Gujarat Chief Minister Narendra Modi meets US delegates | முதல்வர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க எம்.பி.,க்கள் சந்திப்பு| Dinamalar

முதல்வர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க எம்.பி.,க்கள் சந்திப்பு

Updated : மார் 30, 2013 | Added : மார் 28, 2013 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Gujarat Chief Minister Narendra Modi meets US delegates

காந்தி நகர்: குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, அமெரிக்க எம்.பி.,க்கள் மற்றும் வர்த்தக குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.
அமெரிக்க குடியரசு கட்சியைச் சேர்ந்த, இல்லினாய்ஸ் மாகாண எம்.பி., ஆரோன் ஷோக் தலைமையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க குழு, இந்தியா வந்துள்ளது. அதில், வெளிநாடு வாழ் இந்தியர், ஷாலப் குமாருடன், பல எம்.பி.,க்களும், தொழிலதிபர்களும் வந்துள்ளனர். நேற்று இந்த குழுவினர், முதல்வர், நரேந்திர மோடியை, காந்தி நகரில் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு வாய்ப்பு போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டது. அதில், அமெரிக்காவுக்கு வரும்படி மோடியை, அக்குழுவினர் வரவேற்றதாக கூறப்படுகிறது. எனினும், 2002ம் ஆண்டு முதல், அவருக்கு, "விசா' மறுக்கப்படும் நிலையில், "விசா' வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக எக்கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. முதல்வர் மோடியை சந்தித்த பின், அமெரிக்க குழு, சபர்மதி ஆசிரமம், அக்ஷர்தாம் கோவில், சூரியநாராயணன் கோவில் போன்ற இடங்களை பார்வையிட்டது. குஜராத்தில், தொடர்ந்து, நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற மோடியை, அமெரிக்க பார்லிமென்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தவர், இந்த குழுவுக்கு தலைமை வகித்துள்ள எம்.பி., ஆரோன் ஷோக் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க குழு, திருப்பதி, பெங்களூரு, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் நகரங்களுக்கும் செல்ல உள்ளது. பா.ஜ., தலைவர்கள், சுஷ்மா சுவராஜ், அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திக்க உள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yesubalan - coimbatore,இந்தியா
29-மார்-201311:04:10 IST Report Abuse
yesubalan மோடி அந்நியர்களுக்கு விருந்து வைத்தால் ,நாட்டின் வளர்ச்சி ,மற்றவர்கள் அந்நியர்களை உபசரித்தால்,நாட்டை விலை பேசுகிறார்கள் ,என்ற குருட்டு பார்வையில் ,நாட்டின் கரிசனம் தெரியவிலலை
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-மார்-201314:46:07 IST Report Abuse
Nallavan Nallavanஉங்களுக்கு இது வித்தியாசமாகப் படுகிறது எனக்குக் காரணம் புரியவில்லை மோதியை இவ்விஷயத்தில் படித்தவர்கள் ஆதரிக்கக் காரணம் மோதி சுயநலமற்ற, மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வெறியுள்ள நேர்மையான தலைவர் என்பதுதான் மற்றவர்கள் எப்படி என்று நான் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
29-மார்-201310:30:50 IST Report Abuse
ganapati sb மோடி ஒரு முறை சொன்னார் ஐரோப்பா அமரிக்க என்று பார்ப்பது என் வேலை அல்ல குஜராத்தை அந்த நாடுகளை விட உயர்த்தி அவர்களை இங்கே வர வைப்பேன் என்று நேற்று பிரிடன் வந்தனர் இன்று அமெரிக்கர் வந்துள்ளனர் நாளை உலகமே நல்ல தலைவராக பிரதமராக மோடியை போற்றும்
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
29-மார்-201308:45:24 IST Report Abuse
JALRA JAYRAMAN அமெரிக்கா பாராட்டுக்கு ஏன் இவ்வளவு ஏங்குகிறார் மோடி
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
29-மார்-201311:51:15 IST Report Abuse
TamilArasanமோடி அவர்கள் ஏங்க வில்லை, ஆனால் மோடி அவர்களின் நல்லாட்சியை கண்டு உலகின் பல நாட்டு தலைவர்கள் பாராட்டி சென்றுள்ளனர்அதில் இந்த அமெரிக்க எம்.பி.,க்கள் குழுவும் அடக்கம்......
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-மார்-201314:49:14 IST Report Abuse
Nallavan Nallavanஅவர் ஏங்கவில்லை அவரை எதிர்ப்பவர்கள்தான் "அமெரிக்கா ஏதாவது குறை சொல்லாதா? மதவெறிக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தாதா?" என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறார்கள் காரணம் அமெரிக்காவின் கருத்துக்கு உலகளவில் உள்ள செல்வாக்கு மோதியை எதிர்ப்பவர்களுக்கு (இந்தியா சுதந்திரம் அடைந்து கூட) அடிமைப் புத்தி போகவில்லை அமெரிக்கா விசா மறுப்புச் செய்ததையே உலக அளவில் பிரபலம் அடைவதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார் மோதி ...
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
29-மார்-201302:31:36 IST Report Abuse
Indiya Tamilan மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்பதை உலகின் பெரியண்ணா அமெரிக்காவும் புரிந்து கொண்டுவிட்டதன் விளைவுதான் கடந்த பல மாதங்களாக பல தரப்பினரும் அவரை சந்தித்துகொண்டிருப்பது. மோடி பிரதமர் ஆனால்தான் இலங்கை போன்ற சுண்டைக்காய் நாடுகூட இந்தியாவை கேவலமாக பார்ப்பது தவிர்க்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
29-மார்-201301:52:51 IST Report Abuse
NavaMayam முன்பெல்லாம் இந்த மாதிரி வியாபார வாய்ப்பை ஏற்படுத்த அந்நிய குழுக்கள் , தமிழ் நாட்டுக்கு வரும் ... அதன் மூலம் முந்தைய ஆட்சி காலத்தில் பல தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன ... பல இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது ... இங்கு நிர்வாகத்தை சீர்படுத்த யாருக்கும் அக்கறை இல்லை ...இலவசங்கள் கொடுத்தால் ஒட்டு வந்துவிடும் என்ற மமதையில் யாரும் உள்ளூர் பிரச்சனைகளை பற்றி கவலை படாமல் இலங்கை தமிழர்கள் பிரச்சனைதான் இன்றைய முக்கிய பிரச்சனை போல ஆகி விட்டது தமிழகம்... இலங்கையில் மொத்தமே சுமார் 30 லட்சம் தமிழர்கள் தான் ... அனால் இங்கோ ஐந்து கோடி தமிழர் பிரச்சனை ... இதை தட்டி கேட்க யாரும் இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
29-மார்-201301:01:34 IST Report Abuse
கைப்புள்ள இவ்வளவு நாள் மோடியுடன் உறவை கத்தரித்து விட்டிருந்த அமெரிக்க இப்பொழுது புரிந்து கொண்டது. எவ்வளவு நாள்தான் கத்தரித்து விட்டுக்கொண்டே இருக்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-மார்-201300:44:57 IST Report Abuse
Thangairaja எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானப்பு.....அப்படியே முலயாமையும் பார்த்துட்டு போக சொல்லுங்க. யாரு கண்டது....மூணாவது, நாலாவது அணிக்கேல்லாம் கூட சான்ஸ் இருக்காம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
29-மார்-201300:40:31 IST Report Abuse
தமிழ் சிங்கம் மோடிக்கு அமெரிக்க விசாவும் கிடைக்காது. பிரதமர் பதவியும் கிடைக்காது. சேவல் முட்டை போடமுடியாது. மோடி பிரதமர் ஆகமுடியாது.
Rate this:
Share this comment
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
29-மார்-201305:36:50 IST Report Abuse
Narendra Bharathiகறுப்புத் தமிழா, சேவல் முட்டை போட முடியாது...ஆனால், சேவல் துணையின்றி முட்டை உருவாக முடியாது...பொறுத்திருந்து பார், அமெரிக்காவே மோடியை விசா இன்றி அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை......
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-மார்-201315:00:08 IST Report Abuse
Nallavan Nallavanஎன்ன பாய் அப்படிச் சொல்லிட்டீங்க ஒரு வேலை, மோதி பிரதமர் ஆயிட்டா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை