சென்னை மியாட் மருத்துவமனை சாதனைமின்சாரம் தாக்கி இதயம் செயலிழந்த வாலிபருக்கு நவீன சிகிச்சை| Dinamalar

தமிழ்நாடு

சென்னை மியாட் மருத்துவமனை சாதனைமின்சாரம் தாக்கி இதயம் செயலிழந்த வாலிபருக்கு நவீன சிகிச்சை

Added : மார் 29, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:மின்சாரம் தாக்கி இதயம் செயலிழந்த, 28 வயதான இளைஞர், மியாட் மருத்துவமனையின் நவீன சிகிச்சையால், உயிர் பிழைத்துள்ளார். தொடர் சிகிச்சையில், அந்த இளைஞர் தற்போது ஆரோக்கியமாகவும் உள்ளார்.சென்னையை சேர்ந்தவர் பாலாஜி, 28. ராமாபுரத்தில் தனது நண்பர் ஜேம்ஸ் என்பவருடன் இணைந்து, நடன பள்ளி துவக்க திட்டமிட்டார். கடந்த மாதம், 8ம் தேதி, பள்ளி திறப்பு விழா நடைபெற இருந்தது. இதனால், 5ம் தேதி, பள்ளியில் இறுதி கட்ட பணிகள் நடந்தன.அப்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி, பாலாஜி தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பர் ஜேம்ஸ் அடுத்த, 15 நிமிடத்தில் மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், பாலாஜியை சேர்த்தார்.டாக்டர் நிஷீத் தலைமையிலான மருத்துவர் குழுவினர் பாலாஜியை பரிசோதித்தனர். அப்போது, பாலாஜிக்கு சுவாசம் இல்லாததும், இதய துடிப்பு நின்று போயிருந்ததும் தெரியவந்தது. மருத்துவர்களின் பல கட்ட சிகிச்சைக்கு பின் பாலாஜி உயிர் பிழைத்தது மட்டுமின்றி, தற்போது ஆரோக்கியமாகவும் உள்ளார்.இதுகுறித்து, மியாட் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள் நிஷீத், வருண், ஜான் பீட்டர் ஆகியோர் கூறியதாவது:இதய துடிப்பு நின்று விட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, பாலாஜியின் மார்பில் கை வைத்து மருத்துவர்கள் அழுத்தம் கொடுத்தனர். மின் அலை அதிர்வும் கொடுக்கப்பட்டது. 10 நிமிட தொடர் முயற்சிக்கு பிறகு, பாலாஜிக்கு இதய துடிப்பு ஏற்பட்டது.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சீரான சிகிச்சைக்கு பின் அசைவு இல்லாமல் இருந்த பாலாஜி, வலி ஏற்பட்டால், அசையும் நிலைக்கு வந்தார். வென்டிலேட்டரில் இருந்து வெளியே வந்ததும், அவருக்கு வலிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது.கை, கால் பலம் இழந்து, அசைக்க முடியாமல் இருந்த பாலாஜி, இரண்டு வார சிகிச்சைக்கு பின் முன்னேற்றம் அடைந்தார். தற்போது ஆரோக்கியமாக உள்ளார்.இவ்வாறு, மருத்துவ குழுவினர் கூறினர்.நிகழ்ச்சியில் பேசிய பாலாஜி, மறுபிறவி எடுத் திருப்பதாக நெகிழ்ந்து கூறினார். மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், அவசர சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய நிபுணர்களை பாராட் டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201315:41:31 IST Report Abuse
Ganesh Great news. All the best MIOT hospital.
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - Udumalpet  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201309:00:22 IST Report Abuse
ராமசாமி இந்த வலி இருக்கே இது எல்லாத்தையம் விட கொடுமை நலம் வாழ வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை