Advertisement
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் நிச்சயம் உருவாகும் என்கிறார்: ஷிண்டே
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புதுடில்லி: ""தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில், இடம் பெற்றிருந்த, சில சர்ச்சைக்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட அதன் ஷரத்துகளை, அனைத்து மாநில முதல்வர்களும் ஏற்றுக் கொள்வர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

என்.சி.டி.சி.,: பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, தடுத்து நிறுத்த வகை செய்யும், சிறப்பு அதிகாரங்கள் கொண்ட, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.,) அமைக்க வேண்டும் என, உள்துறை அமைச்சராக, சிதம்பரம் இருந்த போது விரும்பினார். அதற்கான அதிகார வரைவு மேற்கொள்ளப்பட்ட போது, அவர் இலாகா மாறி, நிதியமைச்சராகி விட்டார். அவர் விட்டுச் சென்ற பணியை, பின் வந்த சுஷில்குமார் ஷிண்டே தொடர்ந்தார்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைக்க முடிவு செய்து, அதன் முக்கிய அம்சங்களை, கடந்த ஆண்டு மார்ச், 5ம் தேதி, டில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் அறிவித்தார். மாநில அரசின் ஒப்புதல் இன்றி, யாரையும் கைது செய்யும் அதிகாரம் கொண்ட, அந்த அமைப்பை அனுமதிக்க முடியாது என, தமிழக முதல்வர், ஜெயலலிதா, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் போன்றோர் எதிர்த்தனர். இதையடுத்து, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மாநில அரசின் அனுமதி பெற்ற பிறகே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என, மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கை: அடுத்த மாதம், 15ம் தேதி நடைபெற உள்ள, அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில், திருத்திஅமைக்கப்பட்ட, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் ஏற்றுக் கொள்ளப்படும் என, அமைச்சர் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, ""முதல்வர்கள் தெரிவித்த ஆட்சேபகரமான அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதால், மாற்றியமைக்கப்பட்ட தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை, முதல்வர்கள் ஏற்றுக் கொள்வர் என, நம்புகிறேன்,'' என்றார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:49:03 IST Report Abuse
K Sanckar முதல்வர்கள் மோடியும் ஜெயலலிதாவும் இருக்கும் வரை உங்கள் பாச்சா பலிக்காது.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
ajoy. p - erode,இந்தியா
29-மார்-201310:44:59 IST Report Abuse
ajoy. p அய்யோ இந்த கொசு தொல்ல தாங்கமுடியலடா சாமி
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
29-மார்-201301:03:18 IST Report Abuse
கைப்புள்ள உருவானால் பயங்கரவாதத்திற்கு கத்தரி போட்டு விடலாம்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-மார்-201300:51:35 IST Report Abuse
Thangairaja ஆர் எஸ் எஸ் கிட்டே பெர்மிஷன்வாங்கிட்டா வேற யாரோட தயவும் தேவையில்லை....அவங்களுக்கு சாதகமா சில சரத்துகளை சேர்த்துட்டா ஒருமனதாவே கூட தீர்மானம் நிறைவேறிடும்.இதுக்கேன் அழுதுக்கிட்டு.......போய் பேசுங்க......
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.