Sanjay Dutt says will surrender in time, not to seek pardon | சரணடைவேன்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அறிவிப்பு: மன்னிப்பு கோர போவதில்லை என உறுதி | Dinamalar
Advertisement
சரணடைவேன்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அறிவிப்பு: மன்னிப்பு கோர போவதில்லை என உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: ""மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்ய மாட்டேன். கோர்ட் விதித்துள்ள கால அவகாசத்திற்குள் சரணடைந்து, எஞ்சியுள்ள தண்டனை காலத்தை நிறைவு செய்வேன்,'' என, பாலிவுட் நடிகரும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவருமான, சஞ்சய் தத், 53, கூறினார்.
200 பேர் பலி: மும்பையில், 1993ம் ஆண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தூண்டுதலில், 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட, தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த தாக்குதல்களுக்காக, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில், "ஏ.கே., 56' மற்றும் ஒரு பிஸ்டலை நடிகர் சஞ்சய் தத் வைத்திருந்த குற்றத்திற்காக, தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த, "தடா' சிறப்பு கோர்ட், 2007ல், அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்கில், இம்மாதம், 21ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சஞ்சய் தத்திற்கு வழங்கப்பட்டிருந்த, ஆறு ஆண்டு சிறை தண்டனை, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே அவர், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மீதமுள்ள, மூன்றரை ஆண்டுகளை, சிறையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம், 21ம் தேதிக்குள், அவர் கோர்ட்டில் சரணடைந்து, தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, "வெடிகுண்டு வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாத, ஆயுதம் மட்டுமே வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு, மன்னிப்பு வழங்கலாம்' என, பாலிவுட் நட்சத்திரங்களும், சில அரசியல் கட்சி பிரபலங்களும், பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவும் வலியுறுத்தி வருகின்றனர்.

சந்திப்பு: ஆனால், சஞ்சய் தத் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். நேற்று அவர், மும்பை, பாந்த்ராவில் உள்ள தன் வீட்டில், பத்திரிகையாளர்களை சந்தித்து, தன் நிலையை விளக்கினார். இதற்காக, தன் தங்கையும், வடக்கு மும்பை தொகுதி, காங்., எம்.பி.,யுமான, பிரியா தத்துடன் அவர் வந்தார். அழுததால் கண்கள் சிவந்து, கண் கூடுகள் வீங்கிய நிலையில், தளர்வாக வந்தமர்ந்த சஞ்சய் தத், செயற்கைத்தனம் சுத்தமாக இல்லாமல், அழுதபடி பேட்டியளித்தார்.
அழுகை: அழுதபடியும், அடிக்கடி தலையை குனிந்தபடியும், அவர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன். மன்னிப்பு கேட்டு நான் மனு செய்யப் போவதில்லை. கோர்ட் வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள், என் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட்டு, சிறைக்கு சென்று விடுவேன். நான் அதிர்ந்து போயுள்ளேன்; என் குடும்பமே கலங்கிப் போயுள்ளது. ஊடகங்கள் மற்றும் நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், என்னை அமைதியாக வாழ விடுங்கள். இருக்கும் கொஞ்ச நாட்களை, என் குடும்பத்தினருடன் செலவழிக்க விரும்புகிறேன்; கைவசம் உள்ள படங்களை முடித்து கொடுக்க வேண்டியுள்ளது. மன்னிப்பு கேட்டு நான் விண்ணப்பிக்க விரும்பாத நிலையில், அது பற்றி பேசி என்னை கஷ்டத்திற்கு ஆளாக்காதீர்கள். இது, என் வாழ்நாளில் மிகவும் கஷ்டமான காலகட்டம். எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் என் நாட்டையும், மக்களையும் நேசிக்கிறேன்; ஐ லவ் இந்தியா. இவ்வாறு அவர் பேட்டியளித்து, கையெடுத்து கும்பிட்டவாறு, வீட்டிற்குள் சென்றார். அழுது, பேச முடியாமல் தவித்த சஞ்சய் தத்தை, அவ்வப்போது அவரின் தங்கை, பிரியா தேற்றியபடி இருந்தார்.

காங்., மவுனம்: "குற்றம் எதுவும் செய்யாத சஞ்சய் தத்திற்கு, மன்னிப்பு வழங்கலாம், அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு, 161ன் கீழ் அதற்கு வாய்ப்பு உள்ளது' என, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்து வருவது போல, பாலிவுட் நடிகர், சத்ருகன் சின்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர், அமர் சிங், நடிகையும், ராம்பூர் தொகுதி, சமாஜ்வாதி எம்.பி.,யுமான, ஜெயபிரதா உட்பட, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சஞ்சய் தத்தின் தந்தை, பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் சுனில் தத். மறைந்த இவர், காங்., கட்சி சார்பில், எம்.பி.,யாக இருந்தவர். சஞ்சயின் தாய் நர்கீசும், பாலிவுட்டின் பிரபல நடிகையே. சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு கொடுப்பது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர், ரஷீத் ஆல்வியிடம் நேற்று கேட்ட போது, ""கோர்ட்டில் இருக்கும் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை,'' என்றார்.

கட்ஜு விரைவில் மனு: ""சஞ்சய் தத்திற்கும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, 70 வயது சைபுன்னிசாவிற்கும் ஆதரவாக, மன்னிப்பு கோரி நான் விரைவில் மனுத்தாக்கல் செய்வேன்,'' என, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 72, ஜனாதிபதி வழங்கும் மன்னிப்பு குறித்தும், பிரிவு, 161, கவர்னர் மன்னிப்பு வழங்குவது குறித்தும், தெளிவாக விளக்குகிறது. சஞ்சய் தத்தும், சைபுன்னிசாவும் மன்னிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் சார்பில், நான் விரைவில் மனுத்தாக்கல் செய்வேன். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நடிகர் சஞ்சய் தத்தை நான் சந்தித்ததில்லை. அவரிடம் பேசியதும் இல்லை. அவர்கள் இருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைக்காக உதவி செய்வேன். இவ்வாறு, கட்ஜு கூறினார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
29-மார்-201312:14:56 IST Report Abuse
p.saravanan கவலை படாதீர்கள் , எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருப்பார். அதிகாரம் படைத்தவருக்கே மன்னிக்க கூடிய பக்குவமும் இருக்கும்.
Rate this:
62 members
0 members
1 members
Share this comment
Yamunai Thuraivan - Chennai,இந்தியா
29-மார்-201313:14:58 IST Report Abuse
Yamunai Thuraivan ஆமாம். ஆமாம். நீங்க்களும் கஜ்ஜுவோடு சேர்ந்து ஒரு மனு கொடுங்கள்....
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
29-மார்-201310:38:39 IST Report Abuse
sitaramenv கருப்பு தமிழன் இந்திய தமிழன் என்ற இரு வாசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். நிறைய வீடுகளில் திருட்டு நடப்பதாலும், நிறைய இடங்களில் விபச்சாரம் நடப்பதாலும், சட்டத்திற்கு முன் வரும் திருட்டுகளையும் மற்ற குற்றங்களையும் மன்னித்து விடலாமா....? நிறைய அரசியல் வாதிகள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதனால் பிடிபட்ட கொள்ளைக்கார அரசியல் வாதியை மன்னித்து விடலாமா. என்ன நண்பர்களே........சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதை புரிந்துகொண்டு கருத்துக்களை எழுதுங்கள்.
Rate this:
1 members
1 members
59 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-மார்-201310:17:33 IST Report Abuse
mirudan ஜெயிலுக்கு போவதென்று முடிவு செய்த பிறகு அழுது ஆர்பாட்டம் தேவை அற்றது
Rate this:
1 members
0 members
30 members
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-மார்-201308:57:43 IST Report Abuse
PRAKASH தப்பு பண்ணிட்டு என்ன அழுகை ?? நல்ல நடிப்பு
Rate this:
2 members
0 members
48 members
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
29-மார்-201308:48:56 IST Report Abuse
Eswaran Eswaran கணம் கோர்ட்டார் அவர்களே யாருக்காவது நீங்கள் தண்டனை கொடுக்கும் பொழுது அவர் கண்கள் வீங்க அழுதால் அவர் பாவம் அப்பாவி,நிரபராதி என்பதை உணர்ந்து கொண்டு அவர்களை விடுதலை செய்து விடுங்கள்.
Rate this:
1 members
0 members
40 members
Share this comment
Cancel
vasanth - chennai,இந்தியா
29-மார்-201308:26:02 IST Report Abuse
vasanth இதுவே ஒரு சாதாரண ஆல இருந்தா சரண் அடையா நேரம் கொடுபின்களா? தீர்ப்பு வந்த அடுத்த நிமிடம் கைது பண்ணி இருபங்க, இந்த நடிகனுக்கு மட்டும் ஏன் இவளவு நேரம்? முதல அவன கைது பண்ணுங்க
Rate this:
2 members
0 members
52 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
29-மார்-201311:29:06 IST Report Abuse
LAXரொம்ம்ம்ம்ப ஆக்கப்பூர்வமான பணிகள முடிக்கறதுக்காகத்தான் இந்த கால அவகாசம். என்ன பணிகள்னா.... நடிச்சுக்கிட்டு இருக்கற சினிமாக்கள முடிச்சுக்கொடுக்கணுமாம்.......
Rate this:
2 members
0 members
20 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
29-மார்-201301:33:35 IST Report Abuse
Vettri குற்றவாளி சஞ்சய் தத்திற்கு பதிலாக அவருக்கு வக்காலத்து வாங்கும் மார்கண்டேய கட்ஜு அல்லது திக்விஜய் சிங் அல்லது காங்கிரஸ் கட்சி பிரமுகர்களை மூன்றரை வருடம் ஜெயிலில் அடைத்து விடலாம். இப்படி சொன்னால் இந்த அல்லக்கைகள் எல்லாம் துண்ட காணும் துணிய காணும் என்று ஓடி விடுவார்கள்.
Rate this:
2 members
0 members
96 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
29-மார்-201301:27:42 IST Report Abuse
jagan இந்த ஆள் மும்பை மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்......(தீவிரவாதிகளை தன் வீட்டில் தங்க/திங்க வைத்ததற்காக)..........அடுத்த நம்பர் யாருக்கு.....சல்மான் கானா? சீக்கிரம் உள்ளே போடுங்க.......
Rate this:
2 members
0 members
62 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
29-மார்-201300:38:04 IST Report Abuse
தமிழ் சிங்கம் ஒரே ஒரு ஏகே 56 வைத்து இருந்ததற்கு எதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். பீகாரில் போய் வீட்டிற்கு வீடு எல்லா ஆயுதங்களும் வைத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் என்ன சிறைக்கா செல்கிறார்கள்?
Rate this:
53 members
2 members
6 members
Share this comment
Indiya Tamilan - Madurai,இந்தியா
29-மார்-201303:08:30 IST Report Abuse
Indiya Tamilan பீகார் மட்டுமல்ல உத்திரபிரதேசத்திலும் கூட துப்பாக்கிகள் இல்லாத வீடுகள் குறைவுதான். ஆனால் அதற்க்கு காரணம் சட்டம் ஒழுங்கு பிரச்னை அங்கு மிக சீர்குலைந்துள்ளதே. அந்த நிலைமை குடிகார மாநிலமான தமிழகத்திற்கும் இப்போது வந்துவிடும் போல உள்ளது....
Rate this:
7 members
1 members
25 members
Share this comment
Indiya Tamilan - Madurai,இந்தியா
29-மார்-201303:57:56 IST Report Abuse
Indiya Tamilan இங்கு சஞ்சய் தத்தை பற்றி பல தமிழர்களும் அவருக்கு எதிராக வாய்க்கு வந்ததை எழுதுகிறார்கள் அவருடைய வாழ்க்கை பின்னணி எப்படி இருந்தது என்று தெரியாமல். அவர் தவறு செய்துள்ளார் அதற்க்கு அவர் மீதம் உள்ள தண்டனையை அனுபவிக்க வேண்டும்தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இன்று சஞ்சய் தத்திற்கு ஆதரவாக பல பிரபலங்கள்,தலைவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்றால் அவருடைய தந்தை நடிகர் மட்டுமல்ல சமுக தொண்டு செய்வதிலும் ஆர்வமாக இருந்ததால் அவரை பாராளுமன்றத்திற்கு மும்பையில் மூன்று முறை தொடர்ந்து மக்கள் தேர்வு செய்தனர்.அவருடைய மகன் என்ற காரணத்தினாலும் அவருடைய தாய் புற்று நோயால் இறந்தபின் கவனிக்க ஆள் இல்லாததால் கவலையில் சஞ்சய் தத் தனது இளம் வயதில் போதை மருந்துக்கு அடிமையாகி மீண்டு வர முடியாமல் இருந்த அவரை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் தந்தை அவரை மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார் அதன்பின்னர் சஞ்சய் தத் தனது உழைப்பால் ஒரு நல்ல இடத்தை திரைஉலகில் உருவாக்கி கொண்டார் அதாவது திருந்த முடியாத ஒருவன் திருந்தியதற்கு ஒரு உதாரணமாக அவரை எல்லோரும் அறிவார்கள் அதனால் அவர்மீது ஏற்பட்ட பரிதாபமும் ஒரு காரணம். சஞ்சய் தத் ஊடகங்களுக்கு முன் மனம் உடைந்து சரிவர பேசமுடியாமல் அழுதது நடிப்பு அல்ல தனது தவறை உணர்ந்து இருபது வருடங்களாக பல அவமானங்களை,கஷ்டங்களை சந்தித்த ஒருவனின் உண்மையான அழுகை அது. அவரை தங்கள் தவறை கடைசி வரை உணராத அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனமான ஒன்று. மன்னிப்போ,தண்டனையோ அதை தீர்மானிக்கும் இடத்தில இருப்பவர்கள் தீர்மானிக்கட்டும். அடுத்து முன்னாள் நீதிபதி கட்ஜு அவர்களுக்கு சஞ்சய் தத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அவரே தத்திற்கும்,70 வயது சைபுன்னிசாவிற்கும் ஆதரவாக, மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்கிறார்...
