கோடீஸ்வரர் கொலை மனைவியிடம் விசாரணை| Dinamalar

கோடீஸ்வரர் கொலை மனைவியிடம் விசாரணை

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:டில்லியில், கோடீஸ்வர அரசியல் பிரமுகர், தீபக் பரத்வாஜ் கொலை வழக்கில், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


கடந்த, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, மாயாவதியின் பகுஜன் சமாஜ் சார்பில், தெற்கு டில்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், தீபக் பரத்வாஜ்.இரண்டு நாட்களுக்கு முன், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், தேர்தலின் போது, தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு, 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.கொலை நடந்து, மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. மனைவியை பிரிந்து, தனித்து வாழ்ந்த பரத்வாஜ் கொலையில், அவர் மனைவி ரமேஷ்குமாரிக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.நேற்று அவரிடம், டில்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகள் என, சந்தேகிக்கப்படும், நான்கு பேரையும் பிடித்து வைத்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை