Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2013,23:36 IST
கருத்துகள் (22)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கான, வங்கி மாதிரி படிவம் வழங்காததால், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், பெரும் குளறுபடி ஏற்பட்டது. வழக்கம்போல், சாக்குபோக்கு கூறி மழுப்பாமல், தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர், மாணவர்கள், கேள்வியை "தொட்டிருந்தாலே', கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்கள், சுளையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளார். இந்த குளறுபடி எப்படி நடந்தது என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தேர்வில், கடந்த ஆண்டு கேள்விகளை அப்படியே கேட்டு, தேர்வுத்துறை, "சாதனை' படைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்குரிய, வங்கி மாதிரி படிவத்தை, கேள்வித்தாளுடன், மாணவர்களுக்கு வழங்காமல், மாநிலம் முழுவதும், மாபெரும் குளறுபடியை செய்தது தேர்வுத்துறை.

கேள்வி விவரம்: தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், பகுதி ஆறில், 38வது கேள்வியாக, வங்கி செலானை பூர்த்தி செய்யும் கேள்வி இடம்பெறுகிறது. வங்கியில், பணம் போடுவது, எடுப்பது தொடர்பான அறிவு, மாணவர்களுக்கு வளர வேண்டும் என்பதற்காக, இந்த கேள்வி, புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, தேர்வின்போது, கேள்வித்தாளுடன், பூர்த்தி செய்யப்படாத, வங்கி செலானும், மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். மாணவர்கள், அந்த செலானில், தங்களது பதிவு எண்களை பூர்த்தி செய்து, செலானில், காலியாக உள்ள இடங்களில், தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, விடைத்தாளுடன் இணைத்து, அறை கண்காணிப்பாளரிடம் வழங்குவர். இந்த கேள்விக்கு, ஐந்து மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், இந்த வங்கி செலான், மாணவர்களுக்கு வழங்காதது, தேர்வு துவங்கிய, அரை மணி நேரத்தில், தேர்வுத்துறைக்கு தெரிய வந்தது. சென்னையில், கேள்வித்தாள் கட்டுகளை பிரித்த அதிகாரிகள், கேள்வித்தாளுடன், வங்கி செலான் இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக, தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


மாநிலம் முழுவதும் பரபரப்பு: சென்னையில் மட்டும், சில மையங்களில், இப்படி நடந்திருக்கும் என, தேர்வுத்துறை கருதியது. ஆனால், சில நிமிடங்களில், சென்னை முழுவதும் மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும், புதுச்சேரி முழுவதும், வங்கி செலான், கேள்வித்தாள் கட்டுகளுடன் இணைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல், தேர்வுத்துறை இயக்குனருக்கு வந்தது. உடனடியாக, உயர் அதிகாரிகளுடன்,

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆலோசனை கேட்டு, உயர்மட்ட ஆலோசனைப்படி, "கேள்வி எண்ணை எழுதி, வங்கி செலானில் என்னென்ன விவரங்களை பூர்த்தி செய்வார்களோ, அதை, அப்படியே, விடைத்தாளில் எழுதினால் போதும்; ஐந்து மதிப்பெண்கள், சுளையாக வழங்கிவிடுவோம்' என்ற தகவலை, மாணவர்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். அதன்படி, அடுத்த அரை மணி நேரத்தில், இத்தகவல், மாநிலம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இந்த குளறுபடி விவகாரத்தில், வழக்கம்போல் மழுப்பலுடன், ஒதுங்கிக்கொள்ளாமல், "கேள்வியை தொட்டிருந்தாலே, அதற்குரிய ஐந்து மதிப்பெண்களை முழுமையாக வழங்குவோம்' என, தேர்வுத்துறை, உடனடியாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இயக்குனர் அறிவிப்பு:
இது தொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: கேள்வி எண் 38க்கு உரிய வங்கி படிவம், கேள்வித்தாளுடன் இணைக்கப்படவில்லை. மாணவர்கள், கேள்வி எண்ணை எழுதி, வங்கி படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை மட்டும், வரிசை எண்ணிட்டு எழுதிட, உரிய அறிவுரைகள், அனைத்து மையங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த கேள்வி தொடர்பாக, தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாளை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்களுக்கு, உரிய அறிவுரைகள், விடை குறிப்புகள் (கீ-ஆன்சர்) மூலம் வழங்கி, மேற்படி கேள்வியை, மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்களும் முழுமையாக வழங்கப்படும். இதனால், மாணவர்கள், எவ்வித குழப்பமோ, கலக்கமோ அடையத் தேவையில்லை. இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திறமையின்மை காரணமா? கேள்வித்தாள், "லீக்', விடைத்தாள் கட்டுகள் காணாமல் போவது, விடைத்தாள் கட்டுகள், திடீரென தீயில் எரிந்து சாம்பலாவது என, கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுத்தேர்வுகளில், தொடர்ந்து குளறுபடிகளும், குழப்பங்களும் நடந்து வருகின்றன. இருபது லட்சம் பேருக்கு தேர்வுகள் நடத்துவது சாதாரணமான வேலை கிடையாது என்பது உண்மை என்றாலும்,

Advertisement

பல தவறுகள், துறையின் மெத்தனம் காரணமாகவும், திறமையின்மையின் காரணமாகவும் நடக்கின்றன என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"சலான்' கதி
குறித்து விசாரணை: பொதுத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள், மே.வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ரகசியமான முறையில் அச்சிடப்படுகின்றன. பக்கத்து மாநிலங்களில் கூட அச்சிடப்படுவதில்லை. 10ம் வகுப்பு தேர்வை, பள்ளிகள் மூலம், 10.68 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வு மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதுகின்றனர். இதன்படி, 11 லட்சத்திற்கும் அதிகமாக, வங்கி சலானை அச்சடிக்க, தேர்வுத்துறை, "ஆர்டர்' வழங்கி உள்ளது. இந்த சலான்கள் அச்சடிக்கப்பட்டு, கேள்வித்தாளுடன் இணைத்து, தேர்வு மையங்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் கேள்வித்தாள்கள் மட்டுமே, அனைத்து மையங்களுக்கும் சென்றுள்ளன. ஒரு வங்கி சலான் கூட, எந்த மையத்திற்கும் செல்லவில்லை. எனவே, வங்கி சலான் அச்சடிக்கவில்லையா அல்லது அச்சடிக்கப்பட்ட சலான்கள், கேள்வித்தாள்களுடன் இணைக்க, அச்சகம் மறந்துவிட்டதா என, தெரியவில்லை. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராவிடம் கேட்டபோது, ""ஆர்டர் கொடுத்தோம்; ஆனால், கேள்வித்தாளுடன் வரவில்லை. என்ன நடந்தது என, தெரியவில்லை. இது குறித்து, முழுமையாக விசாரணை நடத்தப்படும்,'' என, தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SEKAR - chennai,இந்தியா
30-மார்-201300:15:37 IST Report Abuse
SEKAR தொட்டவனுக்கு மட்டுமல்ல ,விட்டவனுக்கும் அதே அளவிலான மதிப்பெண்கள் வழங்கப்படுவதே நியாயம். கேள்வியின் கேவலத்தைப் பார்த்து , இந்தக் கேள்வியைத் தொடுவது தனக்குக் கேவலம் என்று அவன் விட்டிருக்கலாம் அல்லவா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
29-மார்-201317:19:25 IST Report Abuse
manokaran இதுவும் இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கும் எனவே சாதனைகள் தொடர்ந்தால் மக்கள்வேதனையை யார் தீர்ப்பார்கள் மக்களே விரைவில் தீர்ப்பார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எம் ஜி ஆர் சொன்னது போல நடக்கும் ?????? நடக்குமா ??? பார்ப்போம் கந்தன் சென்னை
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
29-மார்-201316:55:26 IST Report Abuse
Vaithi Esvaran நான் ஆறாம் வகுப்பு படித்த போது '' நீ கடலை பார்த்து இருக்கிறாயா?'' என்று கேள்வி கேட்பார்கள். அதாவது கடல் பற்றி சில வரிகள் எழுதவும் என்று அதற்கு பொருளாம். சில மாணவர்கள் ஆம் அல்லது இல்லை என்று கூட பதில் எழுத கூடும் என்ற சிந்தனை ஆசிரியர்களுக்கு இல்லை.கேட்பதை நேரடியாக புரியும்படி கேட்பது என்ன குற்றம் என்று தெரியவில்லை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Alagu Singam - Coimbatore,இந்தியா
29-மார்-201312:59:47 IST Report Abuse
Alagu Singam கேள்வித்தாள் தயார் ஆனபோது அதை சரி பார்க்க அதிகாரி இல்லையா ? அவர் செய்த குற்றம் தான் இது ஆகையால் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
Cancel
Alagu Singam - Coimbatore,இந்தியா
29-மார்-201312:55:40 IST Report Abuse
Alagu Singam கேள்வி தாளில் மாதிரி சலான் அச்சடிச்சு வைத்தால் இந்த குளறுபடி வந்திருக்காது பரிதாபம் இது தெரியவில்லை?
Rate this:
1 members
0 members
50 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
29-மார்-201311:46:41 IST Report Abuse
MJA Mayuram ஆட்சியின் லட்சனம் தினம்தோறும் வருகிறது.....விளங்கிடும் தமிழ்நாடு
Rate this:
10 members
0 members
62 members
Share this comment
Cancel
justin.chelliah - Lusaka,ஜாம்பியா
29-மார்-201311:42:46 IST Report Abuse
justin.chelliah Every one appeared for the examination has lost the opputunity of attenting this question, so every one should be given 5 marks or the total mark valuation should to 95 and make percentage... How can the students expect that if i att i will get marks? this is unaccep.. Justin, Zambia
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
29-மார்-201313:18:04 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் அப்போ யாருக்கும் சைபர் மார்க் இல்லை ஜாலி...
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
29-மார்-201310:39:31 IST Report Abuse
saeikkilaar குளறுபடி , கிளருபடி, தளருபடி , எல்லாம் வளருபடி உள்ள ஒரு துறை கல்விதுறைதான் எப்ப பார்த்தாலும் எதோ ஒரு பிரசனை அடிபடுவது இந்த துறை தான்
Rate this:
0 members
0 members
50 members
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
29-மார்-201309:58:00 IST Report Abuse
cku தவறு தெரிந்தவுடன் சலானை வரையும்படி கூறி சுமார் 15 - 20 நிமிடம் வீணடித்து மற்ற பகுதிகளையும் அவசரகதியில் செய்யும்படி செய்தவருக்கு என்ன தண்டனை ???
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
Cancel
P.Ravichandran @ PRC - Aruppukottai,இந்தியா
29-மார்-201309:27:14 IST Report Abuse
P.Ravichandran @ PRC Err is human. But it can't criticised purposefully
Rate this:
29 members
1 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.