Sanjay Dutt breaks down, says will surrender on April 18 | “ஜெயில் போகும் வரை அமைதியாக இருக்க விடுங்கள் ”-: இந்தி நடிகர் சஞ்சய்தத் கண்ணீர் விட்டு அழுதபடி பேட்டி| Dinamalar

“ஜெயில் போகும் வரை அமைதியாக இருக்க விடுங்கள் ”-: இந்தி நடிகர் சஞ்சய்தத் கண்ணீர் விட்டு அழுதபடி பேட்டி

Updated : மார் 28, 2013 | Added : மார் 28, 2013 | கருத்துகள் (61)
Advertisement

மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் இன்று அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெயில் போகும் வரை குடும்பத்தினருடன் அமைதியாக இருக்க விடுங்கள் எனக் கூறினார். பேட்டி அளித்த நேரத்தில் அருகில் இருந்த தனது சகோதரி தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதார். இது அனைவரையும் உருக வைத்தது.

1993 ம் ஆண்டில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவராக சிறப்பு கோர்ட் மூலம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீலை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் சஞ்சய்தத் சிறைத்தண்டனையை உறுதி செய்ததுடன் 6 ஆண்டை 5 ஆண்டாக குறைத்து தீர்ப்பளித்தது. இதன்படி இவர் ஜெயிலுக்கு செல்ல கோர்ட் சில காலம் அவகாசம் வழங்கியுள்ளது. தீர்ப்பிற்கு பின்னர் அவர் அமைதியாக இருந்து வந்தார். யாரையும் சந்திக்கவில்லை.

தீர்ப்புக்கு பின்னர் சஞ்சய்தத் இன்று வீட்டு முன்பு நிருபர்கள் கூடினர். மனநிலை குறித்து அறிய விரும்புவதாக அங்கு காத்து நின்றனர். அந்நேரத்தில் வெளியே வந்த சஞ்சய்தத் நிருபர்கள் முன்பு பேசினார்.


விரைவில் சரண் அடைவேன்.;

அவர் கூறியதாவது: பத்திரிகைகளுக்கும், மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வ தென்னவென்றால் நான் மிக துயரமான கட்டத்தில் இருக்கிறேன். நான் மிகவும் நொறுங்கி போய் இருக்கிறேன். நான் எனது மீதான தண்டனையை குறைக்க கோரி வலியுறுத்தப்போவதில்லை. எனது தண்டனை குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம். கோர்ட் உத்தரவை மதிக்கும் இந்திய குடிமகன்களில் நானும் ஒருவன். கோர்ட் உத்தரவுக்கு பணிந்து நான் விரைவில் சரண் அடைவேன். இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன். திரைப்படம் தொடர்பான சில பணிகள் முடித்து கோர்ட் அளித்த நேரத்தில் ஜெயிலுக்கு போவேன். அது வரை என்னை, எனது குடும்பத்தினருடன் அமைதியாக வாழ விடுங்கள். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது கிளம்புகிறேன் என எழுந்தார். இந்நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அருகில் இருந்த தனது சகோதரி தோளில் சாய்ந்து அழுதார். இந்நேரத்தில் சகோதரி அவரை தழுவி தேற்றினார்.

