E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கோவை மாநகராட்சி கவுன்சிலர் மீது பாய்ந்தது பாலியல் புகார் வழக்கு :முன்ஜாமின் @காரி கோர்ட்டில் மனு தாக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மார்
2013
03:05

கோவை:கோவை மாநகராட்சி கவுன்சிலர் செந்தில் மீது பாலியியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். அ.தி.மு.க., விலிருந்து கழற்றிவிடப்பட்டதால் தனித்துவிடப்பட்ட கவுன்சிலர் முன் ஜாமின் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதன் விபரமானது : அவிநாசி ( தனி ) தொகுதியின் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மறைந்த இளங்கோவின் இளையமகன் கோவை சொக்கம்புதூர் செந்தில்; இவரது தந்தை தி.மு.க., வில் எம்.எல்.ஏ., வாக இருந்த போதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., வில் இணைந்தார். குறுகிய காலத்தில் கட்சி வட்டாரத்தில் பிரபலமானார்.
இதனால், கடந்த மாநகராட்சி தேர்தலில் 21 வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பரபரப்புக்கு பெயர் பெற்ற சொக்கம்புதூர் செந்தில், 38 . இவர் மீது கல்லூரி மாணவி கொடுத்த பாலியில் புகாரையடுத்து, சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். நடந்தது என்ன ? கோவை காந்திபுரத்தில்உள்ள தனியார் இன்ஜி., கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன் கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
கோவை மாநகராட் 21வது வார்டு கவுன்சிலர் சொக்கம்புதூர் செந்தில், கடந்த 2012 நவ., மாதம் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். என் வாழ்க்கையை சீரழித்த கவுன்சிலர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் மாணவி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தகவல் தெரிந்ததும், இவ்வழக்கிலிருந்து தப்பிக்க கவுன்சிலர் செந்தில் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், இத்தகவல் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றது. இதையடுத்துதான் செந்திலை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.இதனால், செந்திலுக்கு உதவி செய்ய அ.தி.மு.க., வினர் கைவிரித்தனர். இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், அனைத்து மகளிர்(மத்திய) போலீசார் அதிரடியாக களம் இறங்கினர். கவுன்சிலர் செந்தில் மீது பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பில், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இம்மனுமீதான விசாரணை ஏப்.,2ம் தேதி நடக்கிறது. இச்சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.