Rate this:
44 members
1 members
22 members
Share this comment
Pandidurai Kannan - Singapore,இந்தியா
29-மார்-201306:24:16 IST Report Abuse
Pandidurai Kannanஹலோ ஏகே 56 வைதிருததற்கு மட்டும் இவரை கைது செய்யவில்லை,என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
3 members
0 members
61 members
Share this comment
Pandidurai Kannan - Singapore,இந்தியா
29-மார்-201306:26:01 IST Report Abuse
Pandidurai Kannanஇது நல்ல பிள்ளைக்கு அழகு, இப்ப எப்புடி இருக்கு மொகரக் கட்டை?ராஸ்கல்...
Rate this:
4 members
0 members
32 members
Share this comment
Global Citizen - சென்னை,இந்தியா
29-மார்-201308:35:12 IST Report Abuse
Global Citizen@India Tamilan : என்ன சார் எதோ சஞ்சய்தத் தின் வாழ்க்கை வரலாறு எழுதுவதாக நினைப்போ... எல்லாருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கத்தான் செய்யும்... அப்பா, தாத்தா செய்த நல்ல செயல்களும் எல்லாருக்கும் இருக்கு... ஒருவன் செய்த தவறுக்கு அவனேதான் தண்டனை பெறவேண்டும்... அவன் பாரம்பரியத்தை இதிலே நுழைத்து சமுதாயத்தின் கருணையைப் பெற முயற்சிக்கக் கூடாது. செய்த தவறுக்கு தண்டனை என்கிற அளவிலேதான் இதனைப் பார்க்கவேண்டுமே தவிர அதனை விடுத்து ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி வகுக்கக் கூடாது....
Rate this:
1 members
0 members
36 members
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201311:07:48 IST Report Abuse
K.Sugavanamநல்ல பிள்ளையா இருந்தா டாவூடிடம் எதுக்கு நட்பு.அப்புறம் எதுக்கு ஆயுதங்கள் இவரோட வீட்டு வழியா சப்பளை செய்தனர்.இவர் எதுக்கு அதில கொஞ்சம் இவர் சொந்த உபயோகத்துக்கு வெச்சுகிட்டார்?இங்க நரிக்குறவன் துப்பாக்கி வெச்சிருந்தாலெ உள்ள போகணும்.அவரு விட்டா ரெண்டு பீரங்கியே வெச்சிகிட்டு இருப்பாரு போல.இப்[போவந்து நான் அப்புறானின்னா மக்கள் நம்புவாங்களா? இல்லே சட்டத்தில் தான் இடம் இருக்கா?வாழ்க்கையில பலருக்கும் பல கசப்பான அனுபவங்கள் இருக்கலாம்.அதுக்காக அவங்க செய்யிற கேப்மாரிதனத்தை எல்லாம் ஏத்துக்க முடியாது..அதில உச்ச கட்டம் அந்த ஏ கே 56 துப்பாக்கிய துண்டு துண்டா வெட்டி சாட்சியத்தை அழிக்க முனைந்தது எதுக்கு?இந்திய தமிழன் இதுக்கு பதில் சொல்லுங்க.பாக்கலாம்.....
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-மார்-201300:34:24 IST Report Abuse
Thangairaja பிஜேபிக்கு பயந்து மீண்டும் ஒரு காங்கிரஸ் விசுவாசிக்கு உதவி செய்ய தயங்குகிறது காங்கிரஸ்....இப்போது காங்கிரஸ் பெயரில் பா ஜ க தான் ஆட்சி நடத்துகிறது போலும்.
Rate this:
22 members
0 members
2 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
29-மார்-201306:47:28 IST Report Abuse
S.Govindarajan.சஞ்சய் தத் துப்பாக்கி வைத்து இருந்தது மட்டுமல்ல .தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். தனி நபரை விட நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம்....
Rate this:
0 members
1 members
55 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்