கேள்வி நேரத்தில் யாரையும் தாக்கி பேசக்கூடாது எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் வேண்டுகோள்| Dinamalar

தமிழ்நாடு

கேள்வி நேரத்தில் யாரையும் தாக்கி பேசக்கூடாது எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் வேண்டுகோள்

Added : மார் 28, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:""கேள்வி நேரத்தின் போது, யாரையும் தாக்கி பேசக்கூடாது,'' என, சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தும், தி.மு.க., ஆட்சியை குற்றம் சாட்டியும், ஒரு சில வார்த்தைகளை
குறிப்பிட்டார்.
இதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தில், தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமையை அவமதித்து பேசுவது நியாயமானதல்ல; உறுப்பினர் வெங்கடாசலம் குறிப்பிட்டதை, சபை
குறிப்பில் இருந்து நீக்க
வேண்டும் என ,வலியுறுத்தினர்.
இதற்கு சபை முன்னவரான, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ""கேள்வி நேரத்தில், குற்றச்சாட்டு இல்லாமல் உறுப்பினர்கள் பேச வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பேசியதை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
சபை குறிப்பில், உறுப்பினரின் பேச்சு எவ்வாறு பதிவாகி இருக்கிறது என்பதை பார்த்து விட்டு, அதை நீக்குவதா? என்பதை முடிவு செய்வோம் என, சபாநாயகர் குறிப்பிட்டார். இதைதொடர்ந்து,""கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் குற்றம் சாட்டி பேசக்கூடாது; அவ்வாறு, உறுப்பினர்கள் குற்றம் சாட்டி எது கூறினாலும், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும்,'' என்று, சபாநாயகர் தனபால் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை