பார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல் வராது: மன்மோகன் உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்றாலும், நிச்சயம் தனது அரசு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, நாடு திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி அரசு பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில கூட்டணி கட்சிகள் தற்போதைய அரசாங்கம் நிலையில்லாதது என்பதை அவ்வப்போது உணர்த்தி வருகின்றன. அத்தகைய கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. எனினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்லிமென்டிற்கான தேர்தல் அதற்கு உரிய காலத்தில் நடைபெறும். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், தங்களுக்கு புதிய சீர்திருத்தங்களை பார்லிமென்டில் கொண்டு வருவதில் சிக்கல்கள் இருந்த போதிலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கைவிடப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார்.

வரும் 2014ம் ஆண்டு மத்தியில் பார்லிமென்டிற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முக்கிய இரு கூட்டணி கட்சிகளான தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இழந்துள்ளது. இந்நிலையில், தற்போது அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் தொடர்ந்து அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் அவர், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து யோசித்து வருவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu - West Bengal,இந்தியா
29-மார்-201316:42:00 IST Report Abuse
Babu மக்கள் வரி பணம்...
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:23:45 IST Report Abuse
K Sanckar முலாயம் சிங்க வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் ஆட்சி பணால். இதில் என்ன மார் தட்டல்
Rate this:
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-201312:16:12 IST Report Abuse
samy வரும் சந்தையினரு க்கு காங்கிரஸ் ஆட்சி ஏன் கவிழ்ந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். இதற்காவது காங்கிரஸ் யை 05 வருடம் முழுமையாக ஆட்சி செய்ய விட கூடாது
Rate this:
Share this comment
Cancel
P.N. Alagarasu - Chennai,இந்தியா
29-மார்-201311:15:47 IST Report Abuse
P.N. Alagarasu நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்ககூடாது என்பதில் மன்மோகன் உறுதியாக இருக்கிறார் போல மன்மோகன், சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகியோர்தான் இன்றைய பொருளாதார சிக்கலுக்கு மூலகாரணம். தேர்தல் வந்தால் இந்த மூன்று பேருக்கும் டெபோசிட்டே போவணும் மக்களை அலட்சியமாக என்னும் இவர்கள் தேர்தலுக்கு பின்னால் காணாமல் போவணும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் ஆசையும்.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-மார்-201310:21:47 IST Report Abuse
mirudan ஒரு கருணா போனால் நூறு கருணாக்கள் வரிசை கட்டி நிற்கும் பொழுது நம்ம கைபுள்ளை கலங்க தேவை இல்லை முழுசா அயுந்து வருடங்கள் அசைக்க முடியாத டம்மி பிரதமராக காலத்தை கழித்து விடுவார்
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
29-மார்-201309:59:57 IST Report Abuse
Wilsonsam Sp பாவம் இவரே ஒதுகொன்றுவிட்டார் தேர்தல் விரைவில் வரும் என்று அது இவரின் பயத்திலேயே தெரிது என்னுடைய ஆசை நீங்கள் 10 ஆண்டுகாலம் செய்த இந்த பொன்னான ஆட்சி மீண்டும் இந்த ஜென்மத்தில் வரகூடாது
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
29-மார்-201309:56:10 IST Report Abuse
Ambika. K டீல் முடிஞ்சாச்சு . எந்த கூட்டணி கட்சி டீலை மீறினா ED , சிபிஐ தன கடமைய செய்யும். தேவுடா இந்த கூட்டணில ஒரு கட்சி கூட ஒழுன்ன்கனதில்லையா எல்லாமே ஊழல் கட்சி தானா. எங்களை காப்பாத்துடஅப்பா தேவுடா.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
29-மார்-201309:09:04 IST Report Abuse
Tamilan மக்களுக்கு விரோதமாக செயல்படும் ஐ.மு கூட்டணி கவிழபோவது உறுதி........
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
29-மார்-201308:49:18 IST Report Abuse
Linux பொருளாதார சீர்திருத்தம், பொருளாதார சீர்திருத்தம்ன்னு சொல்லி சொல்லியே எங்க கோவணத்தையும் உருவிட்டீன்களே இன்னும் எங்க கிட்ட என்ன மிச்சம் இருக்குன்னு இந்த நடவடிக்கை... அதிக கோடீஸ்வரர்களை உருவாக்க துடிக்கிற நீங்க, அது ஏழை மக்களை பாதிக்கும்ன்னு ஏன் நெனைக்க தோனல... நீங்க போடுற திட்டம் எல்லாமே பணக்காரண மட்டும் தான் வாழவைக்கும், அதனால வர்ற விளைவு,,, ஏழை, நடுத்தர வர்க்கம் இன்று நரகத்தில்...
Rate this:
Share this comment
Cancel
Lingasaravanan - Surandai  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201307:51:45 IST Report Abuse
Lingasaravanan உங்க கிட்ட இன்னும் மக்கள் எதி்ர்பார்கிறார்கள் ஊழலை நடத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்