Jayalalithaa calls for a referendum on separate Eelam | இலங்கை தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு: ஐ.நா.,வை வலியுறுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை| Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (120)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இனப் படுகொலைக்கும், சர்வதேச விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். தனி ஈழத்துக்கு இலங்கைத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியிலும், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, தமிழக சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையை, "நட்பு நாடு' என சொல்வதை, இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் மீதான, அடக்கு முறையை, இலங்கை நிறுத்தும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்பு கவுன்சிலில், இலங்கை மீதான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகத்தில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம் குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தியா உதவி:
இதில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இலங்கையில், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம். இலங்கை அரசு, இனவெறி கொள்கையுடன் நடந்து கொள்கிறது என, 1980 முதலே ஈழ மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த உரிமைப் போராட்டத்தை நசுக்கும் வகையில், 2007ம் ஆண்டிலிருந்து திட்டம் தீட்டி, 2009ம் ஆண்டு, தமிழினத்தை அழிக்கும் செயலை, இலங்கை அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இதற்கு, அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்துள்ளது. இலங்கை வீரர்களுக்கு பயிற்சி, ரேடார் மற்றும் ஆயுதங்கள் அளித்தல், இந்திய ராணுவ அதிகாரிகள் இலங்கை சென்று ஆலோசனை வழங்கியது ஆகியன நடந்துள்ளன. இதனால், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என, கோரிக்கை விடுத்தேன். ஆனால், போரை நிறுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என, எம்.பி.,க் களிடம் ராஜினாமா கடிதங்களை, கருணாநிதி வாங்கிக் கொண்டார்.
கருணாநிதி நாடகம்: இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டசபையில், கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். அனைத்துக் கட்சி கூட்டம், மனித சங்கிலி, சட்டசபை தீர்மானம், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வதாக கடிதங்களை பெற்றுக் கொண்டது, பிரதமருக்கு தந்தி, வேலை நிறுத்தம் என, நாடகங்களை நடத்திய கருணாநிதி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. போரை நிறுத்துகிறேன் எனக் கூறி, போரை தீவிரப்படுத்தியது தான் மிச்சம்.போர் நிறுத்தத்துக்கு

உண்ணாவிரதம் இருந்து, போர் நின்றுவிட்டது என, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, இலங்கையை போர்க் குற்றவாளியாக அறிவிக்க, ஐ.நா., சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
மாணவர் போராட்டம்: இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரையில், இலங்கை மீது, இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதே. ஆனால், மத்திய அரசு, இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, இலங்கை வீரர்கள், தமிழகத்துக்கு விளையாட வருவது ஆகியவற்றுக்கு, தடை விதித்தேன். தெற்காசிய தடகள போட்டியை,
சென்னையில் நடத்தக் கூடாது என, தடை விதித்தேன். தற்போது, "இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை, சென்னையில் நடத்தக் கூடாது. கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, வலியுறுத்திஉள்ளேன். ஐ.நா., சபையில், இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, இந்தியா ஓட்டளித்துள்ளது. இச்சூழலில், தமிழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னையில், அ.தி.மு.க., அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வெளிப் படுத்தும் விதமாக இது உள்ளது.
தீர்மானம்: இந்நிலையில், இலங்கையை நட்பு நாடாகச் சொல்வதை, இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை இனப் படுகொலைக்கு, சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை அடிப்படையில், போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். தமிழர்கள் மீதான அடக்குமுறையை, இலங்கை நிறுத்தும் வரை, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் அமைய, இலங்கைத் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், பொது ஓட்டெடுப்பு நடத்த

Advertisement

வேண்டும். இலங்கை மீது, ஐ.நா., பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதற்கு, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தை, சபாநாயகர் தனபால், குரல் ஓட்டெடுப்புக்கு விட்டு, தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார்.
போராட்டத்தை கைவிடுங்கள்: மாணவர்களுக்கு ஜெ., வேண்டுகோள்: ""போராட்டத்தை கைவிட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்,'' என, மாணவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர் பேசியதாவது: இலங்கை அரசின், மனித நேயமற்ற செயல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகளை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும், 100க்கும் அதிகமான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு, அ.தி.மு.க., அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, பிரதிபலிப்பதாக மாணவர்களின் போராட்டம் உள்ளது. அரசியலுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல், இலங்கைத் தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோள்களுக்காக, அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர் நலனில், மாணவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பையே இது வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு எடுத்து வரும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள், விரைவில் மலர உள்ளதை மனதில் கொண்டும், அறப் போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (120)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - Chennai,இந்தியா
28-மார்-201317:27:27 IST Report Abuse
Thiyaga Rajan இதுவும் காலம் கடந்த செயலே.
Rate this:
Share this comment
Cancel
புஸ் இன் பூட்ஸ் - Penang,மலேஷியா
28-மார்-201316:59:56 IST Report Abuse
புஸ் இன் பூட்ஸ் இது வேறயா??
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
28-மார்-201316:59:24 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar கோரிக்கை நியமானவை..,தீர்மானம் பொறுப்பானவை..,பிரச்சனைகள் தீர்க்க நல்ல கருத்தொற்றுமை ஏற்படவேண்டும் இவைதான் சரியானவை கருத்தொற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்பட்டது கருத்துதொற்றுமை ஒரு எண்ணம் அனைவரும் ஏற்படவேண்டும் முதல்வர் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் போராட்டங்கள் விலக்கிட வேண்டும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
28-மார்-201316:49:24 IST Report Abuse
maravan இலங்கை பிரச்னை பற்றி கருணாநிதி மத்திய அரசாங்கத்தை குறை சொல்லி வெளியே வந்து மக்கள் / மாணவர்கள் ஆதரவை பெற முயற்சித்தார். ..முதல்வரின் அதிரடி கருணாவிற்கு மிகப்பெரிய சவுக்கடி. .தமிழ் ஈழம் மலர்ந்தால் அம்மா தமிழர்களின் வரலாற்றில் நீங்க இடம் பிடிப்பார்...கருணா துரோகியாக தீய சக்தியாக கருதபடுவார்....மறவன்...
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
28-மார்-201316:45:22 IST Report Abuse
maravan இந்த ஆட்சியின் மிக பெரிய சாதனை இந்த தீர்மானம்..முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்....MARAVAN
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
28-மார்-201316:16:24 IST Report Abuse
K Sanckar ஒரு மாநில அரசு இப்படி ஒரு தீர்மானம் போடலாமா? ஒருஅன்னிய நாடு இலங்கை. அவர்கள் நாட்டில் வாக்கெடுப்பு நடத்த கோரலாமா?? அதுவும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை வாக்களிக்க கோரலாமா? அப்படியானால் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? இந்திய அரசே இப்படி ஒரு தீர்மானம் போட முடியுமா?? எல்லாவற்றிற்கும் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் திருவாளர் சோ ராமஸ்வாமி அவர்களே பதில் சொல்லட்டும். .
Rate this:
Share this comment
prasanna - Chennai,இந்தியா
28-மார்-201318:50:04 IST Report Abuse
prasannawell said sir...
Rate this:
Share this comment
BATMANABIN - paris,பிரான்ஸ்
28-மார்-201319:28:38 IST Report Abuse
BATMANABINஇந்தியா உள்பட எங்கெங்கு எல்லாம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
28-மார்-201316:08:59 IST Report Abuse
Devanand Louis இல்லங்கை போரின்போது கருனாநிடி ஆட்சில் இர்ருந்தார் அப்பொழுது ஒன்றும் செய்யாமலிருந்தார் ஆகையால் கர்ருனாநிதியை இல்லங்கை போர் குற்றவாளி என்று மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
28-மார்-201315:56:44 IST Report Abuse
amukkusaamy கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது...
Rate this:
Share this comment
Cancel
mahesh - kattumannarkoil,இந்தியா
28-மார்-201315:27:24 IST Report Abuse
mahesh அணைத்து விஷயத்தையும் அரசியலாக பார்க்ககூடாது முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது கட்சி ரீதியாக பார்க்காமல் பொதுவாக இந்த விவகாரத்தை வரவேற்போம் இலங்கை தமிழரின் வாழ்விற்கு ஒளி சேர்ப்போம் வாழ்க தமிழீனம்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
28-மார்-201310:41:16 IST Report Abuse
s.maria alphonse pandian அடைய வேண்டிய இலக்கு தமிழீழமே .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.