விவசாயிகள், வியாபாரிகளுக்கு ரூ.1 கோடி பொருளீட்டுக் கடன் மாவட்ட விற்பனைக்குழு செயலர் தகவல்| Dinamalar

தமிழ்நாடு

விவசாயிகள், வியாபாரிகளுக்கு ரூ.1 கோடி பொருளீட்டுக் கடன் மாவட்ட விற்பனைக்குழு செயலர் தகவல்

Added : மார் 28, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவசாயிகள், வியாபாரிகளுக்கு ரூ.1 கோடி பொருளீட்டுக் கடன் மாவட்ட விற்பனைக்குழு செயலர் தகவல்

விருத்தாசலம்:கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பொருளீட்டுக் கடனாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட விற்பனைக்குழு செயலர் ஹரிதாஸ் தெரிவித்தார்.நேற்று விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில், விவசாயிகள் மூட்டைகள் வைக்கப்படும் பரிவர்த்தனை குடோன்கள், இருப்பு குடோன்கள், சந்தை நிலவர டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஆய்வு செய்த பின் அவர் "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் மார்க்கெட் கமிட்டிகள் மூலம் விவசாயிகளுக்கு 67 லட்சம் ரூபாயும், வியாபாரிகளுக்கு 30 லட்சம் ரூபாயும் பொருளீட்டுக் கடனாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் கமிட்டிகளில் விவசாயிகள் விளை பொருட்களை தினசரி வாடகைக்கு இருப்பு வைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மூட்டைகள் வைக்கும் அளவிற்கு மெகா குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. நாளொன்றுக்கு ஒரு மூட்டைக்கு 10 பைசா வாடகை ஆகும். விருத்தாசலத்தில் விவசாயிகள் விளை பொருட்கள் பரிவர்த்தனைக்காக 11 குடோன்கள் உள்ளன.ஒரு கோடி ரூபாய் செலவில் தற்போது மெகா குடோன் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணி ஒரு சில மாதங்களில் நிறைவடையும். மேலும், 2,000 மூட்டைகள் வைக்கும் அளவிற்கு புதிய குடோன் கட்டுவதற்கான கருத்துரு ஒன்றும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.தமிழக அரசு விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு புதிய திட்டங்களை அறிவிப்பதுபோல, விளை பொருட்களை விற்பனை செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மார்க்கெட் கமிட்டிகளில் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு ஹரிதாஸ் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை