E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பாரதியார் பல்கலை உள்விளையாட்டு அரங்கம்விரைவில் திறப்பு :இறுதி கட்டத்தில் பணிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
07:18
பதிவு செய்த நாள்
மார் 28,2013 22:50

கோவை:கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த பாரதியார் பல்கலை உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.கடந்த 2005ல், பல்கலை துணைவேந்தராக சுப்ரமணியம் இருந்தபோது,உள்விளையாட்டரங்கம் அமைக்க ரூ.2.5 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது.; செயல்வடிவம் பெற தாமதமானது. இந்நிலையில், கடந்த 2006 ஆக.,ல் துணைவேந்தராக திருவாசகம் பணியாற்றிபோது, பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
2007 பிப்.,24ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. ஆனால், வரமுடியாத காரணத்தால், கல்வெட்டு மட்டும் நடப்பட்டு, திட்டமிட்ட நிதியுடன், ரூ. ஒரு கோடியும் சேர்த்து, மூன்றரை கோடி மதிப்பீட்டில், 2007 மே 30ல் பணிகள் துவங்கின. வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டுத்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கிரிக்கெட், வாலிபால், கபடி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள் கூடுதலாக அமைப்பதற்கு எட்டு ஏக்கர் நிலத்துடன், ரூ.20 கோடி தொகையும் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் உள்விளையாட்டரங்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. கடந்த 2009 ஆக., புதிய துணைவேந்தராக சுவாமிநாதன் பதவிஏற்றார். 2010ல் பணிகள் மும்முரமாக நடைபெற துவங்கின. திட்டமிட்ட நிதிக்கு மேலாக கூடுதலாக ரூ.ஒரு கோடி செலவானாலும், தேவையான பணமும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கடந்த 2012 ஜூன் 9-14 வரை விண்வெளி திருவிழா என்ற சர்வதேச அளவிலானஅறிவியல் மாநாடு பாரதியார் பல்கலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக உள்விளையாட்டரங்கம் தற்காலிகமாக வெள்ளையடித்து, அலங்கரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
2012 செப்.,9ம் தேதி துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை பதவிஏற்ற நிலையில், உள்விளையாட்டு அரங்க பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறுகையில், ""உள்விளையாட்டரங்க பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட பணிக்கென மேலும் ரூ.95 லட்சம் மதிப்பீடு உள்ளது. குறிப்பாக, மரப்பலகையால், உள்விளையாட்டரங்க தரை அமைத்து விட்டால், பணி நிறைவு பெறும்'' என்றார்.உள் விளையாட்டரங்கத்தின் அளவீடுகள்விளையாட்டுத்துறைக்கென ஒதுக்கப்பட்ட 32 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், உள் விளையாட்டு அரங்கம் முழுவதும் 18 ஆயிரத்து 293 சதுர அடி நிலத்தில் அமைந்து வருகிறது.விளையாட்டு போட்டி நடக்கும் இடம் 13 ஆயிரத்து 620 சதுர அடியில் உள்ளது. (72மீ.,நீளம்- 52மீ.,அகலம் ஆகும்.) வாகனம் நிறுத்தவும், அரங்கத்தை சுற்றிலும் அழகிய சிறு பூங்கா அமைக்கவும் 10 ஆயிரம் சதுர அடி நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேல் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை காண நான்கு புறமும் காலரிகள் கட்டப்பட்டுள்ளன. வீரர்-வீராங்கனைகள் 200 பேர் தங்க அறைகள் உள்ளன. அரங்கின் இரு பகுதிகளிலும் கழிப்பறைகளும், குளியலறைகளும் கட்டப்பட்டுள்ளன.
உள் அரங்கத்தில் மழை, வெயில் பாதிக்காத வண்ணம், தரையிலிருந்து 40 அடி உயரத்தில் "கால்வனைசிங் ஷீட்' போடப்பட்டுள்ளது. கபடி, வாலிபால், கூடைப்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து, செஸ், கேரம், டென்னிகாய்ட் போன்ற விளையாட்டுகள் உள் விளையாட்டரங்கில் நடத்த முடியும். பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் கூறுகையில்,""பணிகள் முடிந்ததும், மாநில, தேசிய அளவில் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியுடன் திறப்பு விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்''என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.