நடிகர் சஞ்சய்தத் கிரிமினல் குற்றவாளி அல்ல அவரை விடுவிக்க வேண்டும் என பல தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். இந்நேரத்தில் இவரது கண்ணீர் பேட்டி கூடுதல் அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தார். சில நபர்களை அவரது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பன இவரது மீதான குற்றச்சாட்டு.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sendhil Naathan - Chennai,இந்தியா
28-மார்-201319:10:25 IST Report Abuse
K.Sendhil Naathan சஞ்சய் தத் ஒரு நல்ல நடிகர். அழுவது போல நடிக்கிறார். அவருக்கு விதித்த தண்டனை போதாது. அவருடைய மூலத்தை ஆராய்ந்து பாருங்கள். மேலும் விளங்கும். நாட்டில் தண்டனைகள் கடுமையாக்க படவேண்டும். பிரபலமானவர் என்று அவரருக்கு தண்டனையை குறைத்தால் மற்ற பிரபலங்களும் (சாலமன் கான் உட்பட ) தவறு செய்துவிட்டு பிழைத்த கொள்வார்கள். பிரபலங்கள் தவறு செய்தால் தண்டனை இரட்டிப்பாக தரவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்
Rate this:
Share this comment
Cancel
INDIAN - India  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-201319:01:43 IST Report Abuse
INDIAN no mercy for any celebrity who helped in killing our innocent peoples..... u deserve it !
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
28-மார்-201318:51:28 IST Report Abuse
LAX //"நடிகர் சஞ்சய்தத் கிரிமினல் குற்றவாளி அல்ல" அவரை விடுவிக்க வேண்டும் என பல தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். இந்நேரத்தில் இவரது கண்ணீர் பேட்டி கூடுதல் அலையை ஏற்படுத்தியிருக்கிறது.// - வேற எதுக்கு பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தாராம்? சம்பந்தப்பட்டவரே ஒப்புக்கொண்டாலும் இவங்க சும்மா விடமாட்டாங்க போலருக்கே....? இதில் முன்னாள் நீதிபதி மார்கண்டேயர் வேற....
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
28-மார்-201318:38:24 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது,, தி க வின் சிங்க குட்டிகள்?
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-201318:23:19 IST Report Abuse
 Palanivel Naattaar சஞ்சய் தத் குற்றத்தில் நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும் குற்றவாளிகளுக்கு உதவியது மற்றும் துப்பாக்கி வைத்திருந்தது உள்பட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது,இப்போது இவர் அழுகிறார் அன்று நடந்த சம்பவத்தில் நாடே அழுதது.அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் ''உப்பை திங்கிறவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்'' .
Rate this:
Share this comment
Cancel
don - karur  ( Posted via: Dinamalar Windows App )
28-மார்-201318:00:52 IST Report Abuse
don good acting
Rate this:
Share this comment
Cancel
Kanagaraj Velusamy - bangalore,இந்தியா
28-மார்-201317:57:32 IST Report Abuse
Kanagaraj Velusamy தவறை தவறு என்று தெரிந்து செய்தவனுக்கு கட்டாயம் தண்டனை கொடுக்க வேண்டும். இது உலக நீதி
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
28-மார்-201317:42:57 IST Report Abuse
Arvind Bharadwaj என்னதான் இந்த மனிதர் தீவிரவாதிகளுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தது குற்றம், அதற்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தண்டனையைக் குறைக்கச் சொல்லி வர்புருத்தப்போவதில்லை என்று கூறியதற்காக பாராட்டலாம். இதே நிலையை மேற்கொண்டு மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கலாம். உண்மையான கேப்மாரிகள் யாரென்றால், இந்த மனிதரின் தண்டனையைக் குறைக்கவேண்டும் அல்லது பொது மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று குரலெழுப்பிய பாலிவுட் நடிக-நடிகையர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையின் பழங்கள், மனித உரிமை ஆர்வலர்களே. இவர்களையெல்லாம் லாடம் கட்டி உள்ளே தள்ளி செம கவனிப்பு செய்யும் அதிகாரம் சட்டத்துக்கு இல்லையா.
Rate this:
Share this comment
Cancel
sajho - chennai,இந்தியா
28-மார்-201317:09:24 IST Report Abuse
sajho நடிகர் சஞ்சய்தத் கிரிமினல் குற்றவாளி அல்ல அவரை விடுவிக்க வேண்டும் என பல தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். இந்நேரத்தில் இவரது கண்ணீர் பேட்டி கூடுதல் அலையை ஏற்படுத்தியிருக்கிறது. சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தார். சில நபர்களை அவரது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பன இவரது மீதான குற்றச்சாட்டு.
Rate this:
Share this comment
Cancel
sajho - chennai,இந்தியா
28-மார்-201317:07:48 IST Report Abuse
sajho இதே குற்றசாட்டுதானே அப்சல்குரு மீதும் அவருக்கு தூக்கு, இவருக்கு 3.5 வருசம்...:)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை