கருவேல மரம் வெட்ட ஐகோர்ட்டில் நடந்த ஏலம் : ரூ.5.20 லட்சம் செலுத்த உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருவேல மரம் வெட்ட ஐகோர்ட்டில் நடந்த ஏலம் : ரூ.5.20 லட்சம் செலுத்த உத்தரவு

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சொக்கநாதயிருப்பு கண்மாய் கருவேல மரங்களை வெட்ட, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த ஏலத்தில் 5.20 லட்சம் ரூபாய்க்கு விட முடிவு செய்யப்பட்டது.
சொக்கநாதயிருப்பு ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: சொக்கநாதயிருப்பு கண்மாயில் 50 மீ., கருவேலமரங்கள் வெட்ட, மதுரை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் ஜன.,30 ல் அறிவிப்பு வெளியிட்டார். அதில், "மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பிப்.,26 ல் ஏலம் நடக்கும்,' என குறிப்பிட்டிருந்தார். ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ.,வுக்கு தெரிவிக்கப்படவில்லை. பொது அறிவிப்பும் செய்யவில்லை. ஏலம் வெளிப்படையாக நடக்கவில்லை. ஏலத்தொகை மற்றும் இதர விபரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கிழக்கு வைகை சிறப்புத்திட்ட மானாமதுரை செயற்பொறியாளரிடம் கோரினேன். அவர், மனுவை பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம், புகார் செய்தேன். அவர்," மதுரையை சேர்ந்த முருகேசனுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது,' என்றார்.
கண்மாயில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கருவேலமரங்கள் உள்ளன. முறையாக ஏலம் நடக்கவில்லை. நான் 1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கத் தயார். அதற்குரிய "டிமாண்ட் டிராப்'டை மனுவுடன் இணைத்துள்ளேன். மறு ஏலம் நடத்தக்கோரி, உறவினர் கருப்பையா கலெக்டரிடம் மனு அளித்தார். மனு மீது நடவடிக்கை இல்லை. மதுரை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் ஜன.,30 ல் வெளியிட்ட ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு மனு வந்தது. வக்கீல்கள் வாதம்:

மனுதாரர் வக்கீல் ஆனந்தகுமார்: மனுதாரர் 1.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க விரும்புகிறார்.
அரசு வக்கீல்: ஏற்கனவே ஏலத்தொகை 77 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, முடிந்து விட்டது.
நீதிபதி: மனுதாரர் 1.50 லட்சம் ஏலம் எடுக்க விரும்புகிறார். அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவது போல், குறைந்த தொகைக்கு ஏலம் விட்டால் இழப்பு ஏற்படும்.

முருகேசன்: 1.6 0 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க விரும்புகிறோம். இப்படி மாறி, மாறி ஏலத்தொகையை அதிகரித்துக்கொண்டிருந்தனர். முடிவில் முருகேசன் தரப்பில், 5.20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க ஒப்புக்கொண்டனர்.

நீதிபதி: முருகேசன் 2.50 லட்சம் ரூபாயை, முன்பணமாக மதுரை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் நாளை ( இன்று) "டெபாசிட்' செய்ய வேண்டும். மீதி தொகையை மார்ச் 30 ல் செலுத்த வேண்டும். பின், மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை