'We will have to wait and watch': Patnaik on a Third Front | மூன்றாவது அணிக்கு முலாயம் முயற்சி வெற்றி பெறுமா?: பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் நவீன்பட்நாயக்| Dinamalar

மூன்றாவது அணிக்கு முலாயம் முயற்சி வெற்றி பெறுமா?: பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் நவீன்பட்நாயக்

Added : மார் 29, 2013 | கருத்துகள் (5)
Advertisement
மூன்றாவது அணிக்கு முலாயம் முயற்சி வெற்றி பெறுமா?: பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் நவீன்பட்நாயக்

புதுடில்லி: மூன்றாவது அணி உருவாக்க முலாயம் எடுக்கும் முயற்சிகளை பொறுத்திருந்து பார்ப்போம் என ஒடிசா முதல்வர் கூறினார். மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை தி.மு.க. விலக்கி கொண்டதால், மன்மோகன் அரசு கிட்டத்தட்ட மைனாரிட்டி அரசானது. எனினும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவுஅளித்து வருகின்றன.
மத்தியில் ஆளும் காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசினை சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சி்ங் கடுமையாக விமர்சித்து வருகிறார். எந்நேரமும் அவர் ஆதரவினை விலக்கி கொள்வார் என பேச்சு அடிபடுகிறது. மேலும் 2014-ம்ஆண்டு லோக்சபா தேர்தலில் மூன்றாவதுஅணிக்கு அடித்தளம் அமைக்க முயற்சித்து வருவதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மூன்றாவது அணிக்கு ஆதரவு கரம் நீட்ட முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள் கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவர் நவீன்பட்நாயக் முதல்வராக உள்ளார். கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, அ.தி.மு.க. , பிஜூ ஜனதா தள் ஆகிய கட்சிகள் மூன்றாவது அணி அமைத்து , முன்னாள் லோக்சபா சபநாயகர் சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து மற்ற மாநில கட்சிகள் ஆதரவு தர கோரின. தற்போது அரசியல் சூழல் மாறி வரும் நிலையில், மத்திய அரசில் அங்கம் வகித்த பலம் பொருந்திய கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்., தி.மு.க. ஆகிய விலகிவிட்டதால், மன்மோகன்‌ சிங் அரசு எந்நேரமும் ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முலாயம் மூன்றாவதுஅணிக்கு காய்நகர்த்தி வருகிறார்.இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் நேற்று மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத்தை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், மூன்றாவது அணிக்கு முலாயம் மேற்கொள்ளும் முயற்சியினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவரது முயற்சி எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதனை பொறுத்து பிஜூ ஜனதா தளம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
இது குறித்து மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், முலாயமின் முயற்சி ஒரு போதும் நிறைவேறாது. இது போன்று பல முறை மூன்றாவது அணி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை கருவிலேயே அழி்க்கப்பட்டன. அது போன்ற நிலமை தான் ஏற்படும். காங். கூட்டணியில் சேர மாநில கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:25:16 IST Report Abuse
K Sanckar மூன்றாம் அணி எல்லாம் பகற்கனவு தான். முதலில் பட்நாயக் மறுபடியும் அவர் மாநிலத்தில் மாநிலத்தில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201310:37:46 IST Report Abuse
K.Sugavanam இன்னும் பங்கு பிரிக்காமலா இருப்பார்கள்.முக்கிய பணம் காய்ச்சி இலாக்காக்கள் தவிர மற்றவைதான் ஏலம் போடுவார்கள்..அதனால போயி மொதல்ல எம் பி க்களை தேத்துங்க..அப்புறம் வடையில் பங்கு கேக்கலா.தமிழ் நாட்டிலிருந்தும் கனமான நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.அதனால் சென்னையில கூட்டம் நடக்க போகுதாம்..எல்லா தலைவர்களும் இங்கே கூடி பேசி தங்களுக்கு கட்டுபடி ஆனா கை கொப்பான்கலாம்இதுல ரெண்டு எம்,ஒரு கே,அப்புறம் மனவாடு.செவப்புன்னு கடும் போட்டியாம்..அனேகமா வயதில் மூத்த மொழிதலைவர் மண்ணு சிங்கு எடத்துக்கு வலை விரிச்சு இருக்காராம்..சுழற்சி முறைக்கும் திட்டமாம்..
Rate this:
Share this comment
Cancel
vasanth - chennai  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201310:36:25 IST Report Abuse
vasanth மூன்றாவது அணி அமைந்தால் யார் பிரதமர் மூன்றாவது அணி அமைக ஆசை படும் அனைவறும் பிரதமர் ஆகும் ஆசையில் இருக்காங்க எனவே மூனறாவது அணி அமைய வாய்புகள் மிகமிக குறைவு
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-மார்-201310:30:57 IST Report Abuse
mirudan இவரை நம்பி மோசம் போய்விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
29-மார்-201307:40:42 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி உங்களுக்கு என்ன துறை வேண்டும் என்று இப்போதே துண்டு போட்டு இடம் பிடித்து கொள்ளுங்கள். 2G மாதிரி முதலில் வருபவருக்கே முன்னுரிமை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை