A prisoner's love story | சிறைப்பறவை வேலூரில் இருக்க... "பச்சைக்கிளி' மதுரையில் இருக்க...: ஒரு கைதியின் "காதல் கதை'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறைப்பறவை வேலூரில் இருக்க... "பச்சைக்கிளி' மதுரையில் இருக்க...: ஒரு கைதியின் "காதல் கதை'

Added : மார் 28, 2013 | கருத்துகள் (11)
Advertisement
A prisoner's love story

மதுரை: ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க., கவுன்சிலர் குமரன் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள விசாரணை கைதி ஒருவர், மதுரை பெண்ணிடம் மொபைல் போனில் "காதல் வளர்த்து' நகை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை ஜீவாநகர் சந்தியா,21. திருமணமானவர். இவர் வீட்டருகே செல்வி என்பவர் வசிக்கிறார். மொபைல் போனில் சென்னை கார்த்திக் என்பவரிடம் செல்வி அடிக்கடி தொடர்பு கொண்டு "கதை' பேசினார். இதை பார்த்த சந்தியா, தானும் கதை பேசுவதாக கூறி, கார்த்திக்கிடம் பேச ஆரம்பித்தார். இருவரும் போனில் "காதல்' வளர்த்தனர். "எனக்கு பண கஷ்டம். பணம் கொடுத்து உதவினா, இரண்டு பேரும் "செட்டிலாகி' விடலாம்' என கார்த்திக் கூறினார். இதை நம்பி, தனது 3 பவுன் நகையை கொடுக்க சந்தியா முன்வந்தார். "நான் வெளியூரில் இருப்பதால், நண்பர்கள் சுரேஷ், முத்துராஜை அனுப்புகிறேன். அவர்களிடம் நகையை கொடு' என கார்த்திக் கூறினார். சந்தியாவிடம் நகையை நண்பர்கள் பெற்றுக் கொண்டபின், கார்த்திக்கின் போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரை தேடி, தனியாக சென்னைக்கு சந்தியா புறப்பட்டார். இதை செல்வி மூலம் அறிந்த கார்த்திக், சந்தியாவின் கணவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ""என் பேரு பிரவீன்குமார். நான் வேலூர் ஜெயில்ல இருக்கேன். அங்கிருந்து உங்க மனைவிகிட்டே "கார்த்திக்' என்ற பெயரில் அடிக்கடி பேசுவேன். இதை நம்பி, என்னை தேடி சென்னைக்கு போயிட்டிருக்கு,'' என்று கூற, "ஷாக்' ஆன கணவர், சந்தியாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு "உண்மையை' எடுத்து கூறினார். வீடு திரும்பிய சந்தியா, நகை மோசடி குறித்து புகார் செய்தார். பிரவீன்குமார் மற்றும் சுரேஷ், முத்துராஜ் ஆகியோர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நண்பர்களிடம் விசாரணை நடக்கிறது.

பிரவீன்குமார் யார்? ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், பிரபல ரவுடி "அப்பள' ராஜாவின் கூட்டாளி. சில மாதங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதூரில், அ.தி.மு.க., கவுன்சிலர் குமரன் கொல்லப்பட்ட வழக்கில், கூலிப்படையாக செயல்பட்டு, சரணடைந்தவர். வேலூர் சிறையில் இருந்து நினைத்த நேரத்தில், கைதி ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு "காதல்' வளர்த்தது, மதுரை போலீசாரையும், வேலூர் சிறை போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathishkumar - mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201304:58:26 IST Report Abuse
sathishkumar LOVE O LOVE LOVE LOVE ........
Rate this:
Share this comment
Cancel
kumari - Trichy,இந்தியா
28-மார்-201317:07:28 IST Report Abuse
kumari ஹாய்
Rate this:
Share this comment
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
28-மார்-201314:51:17 IST Report Abuse
RAJ நாடு எங்க போய்கிட்டு இருக்கு? சிறைல செல்லா? போலிசு திடுக்க? எங்களுக்குதான் திடுக்கு. சிறை செல்வது இப்போ இன்ப சுற்றுலா போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-201313:06:28 IST Report Abuse
IYAPPAN என்னய்யா நாட்டுல நடக்குது, இந்த பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? கொஞ்சம் அசை வார்த்தை பேசினாலே அவன் பின்னாடி நாக்க தொங்க போட்டுக்கிட்டு நாய் மாதிரி போக வேண்டியது,கடைசில அவன் கொண்டு போய் பணத்துக்காக இவளை தீய வேலைகளுக்கு ஈடுபடுத்தி காசு உண்டாக்குவான். பின்னர் ஆண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பெண்ணை சீரழித்த கதை என்று இவர்கள் மேல் ஒரு சிம்பதி உண்டாக்கி விடுவர்.இதற்கும் சில மாதர் அமைப்புகள் கொடி பிடிக்க தொடங்கி விடும்.உண்மையான இருக்கும் கணவன் மார்களுக்கு இது போன்ற சில பெண்கள் துரோகம் செய்வதனால் குடும்ப அமைப்பே சீரழிந்து விடுகிறது.கணவன் மார்களே உங்களுக்கு எதனை கோடிகள் வருமானம் வந்தாலும் உங்க மனிவிகளிடம் வாரம் ஒரு முறையாவது சிரித்து காதல் மொழி பேசுங்கள். உங்கள் மனைவி எப்படி இருந்தாலும் கொஞ்சம் பொய்களை கூறி புகழ்ந்து பாருங்கள்,உங்களை சுற்றியே அவர்களின் அன்பும்,எண்ணமும் இருக்கும். வாழ்கையில்,அலுவலகத்தில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் வீட்டிற்கு வந்த பிறகும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வைக்காதீர்கள். காசு கொடுத்து வாங்க வேண்டாமே புன்னகையும்,புகழ்ச்சியும்,கொஞ்சம் முயற்சித்து பாருங்கள் இது போன்ற நிகழ்சிகள் அறவே நடக்காது.. நமக்கு இதுக்கு எங்கே நேரம் இருக்கு,சூப்பர் ஸ்டார் படத்தில ஒரு ஆள் நூறு பேரை அடிக்கத பார்த்து கை தட்டவும்,எவனோ எங்கேயோ பிறந்தவன் போஸ்டருக்கு,கட் அவுட்டுக்கு பால் உத்தவுமே நேரம் பத்தவில்லை.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
28-மார்-201313:04:09 IST Report Abuse
kumaresan.m "எங்கள் ஊரில் சொல்வழக்கில் ஒரு பழமொழி உண்டு ,செடியில் இருக்கும் ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே? கொடையுதே ?என்று சொன்னால் எப்படி ? இந்த செய்தியும் அதனைத்தான் ஞாபகபடுத்துகிறது ". சாப்பிட்டு விட்டு சும்மாவே இருந்தால் இப்படிதான் செய்ய தோன்றும் ,நண்டு கொழுத்தால் வலையில் தங்காது ???
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
28-மார்-201312:41:22 IST Report Abuse
amukkusaamy ஏண்டி இப்படி அலையறீங்க ...அது என்னாங்கடி "காதல்" கதை...என்ன கதைக்கிரீகள் ...ஓமம்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
28-மார்-201312:39:30 IST Report Abuse
LAX நேர்மையாக கடமையைச் செய்யாமல், கைதிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களை சுதந்திரமாக செயல்படவிடும் இதுபோன்ற காவலர்கள் சோறுதான் தின்கிறார்களா? முக்கியமாக காவல் பணியில் இருந்துகொண்டு, வாங்கும் சம்பளத்துக்கு நேர்மையாக நடந்துகொள்ளாமல், இதுபோன்ற இழிவான பொறுப்பற்ற செயலில் ஈடுபடுவது சாக்கடையில் கொட்டப்படும் கெட்டுப்போன உணவை அள்ளி தின்பதற்கு சமானம். கேடுகெட்ட ஜென்மங்களா.... உங்களைப்போன்றவர்களால் தானே ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்டபெயர்?
Rate this:
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
28-மார்-201312:37:18 IST Report Abuse
manokaran இதுவும் ஒரு சாதனை அல்லவா? போலீஸாரின் மெத்தன போக்கே இதற்க்கு காரணம். ஆளும் கட்சி பிரமுகர்களின் துணையோடு போலீசாரின் உடந்தையோடு இந்தமாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன என்பதற்கு இதைவிட சிறந்த நிகழ்வு வேணுமா?
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
28-மார்-201311:43:41 IST Report Abuse
சகுனி காதல் வளர்த்தேன் ........காதல் வளர்த்தேன் ........காதல் வளர்த்தேன் ........காதல் வளர்த்தேன் ........
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
28-மார்-201309:36:48 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சிறையில் இருந்தபடியே காதல்...அப்படி காதலித்தே ஏமாற்று வேலை. இந்த சிறை தண்டனை இவர்களுக்கு என்ன படிப்பினையை கொடுத்திருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை