Ruling AIADMK will get majority post in cooperative election | கூட்டுறவு சங்க தேர்தல்: போட்டியே இல்லாமல் ஆளும்கட்சி அலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க தேர்தல்: போட்டியே இல்லாமல் ஆளும்கட்சி அலை

Added : மார் 28, 2013 | கருத்துகள் (5)
Advertisement
Ruling AIADMK will get majority post in cooperative election

கோவை: கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. கோவை சரகத்தில் 54, பொள்ளாச்சியில் 18 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டதேர்தல் ஏப்., 5ம் தேதி நடக்கிறது. தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஒதுங்கியுள்ளதால், தேர்தல் களத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வின் "தனியாவர்த்தனம்' காணப்படுகிறது.
தமிழகத்தில் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், ஏப்., 5, 12, 19, 27ம் தேதிகளில் நான்கு கட்டங்களாக நடக்கவுள்ளது. கோவை சசரகத்தில் 178; பொள்ளாச்சி சசரகத்தில் 109 என மொத்தம் 287 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. போட்டியிருக்கும்பட்சத்தில், முதல் கட்ட ஓட்டுப்பதிவு ஏப், 5ம் தேதி நடக்கிறது. கோவையில் 54, பொள்ளாச்சியில் 18 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இண்டாம் கட்டத்தில் நடக்கிறது. கோவையில் 43, பொள்ளாச்சியில் 28 கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் தலைமை கூட்டுறவு சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்., 19ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், கோவையில் 46; பொள்ளாச்சியில் 26 சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உறுப்பினர்களை தேர்வு செய்ய நான்காம் கட்ட தேர்தல் ஏப்., 27ல் நடக்கிறது. இதில், கோவையில் 35; பொள்ளாச்சியில் 37 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடக்கிறது. இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் முடிந்த உடனே, மாலை 4.00 முதல் 5.30 மணிக்குள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தகுதியான மனுக்கள் விபரம் மாலை 6.00 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. நாளை (30ம் தேதி) காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். இறுதி வேட்பாளர் விபரம் நாளை மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. கூட்டுறவு தேர்தலை தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், பெரும்பாலான சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ஆளும்கட்சி அலை அபரிமிதமாக வீசி வருகிறது. ஒரு சங்கத்துக்கு 11 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெண்களுக்கு 30 சதவீதம், ஆதிதிராவிடர் இன மக்களுக்கு 18 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவும், வாக்காளர்களை நிர்ணயம் செய்வதிலும் புதிய நடைமுறைகள் புகுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேர்தல் குறித்து குழப்பநிலை காணப்படுகிறது. "தேர்தலில் போட்டியிடுவோர் சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்; தண்டனை எதுவும் பெற்றவராக இருக்கக் கூடாது. கடன் தவணை தவறியவராக இருக்கக் கூடாது. சங்க பணியாளர்களின் நெருங்கிய உறவினராக இருக்கக் கூடாது. வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையை மூன்று மாதத்துக்கு மேல் செலுத்தாமல் இருந்தால், தேர்தலில் நிற்க முடியாது; எழுதப்படிக்க தெரிந்தவர் தான் போட்டியிட முடியும்" என, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், உறுப்பினர்களை "வடி கட்டி' தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. இது கூட்டுறவு நிர்வாகத்தை சீரமைக்க உதவும் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடம் உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
29-மார்-201311:15:58 IST Report Abuse
s.maria alphonse pandian வாக்குகளுக்காக செலவழிக்க வேண்டியதில்லை...வாக்குக்காக பணம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்தோருக்கு ஏமாற்றமே.....
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
29-மார்-201309:02:51 IST Report Abuse
JALRA JAYRAMAN கூட்டுறவு நல்லது தான் அதில் அரசியல் வந்து அது நாசமாய் பொய் பல வருஷம் ஆகின்றது
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
29-மார்-201308:43:37 IST Report Abuse
Eswaran Eswaran அம்மாவே தலைவர்கள நியமிச்சாத் தீர்ந்தது வேலை.தேவையில்லாமல் ஆகும் செலவும் மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
29-மார்-201306:11:56 IST Report Abuse
Kanal உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சேடா..ஆளே இல்லலை அப்புறம் ஏது இந்த ஊது ஊதுறீங்க
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-மார்-201301:09:37 IST Report Abuse
Thangairaja என்னத்த வடிகட்டி தேர்ந்தெடுக்க போறாங்க .....ஆளே இல்லாத கடையில டீ ஆத்தறதே மொத்தமா கல்லா கட்டத்தானே......இதுல என்ன நியாய தர்மம். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை