மாவோயிஸ்ட்கள் மோதல் ஜார்க்கண்டில் 10 பேர் பலி| Dinamalar

மாவோயிஸ்ட்கள் மோதல் ஜார்க்கண்டில் 10 பேர் பலி

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஞ்சி:ஜார்க்கண்டில், மாவோயிஸ்ட்கள் இடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பினர் பெருமளவில் செயல்பட்டு வருகின்றனர். 2002ல், இந்த அமைப்பினரிடையே, கொள்கை ரீதியான விஷயங்களில், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், இந்த அமைப்பிலிருந்து பிரிந்து வெளியேறிய ஒரு பிரிவினர், "திருதியா பிரஸ்துதி கமிட்டி' (டி.பி.சி.) என்ற புதிய அமைப்பை துவக்கினர்.


அப்போது, தங்களின் முதல் எதிரி, மாவோயிஸ்ட்களே என, அறிவித்த அவர்கள், பல மாதங்களாக, மாவோயிஸ்ட்களுடன் தீவிர சண்டையிலும் ஈடுபட்டு வந்தனர். ஜார்க்கண்டில், மூன்று மாவட்டங்களில், டி.பி.சி.,யினரின் ஆதிக்கம் உள்ளது.இந்நிலையில், சதாரா மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தில், மாவோயிஸ்ட்கள் மற்றும் டி.பி.சி., அமைப்பினரிடையே, நேற்று முன் தினம் இரவு, கடும் சண்டை நிகழ்ந்தது. நேற்று அதிகாலை வரை நீடித்த சண்டையில், மாவோயிஸ்ட்கள், 10 பேர் கொல்லப்பட்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை