கொத்தடிமை வேலைக்கு சென்ற மகன் உயிரோடு இருக்கானா; இல்லையா : எஸ்.பி.,யிடம் பெற்றோர் கண்ணீர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொத்தடிமை வேலைக்கு சென்ற மகன் உயிரோடு இருக்கானா; இல்லையா : எஸ்.பி.,யிடம் பெற்றோர் கண்ணீர்

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: ""மதுரை உசிலம்பட்டி பகுதி முறுக்கு கம்பெனிக்கு, வேலைக்கு சென்ற 17 வயது மகன் உயிருடன் உள்ளானா; இல்லையா,'' என்றும், மகனை மீட்டு தரும்படியும், பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் பெற்றோர் புகார் அளித்தனர். மதுரை கருமாத்தூர் அருகே தாதம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். மனைவி பாண்டியம்மாள். இவர்களது மகன்கள் ராஜேஷ், 19, ராம்குமார், 17. இதில், ராம்குமாரை உசிலம்பட்டியில் உள்ள முறுக்கு கடைக்கு வேலைக்கு அனுப்பினர். கோயில் திருவிழாவிற்காக, மகன் வராத நிலையில், அவரை மீட்டு தரும்படி, மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
மனுவில், தாதம்பட்டி ஏஜன்ட்கள் சுருளி, சின்னு ஆகியோர், உசிலம்பட்டி, அ.ராமநாதபுரம் அழகுத்தேவர் முறுக்கு கடையில், 8 மாதம் குத்தகை வேலைக்கு, ராம்குமாரை அழைத்து சென்றனர். முன்பணமாக ரூ. 14 ஆயிரம் கொடுத்தனர். ஊர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த வாரம் நடந்தது. இதற்காக, மகனை அனுப்புமாறு, அழகுத்தேவரிடம் போனில் கூறினேன். ராம்குமார் பஞ்சாபில் வேலை செய்வதாக, அவர் கூறினார். ஏஜன்ட்கள் சுருளி, சின்னு ஆகியோரிடம் கேட்டதற்கு, வெளியூரில் இருப்பதால், ராம்குமாரை உடனே அழைத்து வர முடியாது என்றும், ரூ. 7 ஆயிரம் கொடுத்தால், அழைத்து வருவதாகவும் கூறினர். நான் பணம் கொடுத்து ஒரு வாரம் ஆகியும், எனது மகனை அழைத்து வரவில்லை.
இந்நிலையில், போனில் பேசிய அழகுத்தேவர், "மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்து விட்டான்' என்றார். எனது மகன் இருக்கிறானா, இல்லையா? என்ன ஆனான் என்று தெரியவில்லை. மகனை மீட்டு தர வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை