Advertisement
இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 மார்
2013
00:54
பதிவு செய்த நாள்
மார் 28,2013 23:41

சென்னை: ""அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273 பேர் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:

சவுந்தரராஜன் - மார்க்சிஸ்ட்: வணிக வரி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழிலாளர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில், பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கருணை அடிப்படையில், வாரிசுகளுக்கு வழங்கப்படும் பணிக்காக, ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இவர்கள் ஐந்து முதல், எட்டு ஆண்டுகள் வரை, பணி கிடைக்காமல் உள்ளனர். காலிப் பணியிடங்களில், இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: மருத்துவத் துறையில், அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்று, பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த, காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.



ரெங்கராஜன் - காங்கிரஸ்: அரசு மருத்துவமனைகளில், தொழில்நுட்பப் பணியாளர்கள், இரவு நேர காவலர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் விரைவாக நடைபெற, காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.



இதற்கு பதில் அளித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி பேசியதாவது: அரசுப் பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள் மற்றும் தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



நியமனம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், காலிப் பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் உள்ள நியமன முறையின்படி, பதவிகள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில், 54,420 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 13,581 பணியிடங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில், 64,435 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும், 16,793 சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களில், 16,963 பணியிடங்களும், கூட்டுறவு நியாய விலை கடைகளில், 6,307 பணியிடங்களும், தமிழக மின் வாரியத்தில், 5,489 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அரசின் பிற துறைகளில், 3,717 பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1,091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், மின் வாரியத்தில், 4,042, கூட்டுறவு வங்கிகளில், 3,607, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 10,105 காலிப் பணியிடங்களும், தமிழக மருத்துவப் பணி கழகத்தால், 2,159 மருத்துவர்கள் மற்றும் 4,000 செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.



தொய்வு: காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இது தவறானது. பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. கடந்த, 22 மாதத்தில் இரண்டு லட்சம் பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததால் தான், 15 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் கடன் சுமையில் அவதிப்படுகின்றன. ஆனால், தமிழக அரசு, 664 கோடி ரூபாய் அளவிற்கு உபரி வருவாய் ஈட்டி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gulzar - MADURAI,இந்தியா
30-மார்-201315:10:50 IST Report Abuse
gulzar TNPSC மூலமா குரூப் 4 டைபிஸ்ட் EXAM எழுதி பாஸ் பண்ணி ORDER - ம் கொடுத்த பிறகு பல மாதங்கள் ஆகியும் பாதி பேருக்கு இன்னும் வேலை போடல. அதை ஏன்னு ஒருவரும் விசாரிக்கல. இதுல புதுசா வேலை போடறத பத்தி பேசுறாங்க.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
29-மார்-201316:04:33 IST Report Abuse
PRAVEEN ஒவ்வொரு சீட்டும் இன்னைக்கு என்ன ரேட்டுக்கு போகுதாம் ???
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-மார்-201310:59:23 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில் கோடிகணக்கில் வாய்ப்பு பதிவுதாரருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தராமல் நிலுவையில் உள்ளது. அவர்கள் வாழ்க்கை பொருளாதாரம் மிகவும் பின் தங்கியுள்ளது அரசு அறிவித்துள்ள புள்ளி விவரங்கள் யானை பசிக்கு சொலபொறி கதையாகத்தான் இருக்கிறது இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமோ வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருப்போர் ஆளும் அரசுகள் சரியான முறையில் திட்டமிட்டு வேலைவாய்ப்பு வழங்க அக்கறை காட்டியதில்லை..,வருடம் தோறும் தேர்வுகள் அடிப்படை கல்வி..,மேல்நிலை கல்வி..,பட்டபடிப்பு இளம் நிலை..,முது நிலை..,தொழில் கல்வி போன்றவைகள் தேர்ச்சி அடிப்படையில் சரியான விகிதத்தில் ஆளும் அரசுகள் வேலை வாய்ப்பு உருவாக்கி தந்ததில்லை.இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய வேலைஇன்மை தேக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கி தந்து பதிவு செய்து வேலைவாய்ப்பு காத்திருப்போர் எண்ணிகையை குறைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற்றாலும் கூட வேலைவாய்ப்பு பதிவு எண் அடிபடியில் empployee code இருக்கவேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே TNPSC போன்ற அரசு தேர்வுகள் அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான வேலையின்மை சரியாக கண்டறியப்படும். தமிழகத்தில் வேலையில்லாத நிலைமை சரியாக போக்கமுடியும் - பூபதியார்
Rate this:
3 members
0 members
38 members
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
29-மார்-201309:00:07 IST Report Abuse
R.BALAMURUGESAN என்ன புள்ளி விவரங்கள் உள்ளது... தங்களின் செய்தியில்... அந்த விவரத்தை சொல்லலாமா அய்யா???...
Rate this:
1 members
0 members
41 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
29-மார்-201308:51:43 IST Report Abuse
JALRA JAYRAMAN அரசு பணியாளர்களிடம் என்ன பிரச்சினை என்றால் பத்து பேர் இருந்தால் அதில் நாலு பேர் சங்கத்தில் இருப்பார்கள் முன்று பேர் வருவார்கள் போவர்கள் மிதி முன்று பேர் தான் எல்லா வேலையும் செய்ய வேண்டும் இதனால் தான் OUTSOURCING வந்தது
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
29-மார்-201306:55:59 IST Report Abuse
venkat Iyer தமிழ் நாட்டில் 32 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளன. வேலைகளை உருவாக்குவதுதான் அரசின் கடமை.இலவசத்த நிப்பாட்டுங்க.
Rate this:
0 members
0 members
41 members
Share this comment
Cancel
Nirmal Kumar - chennai,இந்தியா
29-மார்-201306:34:14 IST Report Abuse
Nirmal Kumar 664 கோடி ரூபாய் உபரி வருவாய், அப்ப பஸ் மற்றும் மற்ற கட்டணங்களை குறைக்கலாம் அல்லவா.
Rate this:
1 members
0 members
26 members
Share this comment
selva pandiyan - Chennai,இந்தியா
30-மார்-201303:22:40 IST Report Abuse
selva pandiyanநல்லா கேளுங்க ..எப்படி இவுங்க வந்தவுடன் உபரி.. பஸ் கட்டணம்/ மின்சார கட்டணம் குறைக்க சொல்லுங்க ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Suresh - madurai,இந்தியா
29-மார்-201305:33:32 IST Report Abuse
Suresh அய்யா ,மன்னிக்கவும் ,சிறிய திருத்தம் 5 முதல் 8 வருடங்கள் மட்டுமல்ல 20 வருடங்களாக எந்த ஒரு அழைப்பு கடிதமும் வராத நிலையம் உள்ளது ,கவனிக்க ...
Rate this:
0 members
0 members
48 members
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
29-மார்-201303:42:17 IST Report Abuse
.Dr.A.Joseph அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்து விட்டார்களா?எப்போது?போட்டித்தேர்வு நடத்தியா அல்லது பதிவு மூப்பின் அடிப்படையிலா?அது குறித்த விளம்பரங்கள் எந்தெந்த பத்திரிகைகளில் வந்தது?இந்த மாதிரியான புள்ளி விவரங்கள் எப்படியையா உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது?கொஞ்சமாவது உண்மையை பேசுங்கள்.நிறைந்த அன்புடன் ..........................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
2 members
0 members
95 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-மார்-201303:39:01 IST Report Abuse
Baskaran Kasimani ஒரு கூட்டத்துக்கு இந்த வேலை வரப்பிரசாதம் - ஆனால் அதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ.... நேர்மையான முறையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அது சந்தேகமில்லாத சாதனைதான்.
Rate this:
0 members
19 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.