Pistorius allowed to leave S Africa with conditions | வெளிநாடு செல்ல பிஸ்டோரியஸூக்கு கோர்ட் நிபந்தனை| Dinamalar

வெளிநாடு செல்ல பிஸ்டோரியஸூக்கு கோர்ட் நிபந்தனை

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பிரிட்டோரியா :காதலியை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள ஆஸ்கர் பிஸ்டோரியஸூக்கு வெளிநாடு செல்ல கோர்ட் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. தென்ஆப்ரிக்காவைச்சேர்ந்த ஓட்டபந்தய வீரர் ஆஸ்கர்பிஸ்டோரிஸ் (28), பிளேடு ரன்னர்என அழைக்கப்படும் .இவர் ஒலிம்பிக், பாராலிம்பிக் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று தனது வீட்டிற்கு திடீரென வந்த ரீவாஸ்டீன்கோம்பை, சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டார். கோர்ட் இவரை கொலை குற்றவாளியாக அறிவித்துள்ளது.தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு வடக்கு கவுன்டாக் கோர்ட்டில் மனு செய்தார். நீதிபதி பெர்ட்பாம், விசாரித்து, வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். மேலும் வெளிநாடு செல்ல நேரிட்டால் ஒரு வாரத்திற்குள் கோர்ட்டிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை