Advertisement
காங்., - எம்.எல்.ஏ.,வால் சிரிப்பலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: மத்திய அரசை விமர்சித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இது, தெரியாமல் சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரால், பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.

பட்ஜெட் பொது விவாதத்துக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று பேசினார். அப்போது, தமிழகத்துக்கு உரிய ஒதுக்கீடுகளை, மத்திய அரசு செய்வதில்லை என, விமர்சித்தார். இதற்கு, காங்கிரஸ் சட்டசபை தலைவர் கோபிநாத், எம்.எல்.ஏ.,க்கள் ரங்கராஜன், விஜயதாரணி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிதி அமைச்சரின் கருத்துக்கு, பதில் சொல்லவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில், மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான, ஜான் ஜேக்கப், சபைக்கு வந்தார். இவருக்கு, கட்சியின் சக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தது தெரியாது. ஜான் ஜேக்கப்பின் வருகையைப் பார்த்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிரிக்கத் துவங்கினர்.

தன்னைப் பார்த்து எதற்கு சிரிக்கின்றனர் எனத் தெரியாமல், ஜான் ஜேக்கப் தடுமாறிவிட்டார். அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த, பா.ம.க., எம்.எல்.ஏ., கணேஷ்குமார், ""உங்கள் கட்சியினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்,'' என, கூறிய பின், ஜேக்கப்புக்கு நிலைமை புரிந்தது. சில நிமிடங்களில், ஜேக்கப்பும் வெளிநடப்பு செய்தார்.

இதை கவனித்த நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், பா.ம.க., எம்.எல்.ஏ.,வைப் பார்த்து, ""ஏங்க இருக்கிறவரையும் வெளியே அனுப்பறீங்கன்னு,'' கேட்க, சபையில் சிரிப்பொலி அடங்க சில
நிமிடங்கள் ஆனது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.