சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
சிவில் சர்வீசஸ் என்றழைக்கப்படும், யு.பி.எஸ்.சி., தேர்வுகள், முதல் நிலை (பிரிலிமினரி), முதன்மை தேர்வு (மெயின்), நேர்காணல் (இன்டர்வியூ) போன்ற முறைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில், எந்த மாற்றமும் செய்யப்படாமல், முதன்மை தேர்வில் மட்டும், சில மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., மேற் கொள்ள விரும்பியது.

நிபந்தனை: இதற்கான அறிவிப்பு, இம்மாதம், 5ம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர்த்து, வட்டார மொழியில், ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர், தேர்ந்தெடுக்கும் மொழியை, குறைந்தபட்சம், 25 பேராவது, தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மேலும், வட்டார மொழி இலக்கிய தாளை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும். அனைத்து தேர்வாளர்களும், ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பன, போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. அனைத்து தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பார்லிமென்டில், எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

அறிவிப்பு: அதையடுத்து, பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வி.நாராயணசாமி, பார்லிமென்டில் வெளியிட்ட அறிவிப் பில், ""யு.பி.எஸ்.சி., தேர்வில், எவ்வித மாற்றமும் செய்யப்படாது; முந்தைய நிலையே தொடரும்' என, தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், மார்ச், 5ம் தேதி வெளியான மாற்றங்கள் குறித்த உத்தரவு, வாபஸ் பெறப்பட்டதாகவும், முந்தைய நிலையே தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு, மே, 26ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பத்திற்கு, கடைசி தேதி, ஏப்., 4ம் தேதி. முதன்மை தேர்வு, இவ்வாண்டு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvakumar Raman - NEW DELHI,இந்தியா
29-மார்-201307:54:56 IST Report Abuse
Selvakumar Raman முந்தய நிலையே தொடரும் என்பது ஆங்கிலத்தில் மட்டும். மற்ற மாற்றங்கள் தொடரும் அதாவது புதிய பாடதிட்டத்தின் படி.
Rate this:
Share this comment
Cancel
Selvakumar Raman - NEW DELHI,இந்தியா
29-மார்-201307:50:58 IST Report Abuse
Selvakumar Raman Sir, This news is not correct. Only importance for English is reduced that is English Paper marks 250 not included in the final marks. Like old tem of examination pattern Only qualification paper is there. Remaining changes are continue. So New Syllabus only. Burden of English is reduced. This news show that old pattern is continuing
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்