மின் பாதை கிடைக்காததால் ஜூனில் தான் மின்சாரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கோடை காலம் நெருங்குவதால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம், மின்பாதை கிடைக்காததால், ஜூன் மாதம் தான் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில், 4,000 முதல் 4,500 மெகா வாட் மின் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 12 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், நாளுக்கு நாள் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த மூன்று மாதம், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மாநிலத்தின் மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. இதனால், மாவட்டங்களில் அமலில் இருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.இந்நிலையில், கோடை பருவம் துவங்கியதால், மின் நுகர்வின் அளவு அதிகரித்ததால், மின்வாரியம் கூடுதல் மின்வெட்டை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கோடை காலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், நெருக்கடியை சமாளிக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக, தினசரி மின் நுகர்வின் அளவு உயர்ந்துள்ளது. கோடை பருவத்தை சமாளிக்க, வெளிமாநிலத்தில் இருந்து, 500 மெகா வாட் கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. மின்பாதை பிரச்னையால், வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்த மின்சாரத்தை, தமிழகத்துக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கொள்முதல் செய்த மின்சாரம், வரும் ஜூன் மாதமே, தமிழகத்துக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (83)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
29-மார்-201302:31:26 IST Report Abuse
Yoga Kannan ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தாங்களாம் ,,,,,,அவங்களுக்கு ஒரே ஒரு பேரன் இருந்தானாம் ,,,, அவனும் வேல வெட்டிக்கு போகாம சோம்பேறியா ஊற சுத்தறதே வேலையா இருந்திருக்கான்... பாட்டிக்கு ஒரே கவலையா இருந்திருக்கு .....இப்படியே இருந்த உறுப்புட மாட்டான்னு ....ஒரு யோசனை செஞ்சிச்சாம்.....பேராண்டி பேராண்டி எனக்கும் வயசாயிடுச்சி நீயும் வேல வெடிக்கு போவ மாட்டுற .... கால காலத்துலunakku கல்யாணம் செஞ்சி பாக்குனுமுன்னு எனக்கு ஆசையா இருக்கு,,,,, இப்படி பாட்டி சொன்னதும் .... பேரனுக்கு.... சந்தோசம் தாங்குல,,,,அதுக்கு நான் என்ன செய்யணும் பாட்டி என்றதும் ,,,,பாட்டி மனசுல உள்ள திட்டத்த சொல்ல தொடங்குனுதாம் ,,,, வேல வெட்டி செய்யலைன்ன உன்ன இந்த மக்கள் மதிக்க மாட்டங்க ,,,சொம்ம்பெரின்னு எவனும் பொண்ணும் தரமாட்டான்...நீ இந்த ஊருல இருந்த வேல செய்ய மாட்ட அதனால பாட்டி நான் ரொட்டி சுட்டு தருவனான் ,,,,,,அசலூருல போய் வேல செய்ஞ்சி காசு பணம் நிறையா சம்பாரிச்சிட்டு வருவியாம்,,,,,, கல்யாண குசியில பேரனும் சரின்னு சம்மதிசானாம் ..... பாட்டி ஒரு பையி நிறையா ரொட்டியை சுட்டு கொடுத்து,,, ஒரு கண்டிஷன் போட்டுதாம் .....எப்போ பசிக்குதோ அப்பெல்லாம் ஒரு ரொட்டி மட்டுமே சாப்பிட வேண்டும் ,,,, இத மீறினா பயில உள்ள ரொட்டிஎல்லாம் கானா போய்டும்... ஆனா நீ போக போற பாதை வெளிச்சமெல்லாம் இருக்காது ,,,பாதையும் சரியா இருக்காது பத்திரமா போகணும் நீ வெளிச்சத்தை பாக்குனுமுன்ன ரொம்ப நாலு நடக்கணும் ,,, நீ எப்ப வெளிச்சத்தை பாக்குறியோ அதான் நீ வேலை செய்யப்போற பட்டணமாக்கும் என்று வழியனுப்பி வச்சிதாம் பாட்டி,,,, பேரனும் நடந்து காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருக்கான் ,,,,,வழியெல்லாம் பகலிலேயே இருட்டா இருக்கு ,,,, பசிஎடுக்கும்போதேல்லாம் பாட்டி சொன்னாப்புல ஒரு ரொட்டி மட்டும் தின்கிறான் ... இப்படியே பல நாள் நடக்கிறான் ஊரு வரவே இல்லை .... பையில் இருப்பது மூணு ரொட்டி மட்டுமே ,,,,, தண்ணீர் தாகம் வேறு ,,,,,நடந்து களைப்பு வேறு .... பக்கத்திலே ஒரு பாழடைந்த கிணறு வேறு இருப்பதை கண்டான் ,,,,, சரி கொஞ்ச நேரம் களைப்பாறி செல்வோம் என்று கிணற்ற்று சுவரில் உட்க்கார்ந்தவனுக்கு பசி எடுத்தது ,,,,, இருக்கும் ரொட்டியோ மூன்று அகோர பசி வேறு.யோசனை செய்தவாறு ,,,,ஒன்றை திங்கவா.... இரண்டை திங்கவா ..... அல்லது மூன்றையும் திங்கவா என்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தான் .... அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த கிணற்றிலிருந்து மூன்று பூதங்கள் வெளியே நடுங்கிக்கொண்டு வந்தன .... ஐயா நாங்கள் தான் இந்தவழியாக வருகின்ற வழிப்போக்கர்களை தின்று வந்தோம்... ஆனால் நீங்கள் எங்களையெல்லாம் விட பல சாலியா இருப்பிங்க போலிருக்கு .... எங்களை ஏதும் செய்து விடாதீர்கள்.....இன்று முதல் நாங்கள் மூவரும் உங்கள் அடிமை என்றது.... ம்ம்ம் கட்டளை இடுங்கள் பிறப்பு என்றது பூதங்கள்....பூதங்கள் கூறியதை கேட்டவன் பேச ஆரம்பித்தான்...நீங்கள் நினைப்பது போல நான் உங்களை திங்க வரவில்லை என்று நடந்த அனைத்தையும் பூதங்களிடம் கூறினான் .....யூகித்துக்கொண்ட பூதங்கள் இங்கே பட்டணம் ஏதுமில்லை ,,,,நீ சோம்பேறியாக இருப்பதால் உன்னை ஏமாற்றி இங்கே அனுப்பி இருக்கிறாள் .....நீ சோம்பேறியாக இருந்தாலும் உன்னுடைய திறமையால் எங்களிடமிருந்து பிழைத்துக்கொண்டாய் ....நீ உள்ளுரிலேயே பிழைத்து முன்னேறு அனுப்பி வச்சிதாம் ,,,,,, அய்யா சாமி எவ்வளவு பில்டப் பன்றதுடா சாமீ ....................
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
29-மார்-201301:10:02 IST Report Abuse
v.sundaravadivelu இந்த ஜூன் வேனாம்யா.. கம்னு அடுத்த ஜூனுக்குக் கொண்டு போயிடுங்கோ.. ஏன்னா, இது, பதிமூணாம் எண் கொண்ட வருடம்.. பதினாளுக்குப் போனா சிறப்பா இருக்கும்.. ஹிஹீஹீஹ்.. ஹய்யூ..ஹய்யோ.. உஸ்ஸ்..... தாங்க முடியலைடா சாமி.. உப்புசத்துல எல்லாமே கழண்டு போச்சு.. எத்தன ஜூன் வந்தாலும் எங்களுக்கு என்னவோ எதுவும் வெளங்கற மாதிரியே தெரியலை.. வேத்து விறுவிருத்தே சாகப் போறோம்..
Rate this:
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
28-மார்-201319:00:42 IST Report Abuse
Mynuddeen Ibrahim எதுக்குய்யா ஜூன் லே கொண்ண்டுவாறேனு சொல்றே ?? கோடை காலம் வரும்னு தெரியாதா? இது போகாத ஊருக்கு வழிகாட்டினார் போல் உள்ளது..தயவு செய்து யாரும் நம்பாதீர்கள்... ஜூன் லேயும் வராது.. என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க.. சென்னை காரங்கே மட்டும் தான் அரசிற்கு வரி கட்டுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
28-மார்-201318:41:25 IST Report Abuse
ravi ramanujam r சென்னைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அந்தஸ்து? அவர்கள் மீது மேலும் ஒரு 2 மணி நேர மின் தடை ஏற்படுத்தினால் தமிழகதிற்கு 5 மணி நேர மின் தடை குறைய வாய்ப்புண்டு. செய்யுமா அரசு? அல்லது வாக்குகளை இழக்க தயாராகிவிட்டதா அதிமுக? தேர்தல் நேரத்தில் இது எதிரொலிக்க வாய்ப்பு அதிகம் என்பதை உணராமல் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
28-மார்-201316:25:56 IST Report Abuse
PRAKASH 2016 வரை இது தீராது ... எழுதி வைத்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
28-மார்-201317:43:30 IST Report Abuse
LAXஒய் திஸ் கொலவெறி?...
Rate this:
Share this comment
Cancel
ram.coimbatore - coimbatore,இந்தியா
28-மார்-201315:07:52 IST Report Abuse
ram.coimbatore நாங்க சொல்லுறது அந்த அம்மா காதுக்கு போகுதானு தெரியல. யாராவது இந்த பொலம்பல அந்த அம்மா காதுக்கு எடுத்துடு போங்க. போர் கால நடவடிக்கை எடுக்க சொல்லுங்க. அமைச்சர்கள் யாரும் அந்த அம்மாகிட்ட மின் வெட்டு பத்தி பேசபோறது இல்ல. உளவு துறை ப்ளீஸ் ஹெல்ப்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201315:02:14 IST Report Abuse
Pugazh V அதாவது வெய்யில் போற வரைக்கும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுங்கள் என்கிறது அரசு. மீறிப் பேசினால், கலைஞரால் தான் கரண்ட் வரவில்லை.. காங்கிரசால்தான் என்று சொல்வார்கள். மக்களும் மஞ்ச துண்டு கருப்பு சட்டை என்று ஏதாவது சொல்லிக் கொண்டு மீண்டும் மறக்காமல் ரெட்டை இலையில் வாக்களிக்கவும், அப்போ தான் தொடர்ந்து புலம்பிகிட்டே இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
nirmal - Bangalore,இந்தியா
28-மார்-201314:42:52 IST Report Abuse
nirmal "கோடை காலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு( ஏப்ரல், மே, ஜூன்) நீடிக்கும் என்பதால், நெருக்கடியை சமாளிக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது" - "வரும் ஜூன் மாதமே, தமிழகத்துக்கு கிடைக்கும்" கோடை காலம் முடிந்த உடன் மின்சாரம் வரும்... ஆனா வரத்து.... :) :) தமிழர்கள் வாழ்கை எங்கும் இருளில்...
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
28-மார்-201314:40:32 IST Report Abuse
Linux செய்திய போடும்போது, எந்த எந்த மின் நிலயங்கள இருந்து தற்போது எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது...எந்தெந்த நிலையங்கள் பழுதடைந்தது ஓடாம இருக்கிறது, எதனால, எவ்வளவு நாளா ஓடல, அதனால எவ்வளவு மின்சாரம் இழப்பு.. இதுல மத்திய அரசு நிலையங்கள் எத்தன, மாநில அரசு நியாயங்கள் எத்தனன்னு வெலாவாரியா போடணும், சும்மா மொட்டையா போட்டா சில அல்ல கைகள் இப்படிதான் பொங்கி வரும்.... இந்த செய்தி திமுக சொம்புகளுக்காக போடப்பட்டது... தங்கமணி என்ஜாய்
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
28-மார்-201317:45:08 IST Report Abuse
LAXஉண்மைதான்.....
Rate this:
Share this comment
Cancel
Nirmalq - Vellore,இந்தியா
28-மார்-201314:39:39 IST Report Abuse
Nirmalq மழை இல்லை என வெயில் காலதிலும், மழை வருகிறது என மழை காலதிலும் கதை சொல்லியே கலங்களை கடத்தி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்