E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
செம்மரம் வெட்டுவோருடன்திருப்பதி போலீசார் மோதல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மார்
2013
01:19

நகரி:திருப்பதியை அடுத்த, தும்மசேனுபள்ளி காட்டுப் பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்தும், தமிழக கூலித் தொழிலாளர்கள் மற்றும் போலீசார் இடையே, மோதல் ஏற்பட்டது.


சித்தூர் மாவட்டம், தும்மசேனுபள்ளி காட்டுப் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, 300 பேர், செம்மரங்களை வெட்டுவதாக, திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன், திருப்பதி டி.எஸ்.பி., மற்றும், 15 போலீசார், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, செம்மரங்களை வெட்டுவோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


போலீசாரை கண்டதும், செம்மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளர்கள், 300 பேர், ஆவேசமடைந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். உஷார் அடைந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், உயிருக்கு பயந்த தொழிலாளர்கள், காட்டுக்குள் ஓடி மறைந்தனர்.போலீசார், பல குழுக்களாக பிரிந்து, அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த, 40, செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.