ரத்த தானம் பெற்ற சிறுமிக்கு எச்.ஐ.வி., பாதித்ததால் அதிர்ச்சி| Dinamalar

ரத்த தானம் பெற்ற சிறுமிக்கு எச்.ஐ.வி., பாதித்ததால் அதிர்ச்சி

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோழிக்கோடு:"தலசீமியா' நோய்க்கு சிகிச்சைப் பெற்ற போது, பலரிடமிருந்து ரத்தம் தானமாக பெற்ற சிறுமிக்கு, எச்.ஐ.வி., பாதித்துள்ளது.


கேரள, வயநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு, ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் குறைவதால் ஏற்படும், "தலசீமியா' நோய், 2 வயதில் பாதித்தது. அதனால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள். தற்போது, 8 வயதான, அந்த சிறுமி, கோழிக்கோடு உட்பட, சில மருத்துவமனைகளில், தலசீமியாவுக்காக, சிகிச்சை பெற்ற போது, பலரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு, அவளுக்கு செலுத்தப்பட்டது.


சமீபத்தில், ஒரு முறை அப்படி ரத்தம் செலுத்தும் போது, உடம்பில் வலி ஏற்படுவதாக தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, சிறுமிக்கு, எச்.ஐ.வி., பாதிப்புள்ளது தெரியவந்தது.இதனால், சிறுமியின் பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்ததோடு, மிகுந்த கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை