E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநிலங்கள்: மார்ச் 31 வரை காலகெடு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
08:24
பதிவு செய்த நாள்
மார் 29,2013 08:19

புதுடில்லி : கல்வி உரிமை சட்டத்தை(ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன.

மத்திய அரசு உத்தரவு :



2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. காலக்‌கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் அச்சட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளன. கல்வி உரிமை சட்ட விதிகளின்படி போதிய மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம் இருக்க வேண்டும், போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ள வேலை நாட்கள் மற்றும் வேலை நேரம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் குறைபாடு :



மத்திய அரசு 52 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கி இருந்தும் இன்னும் 11 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் திறமையற்ற, முறையான பயிற்சி இல்லாத 8.6 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்ற ஆசிரியர்கள் மேற்குவங்கத்தில் 1.97 லட்சம் பேரும், பீகாரில் 1.86 லட்சம் பேரும், ஜார்கண்ட்டில் 77,000 பேரும் உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று 94 சதவீதம் பள்ளிகள் குடிநீர் வசதி இல்லாமலும், 64 சதவீதம் பள்ளிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி கழிப்பறை இல்லாமலும் உள்ளன.

மாநிலங்கள் கோரிக்கை :



போதிய வளங்கள் இல்லாததாலும், அரசியல் தலையீடுகளாலும் கல்வி உரிமை சட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாததால் காலக்கெடுவை மேலும் நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தரமற்ற கல்வி இல்லாததால் திறமையற்றவர்கள் வேறுவழியின்றி ஒவ்வொரு ஆண்டும் பணி அமர்த்தப்பட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஏஎஸ்இஆர் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின்படி, அதிக அளவிலான குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இந்த இலக்கை எட்டி விட்டதாகவும், மத்திய அரசின் சட்டத்தின் படி கட்டுமான தேவைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், 4 முதல் 5 கோடி மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.