E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013,01:19 IST
கருத்துகள் (1)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நாகப்பட்டினம்: தமிழகத்தில், இலங்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடலில், மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், பெரும்பாலான மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை, துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


தமிழகத்தில், இலங்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கடந்த பிப்., மாதம் முதல், இதுவரை, 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கை கடற்படையினரின், கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி, ஏராளமான மீன்பிடி உபகரணங்களை இழந்து, பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த, 6ம் தேதி, இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில், காரைக்கால், கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த, செண்பகம்,36 என்ற மீனவருக்கு, இடது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. 20ம் தேதி அதிகாலை, பைபர் படகில் வேதாரண்யம் தென்கிழக்கே, மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை

கடற்படையினரால், நம்பியார் நகர் மீனவர்கள் நான்கு பேர் அரிவாளால், கொடூரமாக வெட்டப்பட்டனர். இச்சம்பவங்களால், அதிர்ச்சியடைந்த, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள், மத்திய அரசையும், இலங்கை கடற்படையையும் கண்டித்து, 20ம் தேதியில் இருந்து, 26ம் தேதி வரை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், வங்கக்கடலில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்., 15ம் தேதி முதல், மே மாதம் 30ம் தேதி வரை, கடலில், விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க அரசு விதித்துள்ள, தடைக்காலம் நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே, கடலில் மீன்பிடிக்க முடியும் என்பதால், வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு, கடலில் மீன் பிடிக்க செல்லலாம் என, மீனவர்கள் முடிவெடுத்தனர். இருப்பினும், 26ம் தேதி, நாகை துறைமுகத்தில் இருந்து, 100க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே கடலில் மீன்பிடிக்க சென்றன. இலங்கை கடற்படையின் தாக்குதல்

Advertisement

பீதியில் இருந்து, பெரும்பாலான மீனவர்கள் விடுபடாததால், ஏராளமான விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது: ஏப்ரலில், தடைக்காலம் துவங்கும் என்பதோடு, தற்போது, கடலின் வெள்ள நீரோட்டம், மீன்பிடிப்புக்கு சாதகமான சீதோஷ்ண நிலை காரணமாக, மார்ச் மாதத்தில், மீனவர்கள் மீன்பிடிப்பில் தீவிரமாக ஈடுபடுவர். இப்போது கிடைக்கும் வருமானத்தை வைத்து தான், மீனவ கூலித் தொழிலாளர்கள், 45 நாட்கள் விடுமுறையை ஓட்டுவர்.

ஆனால், தற்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக, கடல் பகுதியில், இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரிக்கும் என்பது உண்மை. சாதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிடம் இலங்கை தோற்று விட்டாலே, இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தேடி வந்து தாக்குவர். தற்போதைய சூழலில், மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லை என்பதால், மீன்பிடிக்க செல்வதற்கு அச்சப்பட்டு, படகுகளை கட்டிப் போட்டுள்ளோம். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
30-மார்-201300:09:15 IST Report Abuse
திருமகள்கேள்வன் இனி மத்திய அரசை நம்பி இருப்பதில் எந்த பயனும் இல்லை... தமிழக அரசு மீனவர்களை பாதுக்காக்க தமிழக காவல் துறையில் சிறப்பு கடல் காவல் படை பிரிவு ஒன்றை உடனே ஏற்படுத்த வேண்டும்..இக்காவல் படை நம் மீனவர்களின் உடமைகளையும் உயிரையும் பாதுகாக்க கடலில் ரோந்து செல்ல வேண்டும்...
Rate this:
0 members
0 members
54 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.