ரூ.2,000 கோடி கேட்டு "நோக்கியா'வுக்கு நோட்டீஸ்:வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை| Dinamalar

ரூ.2,000 கோடி கேட்டு "நோக்கியா'வுக்கு நோட்டீஸ்:வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூ.2,000 கோடி கேட்டு "நோக்கியா'வுக்கு நோட்டீஸ்:வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி:வரி ஏய்ப்பு செய்ததாக, நோக்கியா மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான, பின்னிஷ் மொபைல் போன் நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய்க்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இதை எதிர்த்து, நோக்கியா நிறுவனம் தொடர்ந்த மனுவை ஏற்று, டில்லி ஐகோர்ட் இடைக் கால தடை விதித்துள்ளது.


மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம், 2,000 கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.


சோதனை:இதன் அடிப்படையில், கடந்த ஜனவரியில், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதன்பின், மேற்கொண்ட ஆய்வில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியானது. அந்தத் தொகையை, ஒரு வாரத்திற்குள் செலுத்தும் படி, வருமான வரித்துறை சார்பில், கடந்த, 21ம் தேதி நோட்டீஸ் அனுப்பப் பட்டது.


தடை:இந்த நோட்டீசை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில், நோக்கியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்ற ஐகோர்ட், வருமான வரித் துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தது.ஒரு வார காலத்திற்குள், 2,000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்பது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.


இது தொடர்பாக, பதில் மனுவை தாக்கல் செய்யும்படி, வருமான வரித்துறைக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பதில் மனு தாக்கலுக்கு பின், ஐகோர்ட் விசாரித்து முடிவு செய்யும்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை