15 சவரன் நகை திருட்டு பெண் மீது போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 சவரன் நகை திருட்டு பெண் மீது போலீசில் புகார்

Added : மார் 28, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:வேலை செய்த வீட்டில், 15 சவரன் நகையை திருடியதாக, பெண் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை, வீராசாமி
ஆச்சார்யா தெருவில் வசிப்பவர், கன்னையாலால் மகன் தினேஷ்குமார், 27; போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரின் வீட்டில், அதே தெருவை சேர்ந்த நதியா, 30, என்ற பெண் பணிபுரிந்தார்.
இந்த நிலையில், தினேஷ்குமார் நேற்று, வீட்டில் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த, 15 சவரன் நகை காணாமல் போனது தெரிந்தது.
எனவே, நதியா தான் நகையை திருடியிருக்க வாய்ப்புள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எழும்பூர் போலீசில், தினேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை