E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வீடு வீடாக சென்று ஆதரவை திரட்ட ஆலோசனை: வெற்றி பெறுமா விஜயகாந்த் திட்டம்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 மார்
2013
23:39

ஆறு எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு, தொண்டர்களை திரட்ட, வீடு, வீடாக சென்று அழைக்க வேண்டும் என, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு, விஜயகாந்த் ஆலோசனை வழங்கி உள்ளார்.
ஆறு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, அனைத்து மாவட்டங்களிலும், வரும், 30ம் தேதி, கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என, விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு, போலீஸ் அனுமதி பெறும் நடவடிக்கைகளில், மாவட்ட செயலர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில், பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுவிலக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை மையப்படுத்தி, தே.மு.தி.க., மகளிர் அணி சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

காரணம், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்த ஒற்றுமை, தற்போது இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிபூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. வருமானத்திற்கு வழியில்லாமல், கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து செலவுகளை செய்து, பல நிர்வாகிகள் அலுத்து போயுள்ளனர். அதேநேரத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அவர்களின் கீழ்மட்ட நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற கருத்தும், பரவலாக உள்ளது. கோஷ்டி பூசலால் துவண்டு போன கீழ்மட்ட நிர்வாகிகளும், பங்கேற்பதை தவிர்த்ததால், தே.மு.தி.க., மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டம், வெற்றியடையவில்லை. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' விவகாரத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதன்மூலம், அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்க வேண்டும் எனவும், பிரம்மாண்ட மாக வெற்றி பெற வேண்டும் தே.மு.தி.க., தலைமை கணக்கு போட்டுள்ளது. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, வீட்டிற்கே சென்று, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அழைக்கவேண்டும். பொதுக் கூட்டத்திற்கான, செலவுகளை கீழ்மட்ட நிர்வாகிகள் தலைமையில் திணிக்காமல், மாவட்ட நிர்வாகிகளே பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களிடம் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது நடைமுறை சாத்தியமாகுமா என்ற குழப்பத்தில், கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
02-ஏப்-201317:15:34 IST Report Abuse
R.Saminathan தமிழகத்தில் வளர்க தே.மு.தி.க.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Balakrishnan - Hyderabad,இந்தியா
28-மார்-201318:29:01 IST Report Abuse
Balakrishnan காமெடி கீமெடி பண்ணாதீங்கப்பா .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
28-மார்-201317:25:18 IST Report Abuse
Krish Sami சரிதான், கோபாலபுரத்தில் துவங்கியா?
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
JAISON - coimbatore,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-201316:04:52 IST Report Abuse
JAISON யாருப்பா இவர் இவரோட குரல எப்பவோ கேட்டமாதிரி தெரியுதே இவர்தான தமிழ் ஈழத்துக்காக குரல் கொடுப்பவர் தமிழ்நாட்டுல இருந்துட்டு தமிழ் ஈழத்துக்காக ஒரு குரல் கூட கொடுக்காத இவர் எப்படி ஒரு தமிழர் உங்களை பத்தி பேச கூட எங்களுக்கு விருப்பம் இல்லை திரு விஜயகாந்த் நீங்க படத்துல மட்டும் தான் நாட்டுக்க கவோ இல்லை தமிழருக்காக கவோ நடிபீர்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
SanSar - chennai,இந்தியா
28-மார்-201315:30:18 IST Report Abuse
SanSar இவரு எப்போ தி மு க வோட சேர போறாரு? அப்போ தான் நாங்க எல்லாம் மொத்தமா இவங்கள ஒதுக்க முடியும், நாட்டுக்கும் நல்லது நடக்கும்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
கார்த்திகேயன் - Coimbatore,இந்தியா
28-மார்-201310:15:45 IST Report Abuse
கார்த்திகேயன் ஏற்கனவே உங்களால தமிழ்நாட்டுக்கு பயன் இல்லைன்னு எங்க மக்களுக்கு நல்ல புரிஞ்சுபோச்சுங்....உங்க டிரௌசர் கிளிஞ்சுபோச்சுங்.... முடிஞ்சா மக்கள்ட அடிவாங்காம வந்துசெருங்க பாக்கலாம்....
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Bharathi - bangalore,இந்தியா
28-மார்-201310:03:56 IST Report Abuse
Bharathi மக்கள் பிரச்சனைக்காக முதலில் போராடுட்டும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
28-மார்-201302:29:41 IST Report Abuse
Sekar Sekaran மக்கள் அனைவருக்கும் தெரியும்..எதற்காக இந்த நடவடிக்கை என்று..இவர் நாக்கை துருத்தி வழிகாட்டினார்..இவரது அடிபொடிகள்..இவரிடம் பேர் பெற வேண்டும் என்பதற்காக "அடிதடி" நடத்தினால்..சட்டசபையா அல்லது குஸ்தி மேடையா? மக்கள் திருப்பி கேட்டால்..இவர் அவர்களை ஒருவேளை அடிக்க பாய்ந்தாலும் பாய்வார்..நிதானத்தில் இருக்க மாட்டார்.முன்கோபி என்று சொல்லுகின்றேன். ஒரே பாடலில் முதல்வர் பதவியை பெறப்போகும் மங்குனி தலைவர் இவராகத்தான் இருப்பார். திமுக வேண்டுமானால் இவருக்கு தொண்டர்களை அழைக்காமலே அனுப்பிவைத்து கூட்டத்தை காட்டுவார்கள்.
Rate this:
90 members
2 members
55 members
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
28-மார்-201302:01:46 IST Report Abuse
கைப்புள்ள குடும்ப அரசியலுக்கு கத்தரி போட்டால் மட்டுமே தேறமுடியும்.
Rate this:
11 members
0 members
39 members
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-மார்-201302:00:01 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மக்களே விஜயகாந்த் வீடு வீடா ஆதரவு கேக்க வந்தா அமைதியா கேட்டுக்கிருங்க இல்லைன்னா அடி ஒன்னும் இடி மாதிரி விழும் ஆஆங்..
Rate this:
16 members
0 members
86 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.