E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2013,02:00 IST
கருத்துகள் (1)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை: அரசு மானியத்தில் தென்னை மர காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்த, விவசாயிகள் இடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால், தங்களுக்கு பலன் தராது என, தென்னை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடும் வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தென்னை மரங்கள் பட்டுப்போகும் நிலை உள்ளது. வறட்சியால் தென்னை மரங்களின் காய்ப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது; 50 சதவீதத்துக்கும் மேல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி பகுதிகளில் மகசூல் குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை தவிர்க்க, அரசு புதிதாக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், "அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா' என்ற, மத்திய அரசு நிறுவனம் சார்பில், தென்னை மர காப்பீடு திட்டம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு மற்றும் இயற்கை சீற்றங்களால், தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. திருட்டு, சண்டை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டாலோ, வேண்டுமென்றே பராமரிக்காமல் விடப்பட்டாலோ இழப்பீடுத் தொகை வழங்கப்படமாட்டாது.
பிரிமியத் தொகையில், 50 சதவீதம் மத்திய அரசின்

தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. மீதி 25 சதவீதம் விவசாயிகள் செலுத்தினால் போதும். நான்கு முதல் 15 வயது உள்ள மரங்களுக்கு காப்பீட்டுத் தொகை 600 ரூபாயும், 16 முதல் 60 வயது வரையுள்ள மரங்களுக்கு 1150 ரூபாயும் வழங்கப்படும். ரூ. 600 காப்பீட்டுத் தொகைக்கு மரம் ஒன்றுக்கு ரூ. 4.25 பிரிமியம் செலுத்த வேண்டும். இதில், விவசாயிகள் பங்களிப்பு ரூ. 1.06 மட்டுமே; மீதி அரசு மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோல், ரூ. 1,150 காப்பீட்டுத் தொகைக்கு மொத்த பிரிமியம் ரூ. 5.75. இதில் விவசாயிகள் ரூ. 1.43 செலுத்தினால் போதுமானது. ஒரு எக்டேருக்கு அதிகபட்சம் 175 மரங்கள் காப்பீடு செய்யலாம்; குறைந்தபட்சம் பலன் தரக் கூடிய 10 மரங்கள் சாகுபடி செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக் கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில், தென்னை மர இன்சூரன்ஸ் திட்டம் குறித்து, வேளாண் காப்பீடு திட்ட அதிகாரிகள் விளக்கியபோது, விவசாயிகளின் ஆதரவை பெறவில்லை. விவசாயிகள் சங்க பிரமுகர்கள் கந்தசாமி, பாலசுப்ரமணியம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், தென்னை விவசாயத்தை பொறுத்தவரை மரம் இருக்கிறது; மட்டை இருக்கிறது; காய் இல்லை என்ற நிலை தான் உள்ளது. இன்சூரன்ஸ் திட்டத்தில் பிரிமியம் முக்கியமல்ல; காப்பீட்டுத் தொகை தான் முக்கியம்.

Advertisement

தென்னை மரம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 1150 இழப்பீட்டுத் தொகை அளிப்பது ஏற்புடையதாக இல்லை. எந்த காப்பீட்டு திட்டத்திலும், ஒரு தொழில் இழப்பீடு ஏற்பட்டால், அதற்குரிய இழப்பீடு முழுவதும் வழங்கப்படுகிறது. ஒரு மரம் 10 அல்லது 15 ஆண்டுகள் பட்டுப்போகாமல் இருந்தால் என்ன பலன் தருகிறதோ, அதை இழப்பீடாக தந்தால் தான், முழு இழப்பீடாக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பே, குறைந்தபட்சம் தென்னை ஒன்றுக்கு 6000 முதல் 7000 ரூபாய் வரை வனத்துறை இழப்பீடு வழங்கியுள்ளது. தென்னை இன்சூரன்ஸ் திட்டத்தில் இழப்பீட்டுக்கு பதிலாக ஊக்கத் தொகை தான் வழங்கப்படுகிறது. வனவிலங்குகளால் தென்னை மரங்கள் அழிக்கப்படுவதையும், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவில்லை. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

மறுபரிசீலனைக்கு உத்தரவு:
வேளாண் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் கூறுகையில், "இது முழு இழப்பீடு தொகை அல்ல; விவசாயிகளின் பாதிப்பை போக்கும் விதத்தில் ஊக்கத் தொகை தான்' என்றனர். கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ""ஒரு தென்னை மரத்துக்கு, இழப்பீடாக ரூ. 1150 வழங்குவது என்பது குறைவானது. மரத்தின் வாழ்நாளுக்கு உகந்தமுறையில், இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, இன்சூரன்ஸ் அதிகாரிகள் திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
02-ஏப்-201321:11:26 IST Report Abuse
Chenduraan இப்போதுதான் 4 அல்லது 5 வருடத்தில் காய்க்கும் தென்னை மரக்கன்றுகள் கிடைக்கின்றனவே. தென்னை பட்டும்போனால் வளர்க்கும் பணத்தை காப்பீடாக கொடுத்தாலே போதும். பேராசை பட வேண்டாம் விவசாய தோழர்களே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.