தி.மு.க., வெளியேறியதால் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டதா: விரக்தியில் கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்து விட்டது? இலங்கை தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்து விட்டதா? பார்லிமென்டில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா? மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேறியது மட்டும் தான் நடந்தது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரக்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா? தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்து விட்டது? இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்து விட்டதா? பார்லிமென்டில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா? மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேறியது மட்டும் தான் நடந்தது. ஆனால், அதற்காக தி.மு.க., சிறிதும் கவலைப்படவில்லை.


கடந்த, 2009ல் தி.மு.க., மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும், இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வர். அப்போதே வெளியேறியிருந்தால், இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.க.,வின் மீது பழியைப் போடுகின்ற, ஒரு செயலே தவிர வேறல்ல. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகிய போதிலும், மத்திய ஆட்சியைப் கவிழ்ப்பதற்கான முயற்சியில், யாராவது ஈடுபட்டால், அதற்கு தி.மு.க., துணைப் போகாது என, அன்பழகன் பேசியதை எடுத்துக்காட்டி, அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார். எதற்கெடுத்தாலும், நான் இரட்டை வேடம் போடுவதாக, ஜெயலலிதா அடிக்கடி கூறுகிறார். சேது சமுத்திரம் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு, தற்போது அதை வேண்டாமென்று ஜெயலலிதா கூறுகிறாரே அதற்குப் பெயர் தானே, இரட்டை வேடம். காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம், செயல்படாத வாரியம் என்றல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே, இரட்டை வேடம். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (123)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
02-ஏப்-201309:12:01 IST Report Abuse
Venkatesan Jayaraman நல்ல நாடகம்
Rate this:
Share this comment
Cancel
sankaran - madurai,இந்தியா
02-ஏப்-201306:38:27 IST Report Abuse
sankaran காய்ச்சல் அடிக்கும்போது மாத்திரை சப்பிடசொன்ன , கட்டையில் போனபின்பு மாத்திரை சாப்பிடுகிறேன் என்று சொன்னால் என்ன சொல்வது ...........
Rate this:
Share this comment
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
30-மார்-201305:52:52 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan பாவம் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் இன்று பதவிகளை இழந்த வெறுப்பிலும் வேதனையிலும் குமுறுகிறார். அவருக்கே தெரியும் என்பதால் விரிவாக எழுத வேண்டியதில்லை. எனினும் ஒரு கேள்வி. அப்புறம் எதற்கு அப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம் இப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம் என்றெல்லாம் வெற்று மிரட்டல்கள் அவ்வப்பொழுது? பழைய கலைஞராக இருந்திருந்தால் இதனால் என்ன நன்மை விளைந்தது என்று முதன்மையில்லை. தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் முடிந்ததைச் செய்தோம் என்ற மன அமைதி எங்களுக்கு என்றுதானே கூறியிருப்பார். அடிக்கடித் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் மூலம் அப்பொழுதும் ஒன்றும் நடந்திருக்காது எனப் பிதற்ற வைத்தவர் இப்பொழுது தானே ... எடுத்திருக்கிறார். கலைஞரே உங்களை இன்னும் பல்லாயிரவர் நம்புவதால் இனியேனும் மாறக்கூடாதா? தமிழர் வரலாற்றில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாதா? தமிழ் ஈழத்திற்கு உதவக்கூடாதா? உங்களுக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கக்கூடாதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
Rate this:
Share this comment
Cancel
Raja - abi dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-201316:55:38 IST Report Abuse
Raja சூப்பர்
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-மார்-201318:38:41 IST Report Abuse
சு கனகராஜ் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே ...
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:51:39 IST Report Abuse
K Sanckar ஆப்பை பிடுங்கிய குரங்கு போல ஆகி விட்டார் கருணாநிதி. அரசுக்கு வாபஸ் வாங்கி விட்டார் அழகிரியின் கோபத்திற்கும் ஆளாகி விட்டார். பாவம் விரக்தியால் சோகம் என்ன செய்வது. மக்கள் மன்னிக்க மாட்டார்களே .
Rate this:
Share this comment
Cancel
kvraman - madurai,இந்தியா
29-மார்-201316:51:38 IST Report Abuse
kvraman 2ஜீ ஊழலை விட இது பரவில்லை மரியா
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-மார்-201318:58:12 IST Report Abuse
சு கனகராஜ் 2 ஜி யை மறைக்கத்தானே இவ்ளோ நாட்கள் பதவியில் ஒட்டி கொண்டிருந்தார்கள் வெட்கமில்லாமல் ...
Rate this:
Share this comment
Cancel
Prem - Bangalore,இந்தியா
29-மார்-201316:16:31 IST Report Abuse
Prem DMK என்கிற கடையை மூடிட்டு அப்டியே வீட்டுல இருந்துகோங்க ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-மார்-201318:58:58 IST Report Abuse
சு கனகராஜ் இவர் மூட வேண்டாம் அவரது வாரிசுகள் மூடி விடுவார்கள் என்ன இருந்தால் சேர்த்து வைத்த கொள்ளை பணம் இருக்கவே இருக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
பீரங்கி மூக்கன் - இமயமலை,இந்தியா
29-மார்-201315:12:33 IST Report Abuse
பீரங்கி மூக்கன் தண்ணீர் இல்லாமல் உயிருக்கு போரடுபவனுக்கு தண்ணீர் கொடுக்காமல் , அவன் செத்த பிறகும் பால் ஊற்றுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லை.........மேலும் , நீங்கள் விலகியதால் என்ன நடந்து விட்டது என்று கேட்கிறீர்களே .....நீங்கள் அமைச்சரவையில் இருப்பதால் மட்டும் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்து விட்டது?...........நீங்கள் சட்ட சபையில் இருந்தும் தினமும் வெளி நடப்பு செய்கிறீர்களே....அதனால் மட்டும் என்ன நடந்து விட்டது??????? 6 மாதத்திற்கு ஒரு முறை...கையெழுத்து போட சட்ட சபை வருகீரிர்களே..அதனால் மட்டும் என்ன நடந்து விட்டது......???
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-மார்-201310:15:52 IST Report Abuse
mirudan இதனால்தான் முதல்வராக பதவியில் இருந்த பொழுது பதவி விலக வில்லை புரிந்து கொண்டீர்களா மக்களே என்னால் ஒன்னும் செய்யும் முடியாது இப்பவாவது நம்புங்கோ இது தான் தலைவரின் புலம்பல்
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-மார்-201319:00:29 IST Report Abuse
சு கனகராஜ் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று கேட்கிறாரோ ...
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-மார்-201309:13:19 IST Report Abuse
PRAKASH அவருக்கே தெரியுது போல நம்ம ஒரு டம்மினு
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-மார்-201319:05:23 IST Report Abuse
சு கனகராஜ் மந்திரி பதவிகளை வாங்கும் பொது மட்டும் பவர் புல் தலைவர் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்