மனைவி கொலைகணவனுக்கு10 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலைகணவனுக்கு10 ஆண்டு சிறை

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:கோவை, நீலிக்கோனாம்பாளையம், மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 40; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொங்கியம்மாள், 32. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பொங்கியம்மாள் கள்ளக்காதலனுடன் மாயமானார். ஐந்து ஆண்டுக்குப்பின், தனது மனைவி, அவரது சகோதரி ரெங்கநாயகி வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த சுப்பிரமணியன் ஆத்திரம் அடைந்தார். கடந்த 2011, ஜூலை 12ல் ரெங்கநாயகி வீட்டுக்கு சென்றார்.இதையறிந்த பொங்கியம்மாள் தப்பியோடினார். சுப்பிரமணியன் விரட்டிச் சென்று, தாக்கி கொன்றார். சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து, சுப்பிரமணியனை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சிவகுமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்புக்கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை