancel
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
27-மார்-201312:10:02 IST Report Abuse
Mullai Periyaar பின்னே என்ன ஒப்பந்தப் படி PAP யில் இருந்து இப்போது ஒழுங்காக தண்ணீர் தரப் படுவதில்லை என்பது உண்மை தானே. தமிழ் நாட்டிலுள்ளவர்கள் சுய நலம் ஒன்றை மட்டுமே நேசிக்கும் இயல்புள்ளவர்கள். மற்றவர்களைப் பற்றி ஒரு போதும் சிந்திப்பதில்லை. இவர்கள் ஒப்பந்தப் படி நீர் கொடுக்க மாட்டார்களாம் ஆனால் இவர்களுக்கு மட்டும் கேட்கும்போதெல்லாம் கேட்பதை கொடுக்க வேண்டுமாம். ஒன்றுடன் ஒன்றை இணைக்கக் கூடாதாம். இதில் இருந்து என்ன தெரிகிறது, PAP யில் இருந்து தண்ணீர் தனக்கு மட்டும் உபயோகிக்கவேண்டும். மற்றவர்களுக்கு உரிய பங்கினை கொடுக்க மாட்டோம். நீ மட்டும் எங்களுக்கு எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம். அது சரி நியாயத்தைப் பற்றி உங்களிடம் சொல்லுகிறேன் பாருங்கள்.
Rate this:
6 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
27-மார்-201308:56:30 IST Report Abuse
K.Sugavanam நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்..
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
ARUN - Chennai,இந்தியா
27-மார்-201313:14:44 IST Report Abuse
ARUNWe ( The political parties in TN) make the people to beg (by giving freeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee items) drink (by ing TASMAC in every street) and making the entire TN as a Dark state ( By not initiating any plan for producing power)and planning/sping whole time in thinking how to get 40/40 and win next Election by making the people best idiots by giving money,Biryani and barrels of liquor. S please people wake up....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
27-மார்-201320:09:59 IST Report Abuse
Mullai Periyaarஒப்பந்தம் அப்பனே ஒப்பந்தம். நீ ஒன்னும் செய்ய முடியாது. உன் மாநிலம் இல்லை இது. இங்கு நீ எது செய்ய வேண்டும் என்றாலும் அந்த மாநில அனுமதி வேண்டும்....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.