Advertisement
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்: திருரத்தம் சிந்தும் தேவனைப்பார்: இன்று புனித வெள்ளி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவன், மக்களின் பாவங்களை ஏற்று சிலுவையில் தொங்கும் நிலையை இன்று நாம் காண்கிறோம்.

சிலுவை என்பது யூதர்கள் மத்தியில் அவமானச்சின்னமாக விளங்கியது. பெரிய தவறு செய்தவர்களை சிலுவையில் அறைந்து தண்டனை கொடுப்பர். இறைமகனாகிய இயேசுவுக்கும் அதே நிலை ஏற்பட்டது. ஏன் இந்த நிலை? அவர் ஏதேனும் குற்றம் செய்தாரா என்றால் இல்லை....அப்படியானால், குற்றவாளிகள் யார்? நாம் தான்....நாம் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாகத் தான், அவரை நாமே சிலுவையில் அறைந்தோம். அறைந்து கொண்டும் இருக்கிறோம். இறைமகன் இயேசு சிலுவையில் தொங்கியதால் அந்த சிலுவைக்கே மகிமை கிடைத்து விட்டது. ஆனால், இன்று வீடுகளிலும், நிறுவனங்களிலும் அவர் பாடுபட்ட சுரூபத்தை வைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவருக்கு ஏற்பட்ட துன்பம் நமக்கும் ஏற்பட்டு விடுவோமோ என்ற அச்சமே இதற்கு காரணமாக இருக்கிறது. சிலுவை என்பது தூய்மையின் சின்னம். இது நம் வீடுகளில் இருந்தால் தான் பாவம் செய்ய வேண்டுமென்ற எண்ணம், நம்மை விட்டு அடியோடு நீங்கும். இயேசுவின் தூய உடல் ஆணிகளால் அறையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் காயங்களால் நாம் குணமடைந்தோம். (ஏசாயா53:5) இறையரசின் மதிப்பீடுகளுக்காக இயேசு உடல் அறையப்பட்டு, மகிமை அடைந்த வீரவரலாற்றை நினைவுபடுத்துவதே புனிதவெள்ளி நாள். அருளானந்தர், தோமையார் போன்ற மறைசாட்சியர்கள் நம் நாட்டு வரலாறில் இடம்பெறுகின்றனர்.

""என் பொருட்டு தன்னையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்,'' (மத்தேயு 16;25) என்றார் இயேசு. இயேசுவின் இறப்பே நம் வாழ்வு. மறைசாட்சியரின் ரத்தம் நம் விசுவாசத்தின் வித்து. புனித வெள்ளி பாடுகளின் பாதைகளை தியானிக்க வேண்டிய நாள். மாட்சிமை என்பது பாடுகளுக்குப் பின் வருவது அல்ல. அது பாடுகளின் வழியாக வருவது என்பதை இயேசு கிறிஸ்து மெய்ப்பித்துக் காட்டினார். நாமும் அவரது பாடுகளில் பங்கெடுப்போம்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Wesly - Tanjore,இந்தியா
29-மார்-201314:21:59 IST Report Abuse
Wesly புனித வெள்ளியை முன்னிட்டு பாவம் செய்த ஒவ்வொரு வரும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம் ....உலகில் அமைதி உருவாகட்டும் ....அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும் ....அன்பு பெருகட்டும் ...இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் இந்த உலகத்தை நல்வழி படுத்தட்டும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-மார்-201313:48:39 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மனிதரில் சிறந்தவர் இறைவன் ஆனவர்.., ஏசுபிரான் சிந்திய தூய ரத்தம் சிலுவை நிச்சயம் மனிதனின் பாவத்தை போக்ககூடியாவை நம் நல் ஆத்மாவை பரிசுத்தமாக்கி மனிதர்களில் சிறந்தவராக வேண்டும் மன தூய்மை பெறும் புனித வெள்ளியை போற்றுவோம் பூபதியார்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.