E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரானது: அமெரிக்கா விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 மார்
2013
23:40

வாஷிங்டன்: ""ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம், இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடனான சண்டையின் போது, மனித உரிமை மீறல் நடந்ததாக, ஐ.நா., புகார் தெரிவித்தது.

புகார்: "இது தொடர்பாக ஒளிவு மறைவற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என, சமீபத்தில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா தாக்கல் செய்த இந்த தீர்மானத்தை, இந்தியா நீர்த்து போக செய்து விட்டதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை, துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது. தீர்மானத்தில் இந்தியாவின் ஆலோசனைபடி சில திருத்தங்கள் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இலங்கையுடன் இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது. இந்த தீர்மானத்தை, இந்தியா நீர்த்து போக செய்து விட்டதாக கூறப்படும் புகாரை, ஏற்க முடியாது.

வலியுறுத்தல்: மனித உரிமை மீறல் மற்றும் நல்லிணக்க மேம்பாடு ஆகிய விஷயங்களில், இலங்கை பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த தீர்மானம், நியாயமானது. இலங்கையை பிரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடவில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதிகார பரவல் தொடர்பாக, இலங்கை அரசு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதையும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
30-மார்-201310:57:19 IST Report Abuse
K Sanckar இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் வாசகங்கள் இந்தியாவுக்கு தெளிவாக முன்கூட்டியே தெரியும் அந்த தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்தததும் இந்திய அரசுதான். இதுவும் வெட்ட வெளிச்ச மாகி விட்டது. அன்றைக்கு கூட்டணி அரசில் பதவி வகித்த கருணாநிதிக்கும் இவைகள் தெரியும். காங்கிரஸ் அமைச்சர்கள் வாசன், நாராயணசாமி சிதம்பரம் ஆகியோருக்கும் தெரியும். இவர்கள் இப்போது தீர்மானம் நீர்த்து போனதாக நாடகம் ஆடுகிறார்கள். கருணாநிதி, சிதம்பரம் நாராயணசாமி வாசன் ஆகியோர்தான் நீர்த்து போனவர்கள். இவர்களிடம் உண்மை இல்லை. எல்லாம் பதவிக்கான நாடகம். உண்மை இப்போது வெளி வந்துவிட்டது. மக்கள் பார்த்து கொண்டேதான் உள்ளார்கள். தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
28-மார்-201315:22:13 IST Report Abuse
sethu ஆக பூனை வெளியே வந்துவிட்டது ,நீ அடிப்பதுபோல அடி ,நான் அழுவதுபோல நடிக்கிறேன் இரண்டுபேரும் சேர்ந்து தமிழ் மக்களை முட்டாலாக்குஒம் ,எப்படி கருணாவின் செப்படி வித்தை ,இதற்க்கு தோல்வி மட்டுமே இவர்களுக்கு தண்டனையாக இருக்கக்கூடாது ,மரண அடி என சொல்லுவார்களே அதை இவர்கள் அணு அணு வாக அனுபவிக்கனும் ,இதை பார்த்து அரசியல் துரோகம் எப்படிப்பட்டது என மற்றவர்கள் பயப்படனும் .
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201310:05:17 IST Report Abuse
Pugazh V அகில உலகத்திலேயே, சொந்த நாட்டின் மீதும் சொந்த மாநிலத்தின் மீதும் பற்று இல்லாதவன் இந்தியனாக மட்டுமே இருப்பான். அது என்னவோ பல இந்தியர்களுக்கும், தம்மைத் தாமே கேவலப் படுத்திக் கொள்வதில் ஓர் ஆனந்தம். இது நாள் வரை காங்கிரஸ் தந்த ஆட்சியினை விட பெட்டராக ஆட்சி தர எந்தக் கட்சியால் முடியப் போகிறது என்று பார்க்கத்தானே போகிறோம். இனி வரும் கட்சி காங்கீரசாக இல்லாத பட்சத்தில் , //கடந்த ஆட்சியைக் குறை கூறும் ஓர் அரசுக்கு இப்போதே தயாராகுங்கள். மத்தியில் இனி ஆழ வரும் கட்சி, காங்கிரசைக் குறை சொல்லியே காலத்தை ஓட்டப் போகிறதே தவிர, வேறு ஒன்றும் எதிர்பார்க்க வேண்டாம். டீசல், பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள் - கடந்த ஆட்சியில் காங்கிரசால் வந்த ப்ரச்னை என்று சொல்வார்கள். காங்கிரசின் பெட்ரோலியக் கொள்கை சரியில்லை என்பார்கள். பல முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் போட்டு, அவர்கள் ஜாமீன் வாங்கி, ஜாலியாக இருவரும் கண்ணா மூச்சி ஆடுவார்கள், நாம், அந்த அமைச்சரை திஹாரில் போடு, இந்த அமைச்சரை புழலில் போடு, என்று சொல்லிக் கை தட்டி ரசிப்போம். காங்கிரஸ் அமெரிக்காவுடன் கலந்து ஆலோசித்து போடப்பட்ட இந்த இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் அம்போ என்று போய்விடும், தமிழனும் கவலைப் பட மாட்டான்.
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
28-மார்-201304:14:20 IST Report Abuse
Baskaran Kasimani சீனர்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. இதனால் நன்மைகள் கிடைக்குமானால் கண்டிப்பாக சந்தோசப்படலாம்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Saravanan S - Toronto,கனடா
28-மார்-201303:07:25 IST Report Abuse
Saravanan S அதாவது அமெரிக்காவுக்கு உளவுத் துறை CIA மட்டுமல்ல இந்தியாவும்தான் என்று சொல்கிறீர்களா?
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
28-மார்-201302:42:46 IST Report Abuse
Sekar Sekaran இது இந்தியா கொடுத்த ஒத்துழைப்பு அல்ல..இத்தாலி கொடுத்த தந்திர ஒத்துழைப்பு..போர் குற்றவாளி என்று அறிவித்து ராஜபக்ஷே மீதான நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்த்தது.. இல்லையே..அவரே அவரை விசாரித்து கொண்டு தீர்ப்பையும் அவரே வழங்குவது போலத்தானே உள்ளது. இனப் படுகொலை என்கிற வார்த்தை பிரயோகம் கூட காணப்படவில்லையே..இது நீர்த்துபோன தீர்மானம்தானே? அமெரிக்க மூக்கை நுளைத்துவிட்டது அல்லவா.. இனி இந்த பிரச்சினை புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தான்...
Rate this:
13 members
2 members
32 members
Share this comment
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
28-மார்-201304:43:53 IST Report Abuse
தமிழ்நிலா அதிமுக அடிவருடி....கலைஞர் ஒப்பற்ற தமிழினத்தலைவர்..அவருக்கு நிகர் வேறுண்டோ இவ்வையகத்தில்? அன்னை சோனியா தமிழர் நலனின்பால் அக்கறை கொண்டவர்.. இதய நாயகர் இளவல் ராகுல் பிரதமர் ஆகும் நாள் வெகு தூரம் இல்லை... அப்பொழுது திராவிட மங்கை வேங்கை கனிமொழி துணை பிரதமராக இருப்பார்..அம்மையார் கம்பி எண்ணுவார்....
Rate this:
12 members
0 members
0 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
28-மார்-201302:10:19 IST Report Abuse
விருமாண்டி உணவு இல்லாமல் தவிக்கும் நம் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று வரை ஒரு தீர்மானம் வரவில்லை.., உறங்க இடமில்லாமல் உயிருக்கு ஆபத்தாக சாலை ஓரத்தில் எத்தனையோ ஏழைகள் நம் தமிழ்நாட்டில், , அதற்கு போராட யாரும் வரவில்லை இப்படி எத்தனையோ இருக்கு ... ஹலோ இதற்கு கல்லூரி மாணவர்கள் யாராவது வர்றீங்களாப்பா ....?
Rate this:
71 members
1 members
50 members
Share this comment
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
28-மார்-201304:45:27 IST Report Abuse
தமிழ்நிலா என்றைக்கு திமுக ஆட்சி போயிற்றோ அன்றே ஆரம்பித்து விட்டது ஏழைகளின் தொல்லை....
Rate this:
5 members
0 members
1 members
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
28-மார்-201301:56:42 IST Report Abuse
கைப்புள்ள இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையை கத்தரித்து விட வேண்டும். கொஞ்சம் கத்தரி போட்டு விட்டால் சரியாக போய்விடும்.
Rate this:
0 members
1 members
20 members
Share this comment
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
28-மார்-201304:48:11 IST Report Abuse
தமிழ்நிலா அமெரிக்க ஒபாமா மதிக்கும் இந்திய தலைவர்கள் அன்னை சோனியா மற்றும் கலைஞர்... அவர்கள் உலக அரங்கில் மாபெரும் தலைவர்களாக மிளிர்வது காலத்தின் கட்டாயம். அன்னை சோனியா மற்றும் கலைஞரின் கூட்டணி நாற்பது தொகுதிகளையும் அல்லும்....
Rate this:
6 members
0 members
0 members
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-மார்-201301:54:09 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை ஆகா இந்த தீர்மானம் Made in India வா ? அதான் poor quality யா இருக்கு
Rate this:
8 members
0 members
71 members
Share this comment
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
28-மார்-201304:40:31 IST Report Abuse
தமிழ்நிலா புண்ணாக்கு....
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
appu - madurai,இந்தியா
01-ஏப்-201313:24:31 IST Report Abuse
appuபாசு முதல்ல உங்க படத்த வடிவேலு படமா மாத்துங்க....
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
28-மார்-201301:09:47 IST Report Abuse
தமிழ் சிங்கம் தலைவர் கலைஞரின் வற்புறுத்தலின் பேராலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இல்லையெனில் வழக்கபோல் இந்தியா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும். தலைவர் போரின்போது உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று சொன்ன ஒரு மிரட்டலுக்கு பயந்து போரையே இலங்கை நிறுத்தியது. ஆனால் துரதிர்ஷவசமாக தலைவரால் வயது முதின்மை காரணத்தால், உண்ணாவிருதம் இருக்கமுடியாமல் போனதால், போர் குற்றங்கள் நடந்தேறியது. அதை பார்த்துகொண்டு தலைவரால் சும்மா இருக்கமுடியவில்லை. அதற்காகவே இப்போது ஆட்சியில் பங்கேற்காமல் இலங்கைக்கு எதிராக டெசோவை உருவாக்கி, மீண்டும் சவால் விடுத்துள்ளார். தலைவரை இலங்கை தமிழர்கள் உறுதியுடன் நம்பினால், இலங்கை தமிழர்களின் வாழ்கையில் ஒளிவீசும் காலம் விரைவில் வரும்.
Rate this:
92 members
0 members
24 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.