Will manmohan government survive after Mulayam withdraw his support? | முலாயம் காலை வாரினால் மன்மோகன் சிங் அரசு தப்புமா?| Dinamalar

முலாயம் காலை வாரினால் மன்மோகன் சிங் அரசு தப்புமா?

Updated : மார் 30, 2013 | Added : மார் 28, 2013 | கருத்துகள் (20)
Advertisement
Will manmohan government survive after Mulayam withdraw his support?

சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங்கின், காங்கிரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய பேச்சுக்களால், இரு கட்சிகள் இடையேயான உறவு, விரைவில் துண்டிக்கப்படலாம் என, நம்பப்படுகிறது. ஆனாலும், ஐந்தாண்டு பதவிக்காலத்தை, முழுமையாக முடிக்க வேண்டும் என்பதில், தீவிரமாக உள்ள, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பீகார் மற்றும் மேற்குவங்க முதல்வர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்தியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த போது, அதில், பலம் பொருந்திய கூட்டணிகளாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இருந்தன. இந்த இரு கட்சிகளும், தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன. சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்த பிரச்சனையால், திரிணமுல் காங்., வெளியேறிய போது, மத்திய அரசுக்கு பெரிய அளவில், அச்சுறுத்தல் இல்லை.


விமர்சனம்: முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை, வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்ததே அதற்கு காரணம். ஆனால், தி.மு.க., வெளியேறிய பின், காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார், முலாயம் சிங். இதனால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, அவர் எந்த நேரத்திலும் விலக்கிக் கொள்ளலாம்; அரசு கவிழலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுதொடர்பான, வதந்திகளும் உலா வருகின்றன.


முலாயம் சிங்கின், சர்ச்சைப் பேச்சுக்கள் குறித்து, டில்லியில், நேற்று காங்., வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசிலிருந்து, தி.மு.க., விலகிய பின், முலாயம் சிங்கின் பேச்சு மாறி வருகிறது. இதை, காங்., கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும், எதற்கும் அவசரப்படக் கூடாது என, நினைக்கிறது. லோக்சபாவுக்கு முன்னதாகவே, தேர்தல் வர வேண்டும் என்பது, முலாயம் சிங்கின் திட்டம். ஆனாலும், முலாயம் சிங்கின் எண்ணம் நிறைவேற, பிற கட்சிகள் ஒத்துழைப்பு தரும் என, சொல்ல முடியாது.


சோதனை: மத்திய அரசின் பெரும்பான்மை பலத்திற்கு, சோதனை ஏற்பட்டுள்ளது என்பதை, மறுக்க முடியாது. தற்போது, முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரே முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத் தொடர், ஏப்., 22ம் தேதி, துவங்குகிறது. மத்திய அரசை, முலாயம் சிங் விமர்சித்து வந்தாலும், அரசு நம்பிக்கை ஓட்டு கோர வேண்டும் என, எந்தக் கட்சியினரும், இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை. அதுதொடர்பாக, "நோட்டீஸ்' அளிக்கும் திட்டமும், எந்த கட்சியிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை, முலாயம் சிங் தன் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தாலும், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, காங்., தயாராகவே உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய, மம்தா பானர்ஜியை, மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர, முயற்சிகள் துவங்கியுள்ளன. தேர்தலுக்கு முன், மீண்டும் மத்திய அமைச்சரவையில், திரிணமுல் காங்கிரஸ், இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. "கடன் நெருக்கடியில் இருக்கும் மேற்குவங்க மாநிலம், அதிலிருந்து மீள, மத்திய அரசு உதவ வேண்டும்' என்பதே, மம்தாவின் கோரிக்கை. அதை நிறைவேற்றி விட்டால், அவர் நிச்சயம் மத்திய அரசுக்கு ஆதரவு தருவார்.


இடதுசாரிகள்: அத்துடன், லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரசுடன் கூட்டணி சேரவும் அவர், தயக்க மாட்டார். ஏனெனில், தன்னால் வீழ்த்தப்பட்ட இடதுசாரிகள், லோக்சபா தேர்தலில், மீண்டும் புனர்ஜென்மம் எடுத்து விடக்கூடாது என, மம்தா கருதுகிறார். ஒரே நேரத்தில் காங்கிரசையும், இடது சாரிகளையும் எதிர்த்து, தேர்தலை சந்திப்பது சரியாக வராது என்பதும், அவரது கருத்தாக உள்ளது. அதனால், மம்தா கேட்கும் அளவுக்கு, அம்மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்காவிட்டாலும், குறிப்பிட்ட அளவுக்காவது, மத்திய அரசு வழங்கும். அதன்மூலம், மம்தா மனம் மாறுவார். அத்துடன், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின், சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரிக்கை குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, மத்திய திட்ட கமிஷனுடன் ஆலோசனைகள் நடக்கின்றன. பீகார் அரசின் நிதியுதவி கோரிக்கையையும், மத்திய அரசு நிறைவேற்றி விட்டால், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு, மத்திய அரசு கிடைத்து விடும். அதனால், முலாயம் சிங் என்ன தான் பேசினாலும், அதை காங்., பெரிதாக பொருட்படுத்தாது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, லோக்சபாவில், அரசுக்கு எதிராக, யார் என்ன தீர்மானம் கொண்டு வந்தாலும், சபையில் எண்ணிக்கை பலத்த நிரூபிக்க தேவையான, ஆரம்பகட்ட வேலைகள் துவங்கி விட்டன. அதனால், அரசுக்கு எந்த சூழ்நிலையிலும் பிரச்சனை வராது. இவ்வாறு, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:47:33 IST Report Abuse
K Sanckar பேசிக்கொண்டே இருப்பதில் பிரயோஜனம் இல்லை. நடவடிக்கை தேவை. முலாயம் சிங்க் சி பி ஐ க்கு பயப்படுகிறார் போலும்
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31-மார்-201316:35:19 IST Report Abuse
சு கனகராஜ் மடியில் கணம் இருப்பதால்தானே வழியில் பேட்டியில் பினாத்தி கொண்டிருக்கிறார் ...
Rate this:
Share this comment
Cancel
karai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-201316:08:12 IST Report Abuse
karai Ha ha Mulayam avar Kala avara nama mattaru
Rate this:
Share this comment
Cancel
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
29-மார்-201314:58:51 IST Report Abuse
A.S.VENKATESAN எனக்கு ஆளும் கட்சி , எதிர் கட்சி என்ற பேதம் தெரியலை. எல்லாம் மக்களை எமற்றும் கூட்டம் தான்.
Rate this:
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
29-மார்-201312:11:54 IST Report Abuse
rajaguru முலாயம் ஒரு காலை வாரினால் மற்ற ஒரு காலை வார கருணா காத்திருக்கிறார் பின்னர் இருவரும் சேர்ந்து மூன்றாவது அணிக்கு முன்னேற்பாடு
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201310:54:14 IST Report Abuse
K.Sugavanam நேதாஜியை பத்தியும் பெஹ்ன்ஜியை பத்தியும் காங்கிரசுக்கு நல்லாவே தெரியும்.எப்ப எப்புடி கடுக்கா குடுத்தா கதறிக்கிட்டு காலடிக்கு வருவார்கள் என்பதும் தெரியும்.இப்ப தானே ஆரம்பம்.அதனால கயித்தெ கொஞ்சம் லூசா உட்ருக்காங்க.ரொம்ப பம்மினா ஒரு சொடக்கு தான்,எல்லாம் அம்பேல் ஆயிடுவாங்க..
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
29-மார்-201310:44:11 IST Report Abuse
ganapati sb ஊழலில் சிக்கியிருக்கும் காங்கிரேசை ஊழல்கள் செய்த முலாயம் மாயா கருணா ஜெயா சரத்பவர் லாலு ஜகன் போன்றவர்கள் தான் வேறு வழியின்றி ஆதரிப்பார்கள் நிதிஷ் மம்தா நவீன் நாயுடு போன்ற சிபிஐ / சொத்து குவிப்பில் சிக்காதவர்கள் ஆதரிக்கமட்டர்கள்
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201317:19:43 IST Report Abuse
K.Sugavanamபங்காரு லக்ஷ்மணை விட்டுட்டீங்களே..கேமரா முன்னால வாங்கி மாட்டிய ஒரே அரசியல் கட்சி தலைவர்,அதற்காக தண்டனையும் அனுபவித்தவர்..அவரை விட்டா நல்லா இல்லே..லிஸ்டுல சேருங்க சார் கணபதி.....
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
29-மார்-201309:43:36 IST Report Abuse
Linux மன்மோகன் சிங் அரசு தப்புமா? என்னது மன்மோகன் சிங்கு அரசா? காமடி பண்ணாதீங்க.
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201317:20:38 IST Report Abuse
K.Sugavanamஅவரே அப்படி சொல்வதை விரும்ப மாட்டார்.....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31-மார்-201316:34:34 IST Report Abuse
சு கனகராஜ் சோனியாவின் கைப்பாவை அரசு என்று சொல்லலாம் ...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
29-மார்-201307:53:27 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இந்த ஆளு ஒரு ஒன்னாம் நம்பர் பிராடு .... இவரை நம்பி ஏன் உங்கள் பத்திரிக்கையின் பொன்னான பக்கங்களை வீண் அடிகிரிங்க? அப்படியே இவர் காலை வாரினாலும் அடுத்தவாரம் நம்ம தாத்தா மாதிரி, காலை வாரியதால் ஒரு பயனும் இல்லை என்று சொல்லி மீண்டும் வெளியில் இருந்து ஆதரவு, விளக்கு எண்ணையில் இருந்த ஆதரவு, மதவாத சக்திகளை விரட்ட ஆதரவு என்று அறிக்கை இப்போதே தயார் செய்து வைத்து இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
29-மார்-201302:23:36 IST Report Abuse
Indiya Tamilan எவ்வளவு சீக்கிரம் முலாயம் இந்த உருப்படாத அரசின் காலை வாருகிறாரோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு விடிவு பிறக்கும்.பிறக்கவேண்டும். அந்த நல்ல காரியத்தை முலாயம் தாமதபடுத்த கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
29-மார்-201302:00:49 IST Report Abuse
Krish Sami தப்பும். ஆனா, தப்ப கூடாதே
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31-மார்-201316:30:13 IST Report Abuse
சு கனகராஜ் குதிரை பேர ஊழல் நடந்து பெரும்பான்மையை நிருபிப்பார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை