Lanka's ugly show of Triumph | தமிழர்களை கொன்று குவித்த வெற்றியை கொண்டாடும் இலங்கை அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்| Dinamalar

தமிழர்களை கொன்று குவித்த வெற்றியை கொண்டாடும் இலங்கை அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்

Added : மார் 29, 2013 | கருத்துகள் (19)
Advertisement

கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றதை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இலங்கை அரசு பயங்கரவாத சுற்றுலா ( டெரர் டூரிசம்) என்ற பெயரில் சுற்றுலாவை நடத்தி வருகிறது.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக அதிபர் ராஜபக்சே உலக நாடுகளிடையே பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ள நிலையில், தற்போது, தமிழர்களின் சோகத்தை தங்களது வெற்றியாகக் காட்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகிறது.இதன்படி, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்ற இடங்களை காட்சிப்பொருளாக்கி, அதை தங்களது வெற்றியின் சின்னங்களாகக்கருதி, சுற்றுலாவாக வெளிநாட்டினருக்கு அதை எடுத்துக்காட்ட முயற்சி செய்து வருகிறது. பொதுவாக ஒரு நாடு எதிரி நாட்டுடன் நடத்திய போரில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக்கொண்டு போர் நினைவிடங்களை அமைப்பது வழக்கம். ஆனால் இலங்கையோ, தனது சொந்த நாட்டு மக்களை கொன்றதை வெற்றியாக சித்தரித்து இத்தகைய போர் நினைவிடத்தை உருவாக்கியுள்ளது. பயங்கரவாத சுற்றுலாவின் ஒருபகுதியாக, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகனங்கள் போரின் போது தீக்கிரையாக்கப்பட்ட எச்சம் தற்போது ஊமை சாட்சியாக விளங்கி வருகிறது. இதே போல், மனித உரிமை அமைப்புகளால் உலகின் மிகவும் பயங்கரமான இடம் என வர்ணிக்கப்படும் இடமும் இந்த சுற்றுலாவில் அடக்கம். இதில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல்மாதம் ஒரு லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், கடந்த 2006ம் ஆண்டு கடற்கரை ஒன்றில் ஜோர்டான் நாட்டு கப்பலை ஒன்றை கைப்பற்றிய விடுதலைப்புலிகள் அந்த கப்பலை உடைத்து வாகனங்கள் செய்த இடமும் இடம்பெற்றுள்ளது. மேலும், போரின் போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இந்த பயங்கரவாத சுற்றுலா உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maravan - dublin,அயர்லாந்து
29-மார்-201318:29:56 IST Report Abuse
maravan வெகு விரைவில் சிங்களவர்கள் அழிவை நாம் மிக பெரிய விழா எடுத்து கொண்டாடும் காலம் வரும்..அப்போது ஈழம் என்று தமிழர்கள் நாடு உதயமாகிருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
29-மார்-201314:21:44 IST Report Abuse
Sembiyan Thamizhvel தன வினை தன்னை சுடும் இந்த பழமொழி வீண்போகாது. இந்தியாவின், வடக்கத்தியானின் அழிவு, மரண ஓலம் எமது காதுகளில் தேனாகப்பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை. வடக்கத்தியன்கள், தெற்கை எம திசை என்று கூறுவதுடன் மட்டுமல்ல, பயப்படவும் செய்வாங்கள். இவங்களது தமிழ் இன அழிப்பு செயலுக்கு தண்டனையாக இந்தியாவின் அழிவு காலம், தென் திசையிலிருந்து வடக்கு நோக்கி முழுவேகத்துடன் தாக்கும். இது விளையாட்டல்ல. சர்வ சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
29-மார்-201313:15:50 IST Report Abuse
R.Saminathan இலங்கை அரசுக்கு அறிவே கிடையாது,,இந்தியா இதுக்கு என்ன பதில் சொல்ல போகுது,.ராஜபக்ஷேவ தூக்கிலிட வேண்டும்,.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy Caa - madruai,இந்தியா
29-மார்-201313:04:23 IST Report Abuse
Krishnamoorthy Caa இந்த ஈன செயலை சுற்றுலா என்ற பெயரில் உலகிற்கு சுற்றி காண்பிக்க போகிறதா? முதலில் சோனியாவை, அப்போதைய உள்துறை செயலளர், ஐநா சபை தலைவர், அதனுடைய செயலாளர் விஜய் நம்பியார் அவர்களுக்கு சுற்றி காண்பிக்கட்டும்.லட்ச கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட, அந்த நரகத்தை ரசித்து பார்க்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
29-மார்-201312:42:17 IST Report Abuse
amukkusaamy ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டப்படக்கூடாது கட்டினால் இலங்கை அழியும் என்று சொன்னார்களே நம் இனத்திற்குத்தான் அழிவு என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
solainathan - Neyveli,இந்தியா
29-மார்-201312:41:54 IST Report Abuse
solainathan இலங்கையின் இந்த போக்கு சரியில்லை. தனது நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்கும் கொள்கையும் சட்டமும் வேண்டும் என இலங்கை என்று நினைக்கிறதோ அதுவரை இலங்கை பிரச்சனை தீரபோவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
29-மார்-201311:50:29 IST Report Abuse
Pannadai Pandian இந்த இன்ப சுற்றுலாவில் காங்கிரஸ் + திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா ???
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
29-மார்-201310:48:44 IST Report Abuse
K.SURIYANARAYANAN கண்டிப்பாக இலங்கையின் கொட்டம் ஒருநாள் அடங்கும். அன்று ஈழம் பிறக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
29-மார்-201310:47:33 IST Report Abuse
Nandu தமிழர்கள் பண்பட்டவர்கள். உலகத்தார் அனைவரை விடவும் அறிவு முதிர்ச்சி பெற்றிருந்த காலத்திலும் விஞ்ஞானத்தை மட்டும் தமிழர்கள் தொட்டதில்லை. நெல்லை உணவுப்பயிராக கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள். விவசாயத்தை உலகத்திற்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இன்னும் இயற்கையை சார்ந்த எத்தனையோ கொடைகள் தமிழர்கள் உலகுக்கு தந்தது. தமிழர்கள் மதங்களை கடவுள்களை கண்டுபிடிக்க வில்லை, ஆனால் மதங்கள் போதிப்பதை எல்லாம் ஒரு மொழி போதிக்கும் என்றால் அது உலகில் தமிழ் மட்டுமே. அதனால் தான் தமிழ் வெறும் மொழிமட்டும் அல்ல என ஆன்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் இயற்கையை புறந்தள்ளும் அறிவியலை தமிழர்கள் ஒருபோதும் தொட்டதில்லை. தமிழன் ஒரு போதும் பிறரை அழிக்க நினைக்க மாட்டான். அறிவிலும் பண்பிலும் தமிழன் எப்போதும் வுயர்ந்தே விளங்குவான்.
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
29-மார்-201310:20:53 IST Report Abuse
saeikkilaar தமிழன் என்றால் ராவணனின் வாரிசுகள் இராவணன் அழிக்க பட வேண்டியவன், அதை தான் செய்தோம். என்று அறிவிப்பு வரும் காலம் தொலைவில் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை